Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | தொடர் கழித்தல்

எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு - தொடர் கழித்தல் | 2nd Maths : Term 3 Unit 1 : Numbers

   Posted On :  03.05.2022 04:18 am

2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள்

தொடர் கழித்தல்

எழில், குமரன் மற்றும் இனியன் ஆகியோர் விடுமுறைக்கு அவர்களின் பாட்டியான சின்னத்தாயின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்கள். பாட்டி அவர்களுக்காகச் சுவையான பணியாரம் செய்தார். பாட்டி அவர்களுக்கிடையே பணியாரத்தைப் பகிர்ந்தளித்த முறையைக் கவனிக்கவும். இறுதியில் ஒவ்வொருவரும் பெற்ற பணியாரத்தின் எண்ணிக்கையைக் காண்க.

தொடர் கழித்தல்

 

கற்றல்

எழில்குமரன் மற்றும் இனியன் ஆகியோர் விடுமுறைக்கு அவர்களின் பாட்டியான சின்னத்தாயின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்கள். பாட்டி அவர்களுக்காகச் சுவையான பணியாரம் செய்தார். பாட்டி அவர்களுக்கிடையே பணியாரத்தைப் பகிர்ந்தளித்த முறையைக் கவனிக்கவும். இறுதியில் ஒவ்வொருவரும் பெற்ற பணியாரத்தின் எண்ணிக்கையைக் காண்க.


குமரன் : ஆகா! பாட்டி! பணியாரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எழிலன் : எனக்கு நிறைய வேண்டும்.

இனியன் : இல்லை எனக்குத்தான் அதிகம் வேண்டும்.

பாட்டி : கவலைப்படாதீர்கள் குழந்தைகளே ! நான் பணியாரங்களை உங்களுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கின்றேன்.


பாட்டி : என்னிடம் 9 பணியாரங்கள் உள்ளன. அவற்றை நான் உங்களுக்கு ஒவ்வொன்றாகத் தருகிறேன்.

எழிலன் : நம் அனைவருக்கும் ஒரு பணியாரம் கிடைத்துள்ளது. இப்போது 3 பணியாரங்கள் தீர்ந்துவிட்டன.

குமரன் இப்போது உங்களிடம் 6 பணியாரங்கள் உள்ளன.

இனியன் : இதனை நாம் 9  3 = 6 என எழுதலாம்.


பாட்டி : இது இரண்டாவது சுற்று

இனியன் : மறுபடியும் நீங்கள் ஆளுக்கொன்று கொடுக்கலாம்பாட்டி

குமரன் : பாட்டி ! இப்போது உங்களிடம் மூன்று பணியாரங்கள் மீதமுள்ளன.

எழிலன் : இதனை நாம் 6  3 = 3 என எழுதலாம்.


பாட்டி : ஆம்! எப்படியென்றால் நான் உங்களுக்கு இன்னொரு சுற்றுப் பணியாரம் வழங்கலாம் என்று நினைக்கிறேன் எனில் இது மூன்றாவது சுற்று.

எழிலன் : அருமை! பாட்டி மூன்றாவது பணியாரமா?

குமரன் : நம் அனைவரிடமும் மூன்று பணியாரங்கள் உள்ளன. பாட்டி உங்கள் தட்டு காலியாகி விட்டதே!

இனியன் : எனவே இதனை 3  3 = 0 என எழுதலாம்.

எனவே 9  3 = 6, 6  3 = 3, 3  3 = 0. ஒன்பதிலிருந்து மூன்றுமூன்று பணியாரங்களாக 3 முறை எடுக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் 3 பணியாரங்கள் பெற்றுள்ளனர்.

 

கற்றல்  

ஒருநாள் இரவி நிறையப் பழங்களுடைய நாவல் மரத்தைப் பார்த்தான். தோட்டக்காரர் அவனுக்கு நிறையப் பழங்கள் தந்தார்.


அவன் எண்ணிப் பார்த்தபோது அவற்றில் 20 பழங்கள் இருந்தன. இரவி தன்னுடைய 5 நண்பர்களுக்கு அவற்றைத் தர நினைத்தான். அவர்களுக்கு ஒவ்வொரு பழமாகக் கொடுத்தான்.


முதலில்ஒவ்வொருவருக்கும் ஒரு நாவற்பழத்தைக் கொடுத்தான். இதனை 20  5 = 15 என எழுதலாம்.


இரவியிடம் இப்போது 15 நாவற்பழங்கள் உள்ளன. இரண்டாவது சுற்றில் அவன் ஒவ்வொருவருக்கும் ஒரு பழம் வழங்கினான். இதனை 15  5 = 10 என எழுதலாம்.


இப்போது இரவியிடம் பத்துப் பழங்கள் உள்ளன. மீண்டும் அவன் தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பழம் வழங்கினான். இதனை 10  5 = 5 என எழுதலாம்.


இப்போது இரவியிடம் 5 நாவற்பழங்கள் உள்ளன. அவன் மறுபடியும் தன் நண்பர்களுக்கு ஒவ்வொரு பழமாகக் கொடுத்தான். 5  5 = 0 இறுதியாகஇரவியிடம் பழங்கள் மீதம் இல்லை. அவன் ஒவ்வொரு பழமாக நான்கு சுற்றுகள் தந்தான். எனவேஒவ்வொரு நண்பர்களும் நான்கு பழங்கள் பெற்றார்கள்.

நாம் 20 இலிருந்து 5 ஐ நான்கு முறை தொடர்ந்து கழிக்கலாம்.

 

பயிற்சி

1. பாட்டி சின்னத்தாயிடம் 12 பணியாரங்கள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு பணியாரங்கள் கிடைக்கும்?

தொடக்கத்தில் 12 பணியாரங்களிலிருந்து 3 குழந்தைகளுக்கும் ஒன்றொன்றாகக் கொடுத்தால் 12 3 = 9 என எழுதலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் கழித்தல் கூற்றினை நிறைவு செய்க.


விடை :

12 –  3 = 9

9 – 3 = 6

 6 – 3 = 3

 3 – 3 = 0

ஒவ்வொரு குழந்தைக்கும் 4 பணியாரங்கள் கிடைக்கும்.

 

2. பாட்டியிடம் 20 பணியாரங்கள் இருந்து 4 குழந்தைகள் இருந்தார்கள் எனில்ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணியாரங்கள் கிடைக்கும்?

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கழித்தல் கூற்றினை நிறைவு செய்க.


விடை :

20 – 4 = 16

16 – 4 = 12

12 – 4 = 8

8 – 4 = 4

4 – 4 = 0

ஒவ்வொரு குழந்தைக்கும் 5 பணியாரங்கள் கிடைக்கும்.

 

முயன்று பார்

பின்வருவனவற்றிற்குக் கழித்தல் கூற்றினை எழுதுக.

i) 10இலிருந்து ஐத் தொடர்கழித்தல் செய்யவும்


விடை :

10 – 2 = 8

8 – 2 = 6

6 – 2 = 4

4 – 2 = 2

2 – 2 = 0

0 பெறுவதற்காக 2 ஆனது 10 இலிருந்து 5 முறை கழிக்கப்பட்டது.

 

ii) 20இலிருந்து 4 ஐத் தொடர்கழித்தல் செய்யவும்.


விடை :

20 – 4 = 16

16 – 4 = 12

12 – 4 = 8

8 – 4 = 4

4 – 4 = 0

0 பெறுவதற்காக 4 ஆனது 20 இலிருந்து 5 முறை கழிக்கப்பட்டது.

 

கற்றல்

எண்கோட்டினைப் பயன்படுத்தித் தொடர்கழித்தல் செய்வோம்.


தவளையால் ஒரு வாய்ப்பில் 3 அலகுகள் தாவ முடியும். தவளை 15 இலிருந்து அது ஆரம்பித்த இடத்திற்கே (0) திரும்பிச் செல்ல வேண்டுமெனில்அதனை எண்கோட்டில் மேற்கண்டவாறு குறிக்கலாம்.


15 இலிருந்து ஆரம்பித்து 0 வரை 3 -களில் தாவவும்.

தவளை 0 ஐ அடைய 5 முறை 3 அலகில் தாவி இருக்கும்.

தவளை 15 இலிருந்து ஆரம்பித்து 0 ஐ அடைய 5 முறை தாவியிருக்கும். அதாவது, 15 – 3 = 12, 12 – 3 = 9, 9 – 3 = 6, 6 – 3 = 3, 3 – 3 = 0.

 

பயிற்சி

தவளை ஐ அடையத் தாவும் நிலைகளை வளைகோடுகளால் வரைந்து காட்டவும். தொடர் கழித்தல் கூற்றுகள் மற்றும் தாவல்களின் எண்ணிக்கையை எழுதுக.

(i) 2 அலகுகள் தொலைவு


தொடர் கழித்தல் கூற்று : 20 – 2 – 2 – 2 – 2 – 2 – 2 – 2 – 2 – 2 – 2

20 – 2 = 18

18 – 2 = 16

16 – 2 = 14

14 – 2 = 12

12 – 2 = 10

10 – 2 = 8

8 – 2 = 6

6 – 2 = 4

4 – 2 = 2

2 – 2 = 0

தாவல்களின் எண்ணிக்கை 10

(ii) 5 அலகுகள் தொலைவு


தொடர் கழித்தல் கூற்று : 20 – 5 – 5 – 5 – 5

20 – 5 = 15

15 – 5 = 10

10 – 5 = 5

5 – 5 = 0

தாவல்களின் எண்ணிக்கை 4

(iii) 4 அலகுகள் தொலைவு


தொடர் கழித்தல் கூற்று : 20 – 4  – 4  – 4  – 4  – 4

20 – 4 = 16

16 – 4 = 12

12 – 4 = 8

8 – 4 = 4

4 – 4 = 0

தாவல்களின் எண்ணிக்கை 5


மனக்கணக்கு

1. வனிதாவிடம் 50 மாம்பழங்கள் இருந்தன. அவற்றை அவள் 5 பழங்களாகப் பைகளில் வைத்து விற்பனை செய்தாள் எனில், எத்தனைப் பைகளில் அனைத்து பழங்களையும் வைத்திருப்பாள்


50 – 5 = 45 – 1வது பை

45 – 5 = 40 - 2வது பை

40 – 5 = 35 – 3வது பை

35 – 5 = 30 - 4வது பை

30 – 5 = 25 – 5வது பை

25 – 5 = 20 – 6வது பை

20 – 5 = 15 - 7வது பை

15 – 5 = 10 - 8வது பை

10 – 5 = 5 - 9வது பை

5 – 5 = 0 - 10வது பை

விடை : 1௦ பைகள்

2. ஒரு பெட்டியில் 30 குறிப்பேடுகள் இருந்தன. ஆசிரியர் ஒரு மாணவருக்கு 6 குறிப்பேடுகள் வீதம் வழங்கினார். எனில், எத்தனை மாணவர்களுக்குக் குறிப்பேடுகள் கிடைத்திருக்கும்


30 – 6 = 24 – 1வது மாணவர்

24 – 6 = 18 - 2வது மாணவர்

18 – 6 = 12 - 3வது மாணவர்

12 – 6 = 6 - 4வது மாணவர்

30 – 6 = 0 - 5வது மாணவர்

விடை : 5 மாணவர்கள்

3. 20 பேர் ஓர் ஆற்றைப் படகினில் கடக்கத் திட்டமிட்டனர். ஒரு படகில் 4 பேர் பயணம் செய்யலாம் எனில்அவர்கள் அனைவரும் ஆற்றைக் கடக்கப் படகு எத்தனை முறை செல்ல வேண்டும்?


20 – 4 = 16 – 1வது படகு

16 – 4 = 12 - 2வது படகு

12 – 4 = 8 - 3வது படகு

8 – 4 = 4 - 4வது படகு

4 – 4 = 0 - 5வது படகு

விடை : 5 படகுகள்

4. மணியிடம் ₹15 உள்ளது. அவன் நாளொன்றுக்கு ₹ 3 செலவு செய்து நாளிதழ்கள் வாங்கி வந்தான் எனில்அவனால் எத்தனை நாட்களுக்கு நாளிதழ்கள் வாங்கமுடியும்?


15 – 3 = 12 – 1வது நாள்

12 – 3 = 9 - 2வது நாள்

9 – 3 = 6 - 3வது நாள்

6 – 3 = 3 - 4வது நாள்

3 – 3 = 0 - 5வது நாள்

விடை : 5 நாள்கள்

5. காவ்யாவின் சித்தப்பா அவளிடம் 20 பேரிச்சம் பழங்களைத் தந்து தினமும் 2 பழங்களைச் சாப்பிடக் கூறினார் எனில்காவ்யா பழங்களை எத்தனை நாட்களில் சாப்பிட்டு முடித்திருப்பாள்?


20 – 2 = 18 – 1வது நாள்

18 – 2 = 16 - 2வது நாள்

16 – 2 = 14 - 3வது நாள்

14 – 2 = 12 - 4வது நாள்

12 – 2 = 10 - 5வது நாள்

10 – 2 = 8 – 6வது நாள்

8 – 2 = 6 - 7வது நாள்

6 – 2 = 4 - 8வது நாள்

4 – 2 = 2 - 9வது நாள்

2 – 2 = 0 - 10வது நாள்

விடை : 10 நாள்கள்

 

 

Tags : Numbers | Term 3 Chapter 1 | 2nd Maths எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு.
2nd Maths : Term 3 Unit 1 : Numbers : Repeated Subtraction Numbers | Term 3 Chapter 1 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள் : தொடர் கழித்தல் - எண்கள் | பருவம்-3 அலகு 1 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள்