பாதுகாப்பு | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 1 Unit 4 : Safety

   Posted On :  18.05.2022 10:59 pm

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : பாதுகாப்பு

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : பாதுகாப்பு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பாதுகாப்பு ( முதல் பருவம் அலகு 4 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் )

மதிப்பீடு

I. அடைப்பு குறிக்குள் இருக்கும் விடைகளிலிருந்து சரியானவற்றை தேர்ந்தெடு.

(நீர், பாம்பு, சாலை சமிக்ஞை , மின்சாரம், தீ) 

1. தொட்டால் அது சுடும். விட்டால் அது எரியும். அது என்ன?

விடை : தீ 


2. நான் அன்றாடம் பயன்படுத்துவேன். அதனை மழைநேரங்களில் காண்பேன். அது என்ன ?

விடை: நீர் 


3. கம்பிகளின் வழியே செல்வேன், ஆனால் நான் கொடி அல்ல. நான் விளக்குகள் எரிய உதவுவேன். நான் யார்?

விடை: மின்சாரம் 


4. அவன் கால்கள் இல்லாமல் காடுகளில் உலாவுவான். அவன் யார்?

விடை: பாம்பு 


5. சாலையில் நின்று நம்மை வழி நடத்துவான். அவனுக்கு மூன்று கண்கள் உண்டு. அவன் யார்?

விடை: சாலை சமிக்ஞை



II. சரியா? தவறா என்று எழுது.

1. நாம் சமையல் அறையில் விளையாடக்கூடாது. ( ✓ )

2. ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்லலாம். ( x )

3. நாம் மின்சாதனங்களை ஈரமான கையால் தொடக்கூடாது. ( ✓ )

4. நாம் நமது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ( ✓ )

5. நாம் கண்ணாடி பொருள்கள் வைத்து விளையாடலாம். ( x )



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

1. விபத்து நேர்வதற்கான சில காரணங்களைக் எழுதுக. 

அவசரம் 

கவனக்குறைவு

விதிகளை மீறுதல் 

விழிப்புணர்வு இன்மை 

முறையான பயிற்சியின்மை


2. நமது உடையில் தீப்பற்றினால் நாம் என்ன செய்யவேண்டும்?

நாம் ஓடக்கூடாது. 

உடையில் தீப்பற்றினால் சணல் சாக்குக் கொண்டு தீயை அணைக்க வேண்டும்.


3. மின்விபத்திலிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்? 

மின்பொத்தான்களையும் மின்கம்பிகளையும் ஈரமான கையால் தொடக்கூடாது. 

மின்மாற்றி மற்றும் மின்கோபுரங்கள் அருகில் விளையாடக்கூடாது. 

மின்பொத்தான் பெட்டியில் குச்சி போன்ற பொருள்களை நுழைக்கக்கூடாது.


4. நாம் எங்கு சாலையை கடக்க வேண்டும்?

பாதசாரி கடக்கும் இடத்தில் பாதசாரிகள் கடக்க வேண்டும். 

பாதசாரி கடக்கும் இடம் வரிக்குதிரைப்போன்று கருப்பு மற்றும் வெள்ளைக் கோடுகளுடன் இருக்கும்.


5. சில விஷப்பூச்சிகளின் பெயர்களை குறிப்பிடுக.

பாம்பு, தேள், சிலந்தி, குளவி.



IV. வண்ணம் தீட்டுவோம்

சாலை சமிக்ஞை



காட்டுத் தீ எவ்வாறு உருவாகிறது? 

மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதால். 

மனிதர்கள் தீ போன்ற பொருள்களை பயன்படுத்தி விட்டு அணைக்காமல் செல்வதால்.



சிந்தனை செய்

தீ அணைப்பானை நீ எங்காவது கண்டதுண்டா? 

ஆம். எங்கள் பள்ளியில் தீ அணைப்பான்கள் உள்ளன.



செயல்பாடு நாம் எழுதுவோம்

தீ நம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு உதவுகிறது? 

சமையலுக்கு தீ பயன்படுகிறது. 

சாலைகள் அமைக்கப் பயன்படும்தார் பொருளை உருக்கிடப்பயன்படுகிறது. 

தங்கம் போன்ற ஆபரணங்களைச் செய்ய (உருக்கப்) பயன்படுகிறது. 

தேவையற்ற பொருள்களை எரிப்பதற்குப் பயன்படுகிறது. 

மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றைப் பயன்படுத்த தீ பயன்படுகிறது. 

விளக்கு எரிக்க தீ பயன்படுகிறது.



சிந்தனை செய்

நீ ஆறு அல்லது ஏரியில் குளித்திருக்கிறாயா? ஆம் என்றால் யாருடன் சென்று குளித்தாய்? 

ஆம். நான் ஆற்றில் என் தந்தையுடன் குளித்திருக்கிறேன்.



செயல்பாடு  நாம் எழுதுவோம்

உனது வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களைப் பட்டியலிடுக. 

மின் விளக்கு

துணி மடிப்பான் 

மின் விசிறி

குளிரூட்டி (A/C) 

குளிர்சாதனப்பெட்டி

மின்சார அடுப்பு 

துணி துவைக்கும் இயந்திரம்



சிந்தனை செய்

சிவப்பு : நில்

பச்சை : செல்

1. நீ இச்சாலை குறிகளை கவனித்திருக்கிறாயா?

ஆம். 


2. நீ எங்கு பார்த்திருக்கிறாய்? 

என்னுடைய பள்ளியின் அருகில்.



செயல்பாடு நாம் எழுதுவோம் 

விழிப்புணர்வு குறித்த வாசகங்களை எழுதுக. 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர். 

விதிகளைப் பின்பற்றுவோம், விதி நம்மைக் காக்கும். 

தலைக் கவசம் உயிர் கவசம். 

நில், கவனி, செல்.



சிந்தனை செய்

இதுபோன்ற போக்குவரத்து பூங்கா உன் வீட்டருகில் உள்ளதா? 

இல்லை. ஆனால் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்திருக்கின்றேன்.



செயல்பாடு

செயல் திட்டம் 

நீ தீபாவளி அன்று பட்டாசு வெடித்த அனுபவத்தை பற்றி எழுதுக. 

நான் சிறு பட்டாசுகளை வெடித்தேன். 

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வெடி வெடித்தேன். 

மத்தாப்பு, சரம், பூத்தொட்டி போன்ற வெடிக்காத பட்டாசுகளை வெடித்தேன். 

அதிகம் சத்தம் தரக்கூடிய பட்டாசுகளை நான் பயன்படுத்தவில்லை . 

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வெடிகளைத் தவிர்த்தேன்.



Tags : Safety | Term 1 Chapter 4 | 3rd Social Science பாதுகாப்பு | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 1 Unit 4 : Safety : Questions with Answers Safety | Term 1 Chapter 4 | 3rd Social Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : பாதுகாப்பு : வினா விடை - பாதுகாப்பு | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : பாதுகாப்பு