Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் : நினைவில் கொள்க
   Posted On :  22.08.2022 07:38 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்

கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் : நினைவில் கொள்க

நிரல் என்பது வரிசையாக நிறை வேற்றப்படும் கூற்றுகளைக் கொண்டதாகும். அந்த வரிசையை மாற்றுவதற்கு கட்டுப்பாட்டுக் கூற்றுகள் பயன்படுகிறது.

நினைவில் கொள்க:

• நிரல் என்பது வரிசையாக நிறை வேற்றப்படும் கூற்றுகளைக் கொண்டதாகும். அந்த வரிசையை மாற்றுவதற்கு கட்டுப்பாட்டுக் கூற்றுகள் பயன்படுகிறது.

• கட்டுப்பாட்டு நிரலின், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தாவுவதற்கு காரணமான நிரல் கூற்றுகள் கட்டுப்பாட்டு கட்டமைப்பு (அல்லது) கட்டுப்பாட்டு கூற்றுகள் எனப்படும்.

• மூன்று வகையான கட்டுப்பாட்டுப் பாய்வுகள் உள்ளன

0 வரிசை முறை

0 மாற்று அல்லது கிளை பிரிப்பு

0 பன்முகச் செயல் அல்லது மடக்குச் செயல்

• பைத்தானில் பல்வேறு வகையான if அமைப்புகளை பயன்படுத்தி கிளைப்பிரிப்பு சாத்தியமாகிறது.

• உள் தள்ளல் பைத்தானில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெளிவு அடைப்புக் குறியை ({}) பயன்படுத்தாமல் கூற்றுகளை ஒரு தொகுதிக்குள் குறிப்பிட உள்தள்ளல் பயன்படுகிறது.

• பைத்தானில் தவறான உள் தள்ளல்களுக்கு நிரல் பெயர்ப்பிபிழை செய்திகளைக் காண்பிக்கும்.

• print() செயற்கூறு விடுபடு வரிசையைப் பயன்படுத்தி பயனர் விரும்பும் வெளியீட்டை வடிவமைக்க ஆதரவளிக்கிறது.

• range() செயற்கூறு for மடக்கில் வரம்பிற்குட்பட்ட மதிப்புகளை வழங்குகிறது.

• பைத்தானில் break, continue மற்றும் pass ஆகிய கூற்றுகள் jump கூற்றுகளாக செயல்படுகிறது.

• பைத்தானில் pass கூற்று ஒரு null கூற்றாகும். இது பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காக பயன்படுகிறது. 

12th Computer Science : Chapter 6 : Core Python : Control Structures : Python Control Structures: Points to remember in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் : நினைவில் கொள்க - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 6 : Core பைத்தான் : கட்டுப்பாட்டு கட்டமைப்புகள்