Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | சமஉயரக் கோடுகள்

புவியியல் - சமஉயரக் கோடுகள் | 11th Geography : Chapter 10 : Representation of Relief Features and Climatic Data

   Posted On :  16.05.2022 01:30 am

11 வது புவியியல் : அலகு 10 : நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள்

சமஉயரக் கோடுகள்

சமஉயரக் கோடுகள் என்பவை பல்வேறு நிலத்தோற்றத்தை காட்ட பயன்படுத்தப்படும் உலகளாவிய முறையாகும்.

சமஉயரக் கோடுகள் (Contours)

சமஉயரக் கோடுகள் என்பவை பல்வேறு நிலத்தோற்றத்தை காட்ட பயன்படுத்தப்படும் உலகளாவிய முறையாகும். கடல் மட்டத்திலிருந்து உயரத்தை மீட்டர் அலகில் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. இம்முறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை தலநிலவரைப்படத்தில் காட்டப்படும் பிற அம்சங்களை இது மறைப்பதில்லை. சமஉயரக் கோடுகளைப் படிக்கும் திறன் உண்மையான நிலத்தோற்றத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. சமஉயரக் கோடுகளின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதன் மூலம் அத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 

அவை பின்வருமாறு

1. பழுப்பு நிறத்தில் சம இடைவெளிகள் விட்டு சமஉயரக் கோடுகள் வரையப்படுகின்றன. இவை பொதுவாக 1:50,000 அளவையிலுள்ள தலபடத்தில் 20மீ இடைவெளியிலும் 1:250,000 அளவையிலுள்ள தலபடத்தில் 100 மீட்டர் இடைவெளியிலும் வரையப்படுகிறது.

2. ஒவ்வொரு ஐந்தாவது கோடும் அடர்த்திமிகு பழுப்பு நிறத்தில் வரையப்பட்டு தலநிலப்பட வாசிப்பை மேம்படுத்துகிறது.

3. சமஉயரக் கோட்டின் மதிப்பு அக்கோட்டின் இடையிலும் மற்றும் தலநிலப்பட விளிம்பிலும் அச்சிடப்பட்டுள்ளது.

4. பொதுவாக சமஉயரக் கோடுகள் ஒன்றை ஒன்று குறிக்கிடாது. நீர் வீழ்ச்சி மற்றும் ஓங்கல் இருக்கும் இடத்தில் அவை ஒரே புள்ளியில் தொடும்படி வரையப் பட்டிருக்கும். தொங்கும் ஓங்கல் இருக்கும் இடத்தில் ஒன்றை ஒன்று குறிக்கிடும்படி காட்டப்பட்டிருக்கும்.

படம் 10.10 சமஉயரக் கோடுகளால் காட்டப்படும் பொதுவான அம்சங்களை வழங்குகிறது.

 

சம உயரக்கோடுகளிலிருந்து குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைதல்.

பின் வரும் படம் சம உயர கோடுகளால் காட்டப்பட்ட இரு அடுத்தடுத்த குன்றுகளை காட்டுகிறது.

 

அ) சம உயரக்கோடுகளால் காட்டப்பட்ட இரு அடுத்தடுத்த குன்றுகள்

சம உயரக் கோட்டின் குறுக்கு வெட்டு தோற்றத்தை ஒருவர் வரையும் போது தலப்படத்தில் குறிக்கப்பட்ட நிலத்தோற்றத்தை மிகத் துல்லியமாக அறிய இது உதவுகிறது.




 

தலப்படத்திலுள்ள உண்மையான நிலத்தோற்றத்தை அறிந்து கொள்ள சமஉயரக் கோடுகளிலிருந்து குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைதல் அவசியமாகிறது. தலப்படத்திலிருந்து ஒரு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த கோட்டில் சமஉயரக் கோடுகள் வெட்டும் இடங்களைக் குறிக்க வேண்டும். பின்பு தகுந்த செங்குத்து அளவைக்கு உயரத்திற்கேற்ப வெட்டும் இடங்களைப் புள்ளிகளாகக் குறித்து, அவற்றைக் கவனமாக இணைத்தால் நிலத்தோற்றத்தை அடையாளம் காணலாம். பொதுவாக நெருங்கிய இடைவெளியுடைய சமஉயரக் கோடுகள் வன்சரிவையும் அகன்ற இடைவெளியுடைய சமஉயரக் கோடுகள் மென்சரிவையும் குறிக்கும். படங்கள் 10.11 மற்றும் 10.12 குன்று மற்றும் பள்ளத்தாக்கையும் காட்டுகின்றன.

 

சம உயரக்கோடுகளிலிருந்து குறுக்கு வெட்டுத்தோற்றம் வரையும் முறை

1. குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைய வேண்டிய இரு புள்ளிகளை தலப்படத்தில் தேர்ந்தெடுக்கவும்.

2. குறுக்கு வெட்டுத்தோற்றம் வரைய வேண்டிய பகுதிக்கு AB என்ற கோடு வரையவும்.

3. சம உயரக்கோடுகளுக்கு கீழே 2.மி.மீ இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் கிடைமட்டக் கோடுகள் வரையவும்

 

 



4. அடித்தள கோட்டிற்கு மிகக் குறைந்த மதிப்பையும் கொடுக்கப்பட்ட படத்தின் இடைவெளிக்கேற்ப மற்ற கோடுகளுக்கு ஏறுமுகமாக உயரத்தின் மதிப்பினைக் குறிக்கவும்.

5. AB என்ற கோட்டில் சமஉயரக் கோடுகள் வெட்டும் புள்ளிகளிலிருந்து அதன் உயரத்திற்குரிய கிடைமட்ட கோட்டினைத் தொடும்படி செங்குத்துக்கோடுகள் வரையவும்.

6. கிடைமட்டக் கோட்டினைத் தொடும் அடையாளமாக அனைத்துப் புள்ளிகளையும் இணைத்த பின் உருவாகும் நிலத்தோற்றத்தை கண்டுபிடிக்கவும்.

7. அந்நிலத்தோற்றத்திற்கு ஏற்ப கருப்பு நிற வர்ணம் தீட்டி குறுக்கு வெட்டுப் படத்தை பூர்த்தி செய்க.

 

சம உயரக்கோடுகளால் காட்டப்படும் அம்சங்களை அடையாளம் காண பொதுவான அறிவுரைகள்

 குன்றுகள் 1000 மீட்டருக்குக் குறைவான மதிப்பில் வட்டவடிவ சம உயரக் கோடுகளால் காட்டப்படும்




• உட்புற சம உயரக்கோடு சுமாரான செவ்வக வடிவத்தில் 300 மீ முதல் 600 மீ வரை நெருக்கமான கோடுகளால் உயரமான நிலப்பகுதியான பீடபூமி காட்டப்படுகிறது. பீடபூமி மலைகளுக்கு நடுவில் இருந்தால் மலைகளுக்கு இடையிலான பீடபூமி என்றும் மலை அடிவாரத்தில் இருந்தால் மலையடிவார பீடபூமி என்றும் அழைக்கப்படுகிறது.

மலைத்தொடர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகரங்கள் கொண்ட நீண்ட நீள்வட்ட சம உயரக் கோட்டினால் காட்டப்படுகிறது. மலைத்தொடர்க்கு இடையில் அகலமாகவும் குறைந்த ஆழத்துடன் காணப்படும் பள்ளம் சேடல் (saddle) என்றும் ஆழத்துடன் காணப்படும் பள்ளம் சிறியக் கணவாய் (col) எனவும் அழைக்கப்படுகிறது.

• மலைப்பகுதிகளில் நதியின் செங்குத்து அரித்தலால் ஏற்படும் வன் சரிவுகளைக் கொண்ட நீளமான பள்ளத்தை பள்ளத்தாக்கு என்கிறோம். இதைக் குறிக்கும் சம உயரக் கோடுகள் நீரோட்டத்தின் குறுக்கே வளைந்திருக்கும் என்பதறிக. இது V வடிவத்தில் அமைந்து இதன் உச்சி உயர் பகுதிகளை நோக்கி காணப்படும்.

 ஆற்றுப் பள்ளத்தாக்கில் திடீர் என்று ஏற்படும் உயர வேறுபாட்டினால் நீர் வீழ்ச்சி ஏற்படுகிறது. மலைச் சரிவில் ஒரே புள்ளியில் கூடும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச உயர வேறுபாடுள்ள சம உயரக்கோட்டால் நீர் வீழ்ச்சிக் காட்டப்படுகிறது.

• செங்குத்தான சரிவை உடைய மலைப்பகுதியை ஓங்கல் என்கிறோம். இது கடற்கரையில் இருந்தால் கடல் ஓங்கல் என்று அழைக்கப்படுகின்றது.

• அதிக உயரத்தில் உருவாகும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கை மலையிடுக்கு என்கிறோம். ஆற்றின் போக்கில் குவிந்து காணப்படும் நெருக்கமான சம உயரக்கோடுகள் மூலம் மலையிடுக்கை கண்டுபிடிக்கலாம்.

 எரிமலை வாய்ப் பள்ளத்தைக் குறிக்கும் வெளிப்புறத்தை விட உட்பகுதியில் குறைந்த சம உயரக்கோட்டு மதிப்புடன் அடைக்கப்பட்ட சம் உயரக்கோடுகளால் எரிமலைக் காட்டப்படுகிறது.




     படம் 10.16 கடல் ஓங்கல்


 படம் 10.17 ‘V’ வடிவ பள்ளத்தாக்கு 


 

பயிற்சி 1

1. பொருத்துக



3. காலநிலை வரைபடங்கள்

காலநிலை வரைபடங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட வானிலை கூற்றினைக் காட்டுகின்றன. வரைபடம்பட்டைப்படம்கூட்டு வரைபடம் மற்றும் காற்று போக்குப்படம் போன்றவை காலநிலை புள்ளிவிவரங்களைக் காட்ட பயன்படும் காலநிலை வரைபடங்களாகும். நிலையங்களின் மாதாந்திர சராசரி வெப்பநிலையை எளிய வரைபடம் மூலம் காட்டலாம். அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையை மாதாந்திர சாராசரி வெப்பநிலையோடு ஒப்பிடும் பட்சத்தில் பண்மை கோட்டு வரைபடம் உகந்ததாகும். பொதுவாக தனி நிலையங்களுக்கான மழைப்புள்ளிவிவரத்தை பட்டைப்படம் மூலம் காட்டலாம். சில சிறப்பு காலநிலை வரைபடங்கள் கோட்டுப்படத்தையும் பட்டைப்படத்தையும் இணைத்து பல்வேறு நிலையங்களின் காலநிலை வேறுபாட்டினை அறிய பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

 

தீர்வுகண்ட எடுத்துக்காட்டு 

சென்னை நிலையத்திற்கு சராசரி அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையைக் காட்ட வரைபடம் வரையவும்



அச்சில் ஒரு செ.மீ = ஒரு மாதம் என்ற வகையில் குறிக்கவும்.

அச்சில் குறைந்த மற்றும் அதிகமான வெப்பநிலை மதிப்புகளை பரிசீலித்து தகுந்த அளவையை தெறிவு செய்த பின்னர் குறிக்கவும். (ஒரு செ.மீ = டிகிரி செல்சியஸ்)



தீர்வுகண்ட எடுத்துக்காட்டு


காலநிலை வரைபடம்


       படம் 10.19 கடலுர் – சராசரி வெப்பநிலை மற்றும் மழை

 

பயிற்சி : காலநிலை வரைபடம் வரைக


ஆதாரம்: இந்தியா நீர் போர்டல் அனைவருக்கும் பாதுகாப்பானநிலையான நீர் www.indiaivater portal.org/


Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 10 : Representation of Relief Features and Climatic Data : Profile Diagram Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 10 : நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள் : சமஉயரக் கோடுகள் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 10 : நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள்