Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | ஈதர் தயாரிக்கும் முறைகள்
   Posted On :  05.08.2022 07:59 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

ஈதர் தயாரிக்கும் முறைகள்

1. ஆல்கஹாலின் மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட நீர் நீக்கம் 2. வில்லியம்சன் தொகுப்பு முறை

ஈதர் தயாரிக்கும் முறைகள் 

1. ஆல்கஹாலின் மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட நீர் நீக்கம்

443K வெப்பநிலையில் எத்தனால் அடர் H2SO4 உடன்வினைப்படும் போது நீர் நீக்கம் நடைபெற்று ஈத்தீன் கிடைக்கிறது என்பதை நாம் ஏற்கனவே கற்றிறிந்தோம். அதேபோல் 413K வெப்பநிலையில், நீர்நீக்கத்திற்கு பதிலாக பதிலீட்டு வினைகள் நடைபெற்று ஈதர்கள் நடைபெறுகிறது.


வினைவழிமுறை

இவ்வினை கலப்பின ஈதர்கள் விட எளிய ஈதர்களை தயாரிக்க சிறந்த முறையாகும். இரண்டு வெவ்வேறு ஆல்கஹால்களை சேர்க்கும் போது, வெவ்வேறு ஈதர்களின் கலவை உருவாகிறது. இதனை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்.



2. வில்லியம்சன் தொகுப்பு முறை

ஆல்கைல் ஹாலைடை ஆல்கஹால் கலந்த சோடியம் ஆல்காக்ஸைடு உடன் வினைப்படுத்தும் போது அதனோடு தொடர்புடைய ஈதர் உருவாகிறது. இது SN2 வினைவழி முறைக்கு உட்படுகிறது.

CH3 -ONa + Br-C2H      ---------→ CH3 -O-C2H+ NaBr

வினைவழிமுறை


ஆல்கைல் ஹாலைடு SN2 வினைக்கு எளிதில் உட்படும் என நமக்கு தெரியும். எனவே ஓரிணைய ஆல்கைல் மற்றும் மூவிணைய ஆல்கைல் கொண்ட கலப்பின ஈதர் தயாரிக்க மூவிணைய ஆல்காக்சைடும் ஓரிணைய ஆல்கைல் ஹேலைடும் எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஓரிணைய ஆல்காக்சைடும் மூவிணைய ஆல்கைல் ஹேலைடும் எடுப்போமேயானால் மூவிணைய ஆல்கஹால் பதிலீட்டு வினைக்கு பதிலாக நீக்கல் வினையில் ஈடுபட்டு ஆல்கீனை உருவாக்கும்.


மூவிணைய பியூட்டைல் புரோமைடு மற்றும் சோடியம் மெத்தாக்சைடு பயன்படுத்தும்போது, - மீத்தைல் புரப் - 1- ஈன் உருவாகிறது.



ஆல்கஹாலின் மெத்திலேற்ற வினை

புளுரோபோரிக் அமில வினையூக்கி முன்னிலையில் ஆல்கஹால் டயசோ மீத்தேனுடன் வினைப்பட்டு எத்தில் மெத்தில் ஈதரை தருகிறது.

CH3 -CH2 -OH+CH2N2 -----HBF4→ CH3 -CH2 -O-CH3+N2



தன் மதிப்பீடு 

1. கீழ்கண்ட எந்த வினை 1-மீத்தாக்சி -4-நைட்ரோபென்சீனை தருகிறது.

. 4 - நைட்ரோ - 1 புரோமோபென்சீன் + சோடியம் மீத்தாக்சைடு

. 4 – நைட்ரோசோடியம் பீனாக்சைடு + புரோமோமீத்தேன் 

2. அமில வலிமையின் அடிப்படையில் ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக. புரப்பன்- 1 - ஆல், 2, 4, 6 - ட்ரைநைட்ரோ பீனால். 3 - நைட்ரோபீனால், 3, 5 - டைநைட்ரோபீனால், பீனால், 4- மெத்தில்பீனால்.


12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Preparation of ethers in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : ஈதர் தயாரிக்கும் முறைகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்