Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | பைத்தான் தரவு வகைகள்

பைத்தான் - பைத்தான் தரவு வகைகள் | 12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators

   Posted On :  22.08.2022 07:35 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்

பைத்தான் தரவு வகைகள்

பைத்தானில் அனைத்து தரவு மதிப்புகளும் பொருளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பொருள் அல்லது மதிப்புகள் பல்வேறு வகைப்படும்.

பைத்தான் தரவு வகைகள்

பைத்தானில் அனைத்து தரவு மதிப்புகளும் பொருளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பொருள் அல்லது மதிப்புகள் பல்வேறு வகைப்படும். பைத்தானில், உள்ளினைந்த அல்லது அடிப்படை தரவு வகைகள் எண்கள், சரங்கள், பூலியன் , டுபூல்ஸ், லிஸ்ட் மற்றும் டிக்ஸ்னரிகள் ஆகும்.


1. எண் தரவு வகை

பைத்தானில் உள்ளிணைந்த எண் பொருள் முழு எண், மிதப்பு புள்ளி எண்கள் மற்றும் சிக்கல் எண்களை கொண்டுள்ளது.

முழு எண் தரவு பதின்ம எண் (Decimal), எண்ணிலை (octal) எண் அல்லது பதினாரு நிலை எண்ணாக (Hexadecimal) இருக்கலாம். எண்ம எண்யை குறிப்பதற்கு () (பூஜ்ஜியம் மற்றும் சிறிய எழுத்தில் 0 பயன்படுகிறது) (பதினாரு நிலை எண்ணை குறிப்பதற்கு 0X அல்லது 0x (பூஜ்ஜியம் மற்றும் பெரிய அல்லது சிறிய எழுத்துக்களில் X பயன்படுகிறது) மற்றும் 1 (பெரிய எழுத்து) பெரிய முழு எண்ணை குறிக்க பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு:

102, 4567, 567      # Decimal integers

00102, 00876,00432   # Octal integers

0X102, 0X876, 0X432 # Hexadecimal integers

34L, 523L          # Long decimal integers

மிதப்பு புள்ளி தரவு, தசம புள்ளியை கொண்ட தசம எண்களாக குறிப்பிடப்படுகின்றன. எக்ஸ்போனன்ட் தரவு வகை, தசம எண் பகுதி, தசம புள்ளி, எக்ஸ்போனன்ட் பகுதியை தொடர்ந்து ஒன்று அல்லது பல இலக்கங்களை கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

123.34, 456.23, 156.23  # Floating point data

12.E04, 24.804        # Exponent data

சிக்கல் எண்கள் இரு மிதப்பு புள்ளி மதிப்புகளை ரியல் மற்றும் இம் ஜனரி பகுதிகளாக கொண்டிருக்கும்.


2. பூலியன் தரவு வகை

பூலியன் தரவுகள், சரி அல்லது தவறு என இரு மதிப்புகளில் ஒன்றை கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

Bool_varl = True

Bool_var2 = False


3. சர தரவு வகை

சர தரவு வகை ஒற்றை அல்லது இரட்டை அல்லது மூன்று மேற்கோள் குறிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டு:

Char_data = 'A'

String_data= "Computer Science"

Multiline_data= ''''”String data can be enclosed with single quote or double

quote or triple quote.'”””

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 5 : Core Python : Python Variables and Operators : Python Data types Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள் : பைத்தான் தரவு வகைகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 5 : Core பைத்தான் : பைத்தான் அறிமுகம்-மாறிகள் மற்றும் செயற்குறிகள்