நமது சுற்றுச்சூழல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 3 Unit 1 : Our Environment

   Posted On :  28.05.2022 09:31 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : நமது சுற்றுச்சூழல்

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : நமது சுற்றுச்சூழல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்

நமது சுற்றுச்சூழல் ( மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)


மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நமது சுற்றுச்சூழல் ______________ ஆல் சூழப்பட்டது. 

 அ. உயிர்க் காரணி 

ஆ. உயிரற்ற காரணி 

இ. உயிர் மற்றும் உயிரற்ற காரணி 

விடை : இ. உயிர் மற்றும் உயிரற்ற காரணி 


2. பின்வருவனவற்றுள் உயிர்க் காரணி எது? 

 அ. நீர் 

ஆ. ஆடு 

இ. காற்று 

விடை : ஆ. ஆடு


3. மனிதர்கள் தங்கள் உணவிற்காக ______________ச் சார்ந்துள்ளனர். 

 அ. தாவரங்கள் 

ஆ. மண்

 இ. மரக்கட்டை

விடை : அ. தாவரங்கள்


4. முதன்மை  உற்பத்தியாளர்கள் எவை ? 

 அ. உலர்ந்த இலைகள் 

ஆ.பசுந்தாவரங்கள் 

இ. பச்சையமில்லாத் தாவரங்கள்

விடை : ஆ.பசுந்தாவரங்கள் 


5. சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு எது? 

' அ. மாமரம் 

ஆ. பாக்டீரியா 

இ. மான் 

விடை : ஆ. பாக்டீரியா


6. பூமியில் பசுந்தாவரங்கள் இல்லையெனில், பின்வரும் எந்தெந்த உயிர்க் காரணிகள் அழிந்துவிடும்?

அ) அ மற்றும் இ 

ஆ) ஆ மற்றும் ஈ 

இ) அ மற்றும் ஈ 

ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ

விடை : ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. _________ (பசு / மண்) ஒரு நுகர்வோர். 

விடை : பசு

2. இளந்தாவரங்கள் _________ (மரம் / மரக்கன்று) எனப்படும். 

விடை : மரக்கன்று

3. மரம் நடுதலால் நமக்கு _________ (ஆக்ஸிஜன் / நிலம்) கிைடக்கும். 

விடை : ஆக்ஸிஜன்

4. உலகச் சுற்றுச்சூழல் தினம் _________ (ஜூன் 15 / ஜூன் 5) அன்று கொண்டாடப்படுகிறது. 

விடை : ஜூன் 5

5. _________ (சிதைப்பவை  / உற்பத்தியாளர்கள்) என்பது இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணைவப் பெறுகின்றன.

விடை : சிதைப்பவை



III. பொருத்துக

1. கல் - நுகர்வோர் 

2. பாக்டீரியா - உயிரற்ற காரணி 

3. தாவரம் - சிதைப்பவை

4. எருமை  - உற்பத்தியாளர் 

விடை :

1. கல் - உயிரற்ற காரணி

2. பாக்டீரியா -  சிதைப்பவை

3. தாவரம் - உற்பத்தியாளர்

4. எருமை  -  நுகர்வோர்

 

IV. சரியா? தவறா? எனக் கூறுக.

1. உயிர்க் காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் அவசியமாகிறது. (சரி)

2. நதி உயிர்க் காரணிக்கு எடுத்துக்காட்டு ஆகும். (தவறு)

3. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் 'வன மேகாத்சவம்’ கொண்டாடப்படுகிறது. (சரி)

4. தாவரங்கள் என்பவை நுகர்வோர்கள். (தவறு)

5. தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவும் இருப்பிடமும் தருகின்றன. (சரி)


V. விடையளி. 

1. விஜய் ’P’ மற்றும் ’R’ என்ற இரண்டு காரணிகைள (ஒன்று உயிருள்ளது, மற்றொன்று உயிரற்றது) தனித்தனி கூண்டுகளில் வைத்து உணவும் நீரும் கொடுத்து அவற்றின் மாற்றத்தைக் கவனித்து வந்தான்.


அ) இரண்டில் உயிருள்ள பொருள் எது? உனது விடைக்கான காரணத்தை எழுதுக. 

P  உயிருள்ள பொருள் ஆகும். ஏனென்றால் P-யின் எடை முதல் வாரத்தை விட நான்காவது வாரம் அதிகமா உள்ளது 

ஆ) ஆறாம் வாரத்தில் உயிருள்ள பொருளின் எடை என்னவாக இருக்கும்? 

12- கிகி இருக்கும் 

2. உயிர்க் காரணி, உயிரற்ற காரணிக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

உயிர்க் காரணி : தாவரங்கள், மனிதன் 

 உயிரற்ற காரணி : நீர், சூரியன்

3. உயிருள்ளைவ மற்றும் உயிரற்றைவக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகைள எழுதுக. 


உயிர்க் காரணிகள் (உயிருள்ளவை)

இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்

இவை உயிர் வாழ உணவு தேவை

இவற்றிற்கு உணர்ச்சி உண்டு

இளம் உயிரிகளை உருவாக்கும்

உயிரற்ற காரணிகள் (உயிரற்றவை)

இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.

உணவு தேவைப்படாது

இவற்றிற்கு உணர்ச்சி இல்லை

இளம் உயிரிகளை உருவாக்காது

4. பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகைளப் பட்டியலிடுக. 

காற்று, மண் 

5. சுற்றுச்சூழல் சமநிைலக்குத் தேவையான உயிர்க் காரணிகள் யாவை ? 

உற்பத்தியாளர்கள், நுகர்வோர், சிதைப்பவர்

6. 'தாவரங்களை முதன்மை உற்பத்தியாளர்கள் எனக் கூறுகிேறாம்'. ஏன்? 

தாவரங்கள், தமக்குத் தேவையான உணைவ ஒளிச்சேர்க்கை  மூலம் தாமே  உற்பத்தி செய்கின்றன. எனேவ, பசுந்தாவரங்கள் முதன்மை ம உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன. 

7. தாவரத்தின் எவையேனும் நான்கு பயன்களை எழுதுக. 

சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும்

உயிரினங்களுக்கு நிழைலயும், உணைவயும் தரும்

சுற்றுப்புறத்தில் உள்ள தீமை  விளைவிக்கும் வாயுக்கைளயும் புகையயையும் உறிஞ்சிக் கொள்ளும்.

மழைப் பொழிவைத் தரும்


VI. செயல்திட்டம்

 உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகளின் படங்கைளச் சேகரித்துப் படத்தொகுப்பு தயார் செய்க.  


பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.

1. பறவைகள் : நீர் , காற்று , சூரிய ஒளி, மண். 

2. பூச்சிகள் : நீர், காற்று , சூரிய ஒளி, மண். 

3. மனிதன் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்.


இணைப்போம்

மூலப்பொருள்களை அவற்றிலிருந்து கிடைக்கும் வளங்கள் (பொருள்கள்) மற்றும் அவற்றின் பயன்களுடன் இணைக்க.



விவாதிப்போம்

1. பூங்காவில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. குரங்குகளும் பறவைகளும் அந்த ஆலமரத்தை வாழிடமாகக் கொண்டுள்ளன. அம்மரத்தின் கீழே மனிதர்களும் ஓய்வெடுப்பதுண்டு. அம்மரமும், குரங்குகளும், பறவைகளும், மனிதர்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர் என உனது நண்பர்களுடன் கலந்துரையாடுக. 


2. 'தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி' ஏன்?

• தாவரம் தாமே பச்சையம் மூலம் உணவுத் தயாரிக்கிறது.  

• பிற உயிர் வாழ காய்கனிகள் தருகின்றன. 


3. உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க.





முயல்வோம்

1. பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக. 

(காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி) 

அ. விலங்குகள் : காற்று, நீர், சூரிய ஒளி. 

ஆ. தாவரங்கள் : காற்று, நீர், சூரிய ஒளி, மண். 

இ. மனிதன் : காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், பழங்கள், கோதுமை.


2. பின்வருவனவற்றிற்கு உதாரணம் தருக. 

அ. காற்றில் பறக்கும் விலங்கு  : வௌவால் 

ஆ. நீரில் வாழும் விலங்கு  : திமிங்கலம் 

இ. நிலத்தில் நகரும் விலங்கு  : ஆமை 

ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு  : ஆடு 



முயல்வோம்

பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக. 

(துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா) 

உற்பத்தியாளர்கள்  :  மாமரம், வெள்ளரித் தாவரம், துளசி. 

நுகர்வோர்கள்  :  மனிதன், முயல், பூனை, நாய், கழுகு. 

சிதைப்பவை  :  பாக்டீரியா, பூஞ்சை


2. சிந்தித்து விடையளி. 

அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா? அல்லது

உயிரற்றதா? உயிரற்றது.

ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா? உயிரற்றது.





விவாதிப்போம்

1. கலந்துரையாடி எழுதுக. 

தாவரங்களும் மனிதர்களும் உயிருள்ளவையே பின்பு மனிதன் ஏன் தாவரங்களைச் சார்ந்துள்ளான்?

• மனிதன் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவை உண்ணுகிறான். 

• மனிதனால் தாமே இயற்கையாக உணவுத் தயாரிக்க இயலாது. 


2. மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் உயிருள்ள பொருள்கள் சிலவற்றின் படங்களைக் கொடுத்து, உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தக் கூறவும். 

மாணவர் செயல்பாடு.


3. மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் (அல்லது) பூங்காவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் காணும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் பற்றிக் குறிப்பெடுக்கச் செய்து அவற்றைப் பற்றிக் கலந்துரையாடச் செய்க. 

மாணவர் செயல்பாடு.



முயல்வோம் 

அட்டவணையில் மறைந்துள்ள இயற்கை வளங்களை வட்டமிடுக.




இணைப்போம்

உணவின் அடிப்படையில் விலங்குகளைப் பொருத்துக.

பசு - தாவர உண்ணி

கரடி - அனைத்துண்ணி

புலி – ஊன் உண்ணி

சிங்கம் - ஊன் உண்ணி

யானை - தாவர உண்ணி

காகம் - அனைத்துண்ணி



முயல்வோம்

அ. தாவரங்களின் பயன்களுள் எவையேனும் இரண்டினை எழுதுக. 

1. தாவரங்கள் நமக்கு ஆக்ஸிஜனைத் தருகின்றன. 

2. தாவரங்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மனிதர்கள் வாழ வழிவகுக்கின்றன.


ஆ. “நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துதல். 


இ. உனது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல். 


ஈ. விதைப்பந்து தயாரித்துப் பகிர்தல் 

சிறிது களிமண், இலை மட்கு, நீர் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளவும். மூன்றையும் கலந்து சிறிய பந்து போல செய்து அதனுள் கிடைத்த விதைகளை வைக்கவும். பின் இவற்றைக் காயவைத்துப் பத்திரப்படுத்திப் பள்ளியின் முக்கிய விழாக்களில் இவ்விதைப் பந்துகளை அனைவருக்கும் வழங்கலாம்.


உ. மரங்களின் பாதுகாப்பு பற்றிச் சில வாசகங்கள் எழுதி, உங்கள் பள்ளி வளாகம் மற்றும் ஊரில் உள்ள மரங்களில் ஒட்டி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துக. 

எ.கா: வாசகங்கள்: 

பூமியை நாம் பாதுகாத்தால் அது நம்மைக் காக்கும்.

புவி எனதோ, உனதோ அன்று; அது நமது! 

1. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் 

2. மரம் வளர்ப்போம், மழைபெறுவோம்.


Tags : Our Environment | Term 3 Chapter 1 | 3rd Science நமது சுற்றுச்சூழல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 3 Unit 1 : Our Environment : Questions with Answers Our Environment | Term 3 Chapter 1 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : நமது சுற்றுச்சூழல் : வினா விடை - நமது சுற்றுச்சூழல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : நமது சுற்றுச்சூழல்