Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள்
   Posted On :  26.07.2022 01:55 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள்

குஜ்ரால் கொள்கை என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது ஆகும். இக்கொள்கை முன்னால் வெளியுறவு துறை அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த I.K.குஜ்ரால் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள்

குஜ்ரால் கொள்கை


குஜ்ரால் கொள்கை என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது ஆகும். இக்கொள்கை முன்னால் வெளியுறவு துறை அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த I.K.குஜ்ரால் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கொள்கையின்படி, இந்தியாவின் நிலையும், வலிமையும் ஏனைய நாடுகளுடன் உள்ள உறவுகளை நிர்ணயிக்கிறது. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இக்கொள்கைகள் பின்வருவன:

முதலாவதாக, அண்டை நாடுகளான பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் தன்னாலான அதிகமான உதவிகளையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்கிறது. 

இரண்டாவதாக, எந்த ஒரு தென்கிழக்கு ஆசியா நாட்டிற்கும், தன் அண்டை நாடுகளுக்கு எதிரான காரியங்களை நிகழ்த்துவதற்கு தன் நாட்டில் இடமளிக்கக்கூடாது. 

மூன்றாவதாக, எந்த ஒரு நாடும், தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகளின் உள்ள பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. 

நான்காவதாக, அனைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளின் நிலப்பரப்பையும், இறையான்மையையும் மதித்தல் வேண்டும். 

ஐந்தாவதாக, அவர்கள் தங்கள் மோதல்களை அமைதியான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்

மேற்கூறிய கொள்கையை, அனைத்து நாடுகளும், பின்பற்றுகின்ற பட்சத்தில் நட்புறவும், நம்பிக்கையும் நீடிக்கும். தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒற்றுமையை மேம்படுத்தலாம். இந்திய-பாகிஸ்தானின் மோசமடைந்த உறவுகளையும் சீர்படுத்தலாம் என்பது குஜ்ராலின் நேர்மறை கொள்கை அம்சமாகும்.

"கிழக்கு நோக்கி கொள்கை" மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" இடையேயான வேறுபாடுகள் 

"கிழக்கு நோக்கி கொள்கை" மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" இடையேயான வேறுபாடுகள் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை உண்டாக்குவதற்காகவே "கிழக்கு நோக்கி கொள்கை" உண்டாக்கப்பட்டது. அதேசமயம் "கிழக்கு நோக்கி செயல்பாடு" என்பது பொருளாதார மற்றும் பாதுகாப்பு கிழக்கு ஆசியாவையும் உள்ளடக்கியது ஆகும். 

"கிழக்கு நோக்கி கொள்கை"யின் இலக்குகள் 

1. ஆசிய-பசிபிக்மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார, மரபு மற்றும் ராணுவம் சார்ந்த உறவுகளை இரட்டிப்பு மற்றும் பலதரப்பு கட்டங்களில் மேம்படுத்துதல். 

2. வடகிழக்கு மாநிலங்களுடன் அண்டை நாடுகளை இணைக்கும் பரஸ்பர நடவடிக்கைகள் செயல்முறைபடுத்துதல். 

3. பாரம்பரிய நட்பு நாடுகள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளை வர்த்தகத்திற்காக அமைத்தல், இதில் இந்திய பசிபிக் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

இந்தியாவின் "கிழக்கு நோக்கி கொள்கை"

இக்கொள்கை திட்டம் 1991இல் பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமே இந்தியாவின் இலக்கு மேற்கிலிருந்து தென் கிழக்கு ஆசியா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. 2014 நவம்பர் மாதம் நடைபெற்ற கிழக்கு ஆசியா கூட்டத்தில் ஜனதா ஆட்சியானது, இத்திட்டத்தை "கிழக்கு நோக்கி செயல்பாடு" ஆக மாற்றியது.

அண்டை நாடுகளே முதன்மை முக்கியத்துவம் பெறுபவை என்றால் என்ன?

இந்தியாவின் வெளிநாட்டுகொள்கையானது நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அமைந்து நட்புறவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்படல். 

பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக பிரதமர் பதவி ஏற்றபோது, அப்பதவி ஏற்பு விழாவிற்கு தெற்காசியாவின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது பின்பு அவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது ஒரு சிறிய சார்க் மாநாடு என்று கூறப்பட்டது. 

முதன் முதலில் பதவி ஏற்ற பிறகு பிரதமர் பூடானிற்கு பயணம் செய்தார்.

12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : Recent Innovations in Foreign Policy in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்