Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | பட்டகத் திசைக் காட்டி

அளவாய்வு செய்தல் - புவியியல் - பட்டகத் திசைக் காட்டி | 12th Geography : Chapter 9 : Surveying

   Posted On :  27.07.2022 06:16 pm

12 வது புவியியல் : அலகு 9 : அளவாய்வு செய்தல்

பட்டகத் திசைக் காட்டி

பட்டகத் திசைக்காட்டி என்பது அலுமினிய வளையத்துடன் கூடிய 30 நிமிட இடைவெளியில் குறிக்கப்பட்டு இருக்கும் கடினமான காந்த ஊசியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு எளிய கருவி ஆகும்.

பட்டகத் திசைக் காட்டி

பட்டகத் திசைக்காட்டி என்பது அலுமினிய வளையத்துடன் கூடிய 30 நிமிட இடைவெளியில் குறிக்கப்பட்டு இருக்கும் கடினமான காந்த ஊசியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு எளிய கருவி ஆகும். இந்த பட்டகத் திசைக்காட்டி வெளிப்படையான கண்ணாடி உறையுடன்கூடிய ஒரு வட்ட வடிவ உலோக பெட்டியில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடி உறையின் மேல் பகுதி ஒரு உலோக மூடியால் மூடப்பட்டிருக்கும். வட்ட வடிவ பெட்டியின் ஒரு பக்கத்தில் கண்ணால் கூர்ந்து கவனிக்கக்கூடிய திசைக்காட்சி (hinged cye-vane) முப்பட்டகத்துடன் செங்குத்து மற்றும்கிடைமட்டமாக பிரதிபலிக்ககூடிய வகையில் பொருத்தப்பட்டிருக்கும். அலுமினிய வளையத்தில் காட்டும் கோண அளவு முப்பட்டகத்தின் மறுபகுதியில் பெரிதாக பிரதிபலிக்கும். நேரடியான சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து விடுபட இரு நிறங்களாலான சூரியக் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும்.

வட்ட வடிவ பெட்டியின் மறுபக்கத்தில், ஒரு கூர்மையான உலோகத்தை உள்ளடக்கிய கண்ணால் உற்று நோக்கக்கூடிய திசைக்காட்டியின் மையப்பகுதியில் குதிரையின் முடி கொண்ட சட்டம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த குதிரையின் முடி என்பது உண்மையில் பட்டுநூல் அல்லது உலோக கம்பியாக இருக்கலாம். திசைக்காட்டியின் வெளிப்புறத்தில்திருகக்கூடிய கண்ணாடி பொருத்தப்பட்டு நாம் பார்க்கும் பொருளின் பிரதிபலிப்பு மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதற்கு ஏற்ப சரி செய்து கொள்ளலாம்.

இதில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வட்ட வடிவ வளையத்தை நிறுத்துவதற்கு முள் அல்லது குமிழி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உலோக பெட்டியின் கீழ்பகுதி திருகுடன் காணப்படுகிறது. இது ஒரு பந்துடன் பொருத்தப்பட்டுள்ள மற்றொரு திருகின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு நகர்த்தக்கூடிய தாங்கியில் பொருத்தப்பட்டிருக்கும்.


 

பட்டகத் திசைக் காட்டியின் பயன்கள்

• வடக்கு காந்தப் புலக் கோட்டுக் குறிப்புடன் கூடிய கிடைமட்டக் கோணத்தை அளக்கப் பயன்படுகிறது.

• கட்டிடத்தின் மூலைகள், சாலை வளைவுகள் போன்றவை பட்டகத் திசைக்காட்டியில் நேரடியாக அளவிடப்படுகிறது.

• வளைவு நெலிவுகளுடன் கூடிய கால்வாய், பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதன் அளவை தீர்மானிக்க பட்டகத் திசைக்காட்டி பொருத்தமானதாக உள்ளது.

 

பயிற்சி

பட்டக திசைகாட்டியை உற்றுநோக்கி அதன் ஒவ்வொரு பாகங்களின் பெயரையும் செயல்பாடுகளையும் குறிக்கவும்.

Tags : Surveying | Geography அளவாய்வு செய்தல் - புவியியல்.
12th Geography : Chapter 9 : Surveying : Prismatic Compass Surveying | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 9 : அளவாய்வு செய்தல் : பட்டகத் திசைக் காட்டி - அளவாய்வு செய்தல் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 9 : அளவாய்வு செய்தல்