வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 2 Unit 1 : Historical Places

   Posted On :  18.05.2022 11:17 pm

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ( இரண்டாம் பருவம் அலகு 1 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்) 

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. கடற்கரைக் கோவில் அமைந்துள்ள இடம் __________

அ) மகாபலிபுரம்

ஆ) திருச்சி

இ) மதுரை

விடை: அ) மகாபலிபுரம் 


2. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் __________

அ) காஞ்சிபுரம்

ஆ) சென்னை 

இ) திருச்சி

விடை: ஆ) சென்னை 


3. மகாபலிபுரத்தில் உள்ள கட்டடக் கலைகளின் வகைகள் __________

அ) ஆறு 

ஆ) மூன்று

இ) நான்கு

விடை : இ) நான்கு 


4. திருவள்ளுவர் __________ இயற்றினார். 

அ) திருக்குறள்

ஆ) நன்னெறி 

இ) ஆத்திசூடி

விடை : அ) திருக்குறள் 


5. தஞ்சாவூர் பெரியகோவிலில் உள்ள நந்தி __________ ஆல் கட்டப்பட்டது. 

அ) அதிக கற்கள்

ஆ) இரு கற்கள் 

இ) ஒரே கல்

விடை : இ) ஒரே கல்



II. பொருத்துக. 

1. விவேகானந்தர் பாறை -  புனித ஜார்ஜ் கோட்டை

2. அருங்காட்சியகம்     -  விழுப்புரம்

3. செஞ்சிக்கோட்டை    -  பல்லவர்கள் 

4. மகாபலிபுரம்         -  சோழர்கள் 

5. பெரிய கோவில்     -  கன்னியாகுமரி


விடைகள்

1. விவேகானந்தர் பாறை –  கன்னியாகுமரி

2. அருங்காட்சியகம்     -  புனித ஜார்ஜ் கோட்டை

3. செஞ்சிக்கோட்டை    -  விழுப்புரம்

4. மகாபலிபுரம்         -  பல்லவர்கள்

5. பெரிய கோவில்     -  சோழர்கள்



 III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ளவை யாவை?

அருங்காட்சியகமும், தேவாலயமும் புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ளன. 


2. திருவள்ளுவர் உருவச் சிலை பற்றிக் குறிப்பு வரைக. 

திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது. 

133 அதிகாரங்களை நினைவூட்டும் வகையில் 133 அடி உயரம் கொண்டுள்ளது. 

இச்சிலையை அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா சூழ்ந்துள்ளது. 


3. திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மூன்று நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.

அரபிக்கடல் 

இந்தியப் பெருங்கடல் மற்றும் 

வங்காள விரிகுடா 


4. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டியது யார்? அக்கோவிலின் ஏதேனும் ஒரு சிறப்பு அம்சம் பற்றி எழுதுக. 

தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டியவர் இராஜராஜ சோழன். 

சிறப்பம்சங்கள்:

இக்கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. 

இங்குள்ள நந்தி சிலை ஒரே கல்லால் ஆனது.

இக்கோவிலின் கோபுர நிழல் தரையில் விழுவதில்லை. 


5. செஞ்சிக்கோட்டை பற்றிக் குறிப்பு வரைக. 

செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கோட்டைகளுள் இதுவும் ஒன்று.



செயல் திட்டம்

நீ ஏதேனும் உனக்குப் பிடித்த இடத்திற்குச் சுற்றுலா சென்று வர திட்டமிடுவது போன்று கற்பனை செய்து கொள். அப்பொழுது உன்னுடன் என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்வாய்?

இடத்தின் பெயர்         பொருள்களின் பெயர்

காஷ்மீர்          -    ஸ்வெட்டர், காமிரா, கம்பளி ஆடை, காமிரா.

 ராஜஸ்தான்     -    பருத்தி உடைகள், காமிரா.

மகாபலிபுரம்      -   காமிரா, நீச்சல் உடை, தொலைநோக்கி.

குற்றாலம்        -   எண்ணெய், துண்டு, பெர்முடாஸ் (டவுசர்)


செயல்பாடு 

1. நீ கண்டு களித்த ஏதேனும் 5 இடங்களின் பெயர்களை எழுதுக. அவற்றுள் ஏதேனும் ஓர் இடத்தின் புகைப்படத்தை ஓட்டுக.


ஆக்ரா 

டார்ஜிலிங் 

காஷ்மீர் 

டெல்லி

வாகா எல்லை


2 நினைவுச் சின்னங்களில் பெயர்கள் மற்றும் ஓவியங்களை மக்கள் கிறுக்கி வைத்துள்ளதைக் கண்டதுண்டா? இது சரி என்று உனக்குத் தோன்றுகிறதா? உன் கருத்துகளை எழுதுக.

தவறு. அவ்வாறு செய்யக்கூடாது. 

நினைவிடங்கள் மூலம் மக்களின் பண்பாட்டை அறியமுடியும். அவற்றில் ஏதேனும் கிறுக்கினால் அந்த வரலாறை அறிய இயலாது. எனவே, நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் கிறுக்கக்கூடாது. 


3. உன் நண்பர்களுடன் விவாதித்து தமிழ்நாட்டில் உள்ள உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத்தலங்கள் பற்றி எழுதுக. 

(மாணவர்கள் செயல்பாடு) 

எடுத்துக்காட்டாக,

எனக்குப் பிடித்த இடம் குற்றாலம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கையை நேசிக்க, ரசிக்கமுடியும். 

அதிகமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. 

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி போன்ற பல அருவிகள் உள்ளன. 

நாம் பல அரிதான பழங்களை நீர் விழும் காலங்களில் பெறமுடியும்.



சிந்தனை செய்

1. நினைவுச் சின்னம் அல்லது கோவில்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை நீ கண்டதுண்டா? 

ஆம், நெல்லையப்பர் கோவில் சிற்பங்களைப் பார்த்துள்ளேன்.


Tags : Historical Places | Term 2 Chapter 1 | 3rd Social Science வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 2 Unit 1 : Historical Places : Questions with Answers Historical Places | Term 2 Chapter 1 | 3rd Social Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் : வினா விடை - வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்