குழந்தைகளின் பாதுகாப்பு | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 3 Unit 3 : Child Safety

   Posted On :  19.05.2022 02:31 am

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : குழந்தைகளின் பாதுகாப்பு

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : குழந்தைகளின் பாதுகாப்பு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

குழந்தைகளின் பாதுகாப்பு ( மூன்றாம் பருவம் அலகு 3 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்)


மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. சிறார் உதவி மைய எண் எது? 

அ) 1099 

ஆ) 1098

இ) 1089

விடை : ஆ) 1098 


2. சிறார் உதவி மைய எண் __________ வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது. 

அ) இருபது 

ஆ) பத்தொன்பது 

இ) பதினெட்டு

விடை : இ) பதினெட்டு 


3. சிறார் உதவி மையம் __________ குழந்தைகளுக்கு உதவுகிறது. 

அ) தொழிலாளர்களாகப் பணிபுரியும் 

ஆ) வீட்டுப்பாடத்திற்கு உதவி தேவைப்படும் 

இ) அ மற்றும் ஆ இரண்டும் 

விடை : அ) தொழிலாளர்களாகப் பணிபுரியும் 


4. குழந்தையின் தந்தை அல்லது தாய் முன்னிலையில் மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது ஒரு குழந்தையின் உடலின் தனிப்பட்ட பகுதியைத் தொடுதல் ___________ தொடுதல் ஆகும். 

அ) பாதுகாப்பற்ற 

ஆ) பாதுகாப்பான 

இ) மேலே எதுவும் இல்லை

விடை : ஆ) பாதுகாப்பான 


5. ஒருவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ) பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். 

ஆ) அதை ஒரு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். 

இ) அ மற்றும் ஆ இரண்டும்.

விடை : அ) பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்



II. சரியா / தவறா எழுதுக.

1. குழந்தைத் தொழிலாளர் முறை சட்டத்திற்குப் புறம்பானது அன்று. 

விடை : தவறு  


2. யாராவது தங்கள் உடலின் தனிப்பட்ட பாகங்களைத் தொடும்படி கேட்டால், அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும்.

விடை : சரி 


3. ஒருவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை நீங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ சொல்ல வேண்டும்.

விடை : சரி 


4. இந்தியத் தண்டனைச் சட்டம் 1820, குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் நபர்களைத் தண்டிக்கிறது.

விடை : தவறு 


5. சிறார் உதவி மைய எண் குழந்தை தொழிலாளர்களுக்கு உதவுகிறது.

விடை : சரி



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. சிறார் உ.தவிமைய எண் பற்றி சிறு குறிப்பு வரைக.

சிறார் உதவி மைய எண் 1098. 

இது பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு உதவும் ஒரு உதவி மைய எண் ஆகும். 


2. சிறார் உதவி மைய எண் எப்போது நிறுவப்பட்டது? அது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது? 

1996 -இல் நிறுவப்பட்டது. 

பின்னர் 1998 - 99 இக்கு இடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. 


3. பாதுகாப்பான தொடுதல் என்றால் என்ன?

குடும்ப நபர்கள் அரவணைத்துக் கொள்வது அல்லது உங்கள் நண்பர்களுடன் கை கோர்த்தல் போன்றவை பாதுகாப்பான தொடுதல் ஆகும். 


4. பாதுகாப்பற்ற தொடுதல் என்றால் என்ன?

யாராவது உங்கள் உடலின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடும்போது அல்லது அவற்றைத் தொடும்படி கேட்கும்போது அது பாதுகாப்பற்ற தொடுதல் ஆகும். 


5. ஒருவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 

பாதுகாப்பற்ற முறையில் யாராவது தொட்டால், உங்கள் ஆசிரியரிடமோ (அல்லது) உங்கள் பெற்றோரிடமோ உடனே தெரிவிக்க வேண்டும்.



செயல்திட்டம்

குழந்தைகள் நலத் திட்டங்களைப் பற்றி மேலும் தகவல்களைத் திரட்டி எழுதி வருக. 

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை.  

குழந்தைத் திருமண தடைச் சட்டம்.

சிறார் உதவி மையம். 

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவை. 

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டங்கள்.



செயல்பாடு

பாதுகாப்பான பயண வழிமுறை எது? கட்டத்தில் () அல்லது (X) குறியிடுக.

 


செயல்பாடு

எது பாதுகாப்பான தொடுதல் / பாதுகாப்பற்ற தொடுதல்?

 



Tags : Child Safety | Term 3 Chapter 3 | 3rd Social Science குழந்தைகளின் பாதுகாப்பு | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 3 Unit 3 : Child Safety : Questions with Answers Child Safety | Term 3 Chapter 3 | 3rd Social Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : குழந்தைகளின் பாதுகாப்பு : வினா விடை - குழந்தைகளின் பாதுகாப்பு | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : குழந்தைகளின் பாதுகாப்பு