Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: கண்ணியமிகு தலைவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: கண்ணியமிகு தலைவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum

   Posted On :  13.07.2022 04:37 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்

உரைநடை: கண்ணியமிகு தலைவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : உரைநடை: கண்ணியமிகு தலைவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : உரைநடை உலகம் : கண்ணியமிகு தலைவர்)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் --------- பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

அ) தண்மை 

ஆ) எளிமை 

இ) ஆடம்பரம் 

ஈ) பெருமை 

[விடை : ஆ. எளிமை] 


2. 'காயிதேமில்லத்' என்னும் அரபுச்சொல்லுக்குச் --------- என்பது பொருள். 

அ) சுற்றுலா வழிகாட்டி

ஆ) சமுதாய வழிகாட்டி 

இ) சிந்தனையாளர்

ஈ) சட்டவல்லுநர்

[விடை : ஆ. சமுதாய வழிகாட்டி] 


3. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் --------- இயக்கத்தில் கலந்து கொண்டார். 

அ) வெள்ளையனே வெளியேறு 

ஆ) உப்புக்காய்ச்சும் 

இ) சுதேசி

ஈ) ஒத்துழையாமை

[விடை : ஈ. ஒத்துழையாமை]


4. காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ---------- 

அ) சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம் 

இ) ஊராட்சி மன்றம்

ஈ) நகர்மன்றம்

[விடை : ஆ. நாடாளுமன்றம்] 


5. ‘எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ----- 

அ) எதிர் + ரொலித்தது

ஆ) எதில் + ஒலித்தது 

இ) எதிர் + ஒலித்தது

ஈ) எதி + ரொலித்தது

[விடை : இ. எதிர் + ஒலித்தது] 


6. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – 

அ) முதுமொழி

ஆ) முதுமைமொழி 

இ) முதியமொழி

ஈ) முதல்மொழி

[விடை : அ. முதுமொழி] 


குறு வினா 

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதேமில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக. 

நாடுமுழுவதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது. 

கல்வியைவிட நாட்டு விடுதலை மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.


2. காயிதேமில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைபிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

காயிதேமில்லத் அவர்கள் தன் மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர்.பெண்வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார். 


சிறு வினா 

ஆட்சிமொழி பற்றிய காயிதேமில்லத்தின் கருத்தை விளக்குக.

ஆட்சிமொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதேமில்லத், “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்றுதான் நான் உறுதியாகச் சொல்வேன். மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


சிந்தனை வினா 

நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணியைச் செய்வீர்கள்? 

தமிழை உலகமொழி ஆக்குவேன். 

ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக கொண்டு வருவேன். 

சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன். 

இந்திய நதிகளை இணைப்பேன். 

ஆகியவற்றை நான் தலைவராக இருந்தால், மக்களுக்குச் செய்வேன்.



கற்பவை கற்றபின்


எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக.

அனைவருக்கும் வணக்கம். எளிமையின் அடையாளமாக வாழ்ந்தவர் காந்தியடிகள் பற்றிப் பேசுகின்றேன். காந்தியடிகள் எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். சிறிய துண்டு பென்சில். காகிதம் ஆகியவற்றைக்கூட குப்பையில் போடாமல் பிற பயன்பாட்டிற்காகக் காந்தியடிகள் வைத்துக்கொள்வார். ஆடம்பரத்தை அறவே வெறுத்தார். வழக்கதிற்கு மாறாக வெறும் ஒரணாவைச் செலவு செய்த தன் மனைவியைக் கண்டித்தார். உண்ணக் கஞ்சி இல்லாதவர் மத்தில் ஆடம்பரமாக அணிவது பாவம் என்றார். எளிமையான கதர் உடையையே உடுத்தினார். தமது குடும்பத்தார் அனைவரையும் அதனையே உடுத்தச் செய்தார். நாமும் அவர் போல எளிமையாக வாழ்வவோம். நன்றி.



Tags : Term 3 Chapter 3 | 7th Tamil பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 3 : Maanudam vellum : Prose: Kanniyumigu thalaivar: Questions and Answers Term 3 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் : உரைநடை: கண்ணியமிகு தலைவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும்