Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | தாவரங்களில் இனப்பெருக்கம் - போட்டித் தேர்வு கேள்விகள்
   Posted On :  11.08.2022 06:39 pm

12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

தாவரங்களில் இனப்பெருக்கம் - போட்டித் தேர்வு கேள்விகள்

தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்

போட்டித் தேர்வு கேள்விகள்


தாவரங்களில் இனப்பெருக்கம்

 

1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எத்தாவரம் இலைவழி இனப்பெருக்கம் செய்கிறது?

அ) அகேவ்

ஆ) பிரையோஃபில்லம்

இ) கிளாடியேலஸ்

ஈ) உருளைக்கிழங்கு

விடை : ஆ) பிரையோஃபில்லம்

 

2. மூடிய மலர் மகரந்தச் சேர்க்கையின் நன்மை

அ) அதிக மரபியல் வேறுபாடு

ஆ) அதிக வீரியமுள்ள சந்ததி

இ) மகரந்தச் சேர்க்கை காரணிகளை சாராதநிலை

ஈ) விவிபேரி

விடை : இ) மகரந்தச் சேர்க்கை காரணிகளை சாராதநிலை

 

3. உண்ண த்தகுந்த தரைகீழ் தண்டிற்கு எடுத்துக்காட்டு

அ) கேரட்

ஆ) நிலக்கடலை

இ) சர்க்கரை வள்ளிக்கிழங்கு

ஈ) உருளைக்கிழங்கு

விடை : ஈ) உருளைக்கிழங்கு

 

4. சந்தையில் கிடைக்கும் மகரந்தத்துக்கள் மாத்திரைகள்

அ) சோதனைக்குழாய் கருவுறுதல்

ஆ) பயிர்பெருக்க நிகழ்வுகள்

இ) கூடுதல் ஊட்டப்பொருள்

ஈ) புறவாழிட பேணுகை

விடை : இ) கூடுதல் ஊட்டப்பொருள்

 

5. கெய்ட்டனோகேமி என்பது

அ) ஒரு மலரின் மகரந்தத்துக்கள் அதே தாவரத்தின் மற்றொரு மலரை கருவுறச் செய்தல்.

ஆ) ஒரு மலரின் மகரந்தத்துக்கள் அதே மலரை கருவுறச் செய்தல்

இ) ஒரே சிற்றினக் கூட்டத்திலுள்ள ஒரு தாவர மலரின் மகரந்தத்துக்கள் வேறொரு தாவர மலரைக் கருவுறச் செய்தல்

ஈ) வெவ்வேறு சிற்றினக் கூட்டத்திலுள்ள தாவர மலர்களிடையே கருவுறுதல் நடைபெறுதல்

விடை : அ) ஒரு மலரின் மகரந்தத்துக்கள் அதே தாவரத்தின் மற்றொரு மலரை கருவுறச் செய்தல்.

 

 

6. கீழ்கண்டவற்றில் எது புது மரபியல் சேர்க்கையை உருவாக்கி வேறுபாடுகளைத் தருகிறது?

அ) தழைவழி இனப்பெருக்கம்

ஆ) பார்த்தினோஜெனிசிஸ்

இ) பாலினப் பெருக்கம்

ஈ) சூல்திசு பல்கருநிலை

விடை : இ) பாலினப் பெருக்கம்

 

7. மூடுவிதைத் தாவரங்களில் செயல்படும் பெருவித்து எதுவாக வளர்ச்சியடைகிறது?

அ) கருவூண்திசு

ஆ) கருப்பை

இ) கரு

ஈ) சூல்

விடை : ஆ) கருப்பை

 

8. கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது உண்மையல்ல

அ) பல சிற்றினங்களின் மகரந்தத்துக்கள்கள் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

ஆ) திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்பட மகரந்தத்துக்கள் பயிர் பெருக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இ) மகரந்தப்பை வெடித்தலுக்கு டபீட்டம் உதவுகிறது.

ஈ) மகரந்தத்துக்களின் எக்சைன் ஸ்போரோபொலினினால் ஆனது.

விடை : இ) மகரந்தப்பை வெடித்தலுக்கு டபீட்டம் உதவுகிறது.

 

9. இருமடிய பெண் தாவரத்தை நான்மடிய ஆண் தாவரத்தோடு கலப்பு செய்து பெறப்பட்ட விதையிலுள்ள கருவூண் திசுவின் மடியநிலை

அ) ஐம்மடியம்

ஆ) இருமடியம்

இ) மும்மடியம்

ஈ) நான்மடியம்

விடை : ஈ) நான்மடியம்

 

10. கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவர அமைப்பு இணையில் எது ஒருமடிய குரோமோசோம்களைப் பெற்றுள்ளது

அ) முட்டை உட்கரு மற்றும் இரண்டாம் நிலை உட்கரு

ஆ) பெருவித்து தாய்செல் மற்றும் எதிரடிச் செல்கள்

இ) முட்டை செல் மற்றும் எதிரடிச்செல்கள்

ஈ) சூல்திசு மற்றும் எதிரடிச் செல்கள்

விடை : இ) முட்டை செல் மற்றும் எதிரடிச்செல்கள்

 

11. இருவிதையிலைத் தாவரத்தில் பொதுவாக கருப்பையில் காணப்படும் உட்கருக்களின் அமைப்பு

(அ) 2 + 4 +2

ஆ) 3 + 2 + 3

இ) 2 + 3 + 3

ஈ) 3 + 3 +2

விடை : ஆ) 3 + 2 + 3

 

12. காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்கள்

அ) சிறிய, பூந்தேன் சுரக்கும், உலர் மகரந்தத்துகள்கள்

ஆ) சிறிய , பிராகசமான நிறமுடைய , அதிக அளவு மகரந்தத்துகள்கள் உருவாக்குபவை

இ) சிறிய, அதிக அளவு மகரந்தத்துகள்கள் உருவாக்குபவை

ஈ) பெரிய, மிகுதியான பூந்தேன் மற்றும் மகரந்தத்துகள்கள் உருவாக்குபவை

விடை : இ) சிறிய, அதிக அளவு மகரந்தத்துகள்கள் உருவாக்குபவை

 

13. நூலிழை சாதனத்தின் பணி  

அ) சூலக முடிக்கு ஏற்புடைய மகரந்தத்துக்களைக் கண்டறிதல்

ஆ) உருவாக்க செல் பகுப்படைதலைத் தூண்டுதல்

இ) பூந்தேன் உற்பத்தி செய்தல்

ஈ) மகரந்தக்குழாய் நுழைதலுக்கு வழிகாட்டுகிறது

விடை : ஈ) மகரந்தக்குழாய் நுழைதலுக்கு வழிகாட்டுகிறது

 

14 தென்னையின் இளநீர் குறிப்பிடுவது

அ) எண்டோகார்ப்

ஆ) சதைப்பற்றுடைய மீசோகார்ப்

இ) தனி உட்கரு சார் முன்கரு

ஈ) தனி உட்கருசார் கருவூண்திசு

விடை : ஈ) தனி உட்கருசார் கருவூண்திசு

 

15. நீர் ஹையாசந்த் மற்றும் நீர் அல்லியில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதற்கு உதவும் முகவர்

அ) பூச்சிகள் அல்லது காற்று

ஆ) பறவைகள்

இ) வௌவால்கள்

ஈ) நீர்

விடை : அ) பூச்சிகள் அல்லது காற்று

 

16. பெரிஸ்பெர்ம் கருவூண்திசுவிலிருந்து வேறுபடும் விதம்

அ) ஒருமடிய திசுவாக இருத்தல்

ஆ) சேமிப்பு உணவு இல்லாதிருத்தல்

இ) இருமடிய திசுவாக இருத்தல்

ஈ) இரண்டாம் நிலை உட்கருவோடு பல விந்துகள் இணைந்து உருவாதல்

விடை : இ) இருமடிய திசுவாக இருத்தல்

 

17. மூடுவிதைத் தாவரங்களில் எந்த செல் பகுப்புற்று ஆண் கேமீட்கள் உருவாகின்றன?

அ) நுண்வித்து தாய்செல்

ஆ) நுண்வித்து

இ) உருவாக்க செல்

ஈ) தழைவழிச்செல்

விடை : இ) உருவாக்க செல்

 

18. வேற்றிட பல்கருநிலை எனும் கருவுறா இனப்பெருக்க வகையில் கரு எதிலிருந்து நேரடியாகத் தோன்றுகிறது?

அ) கருப்பையிலுள்ள சினர்ஜிட் அல்லது எதிரடிச்செல்கள்

ஆ) சூல்திசு அல்லது சூல்உறைகள்

இ) கருமுட்டை

ஈ) சூலிலுள்ள துணை கருப்பைகள்

விடை : ஆ) சூல்திசு அல்லது சூல்உறைகள்

 

19. ஒரு தானிய வகையில் கருவின் ஒரே ஒரு விதையிலை எது?

அ) முளைவேர் உறை

ஆ) ஸ்குட்டல்லம்

இ) முன் இல

ஈ) முளை குருத்து உறை

விடை : ஆ) ஸ்குட்டல்லம்

 

20. சூல் வளைவதால் சூல்திசு மற்றும் கருப்பை சூல்காம்பிற்கு செங்குத்தாக அமைந்திருக்கும் வகை

அ) கேம்ஃபைலோடிராபஸ்

ஆ) அனாடிராபஸ்

இ) ஆர்தோடிராபஸ்

ஈ) ஹெமி அனாடிராபஸ்

விடை :ஈ) ஹெமி அனாடிராபஸ்

 

21. இரட்டைக் கருவுறுதலின் போது கருவூண் திசு எதிலிருந்து உருவாகிறது?

அ) இரண்டு துருவ உட்கரு மற்றும் ஒரு ஆண் கேமீட்

ஆ) ஒரு துருவ உட்கரு மற்றும் ஒரு ஆண் கேமீட்

இ) முட்டை மற்றும் ஆண் கேமீட்கள்

ஈ) இரண்டு துருவ உட்கரு மற்றும் இரண்டு ஆண் கேமீட்கள்

விடை : அ) இரண்டு துருவ உட்கரு மற்றும் ஒரு ஆண் கேமீட் 

12th Botany : Competitive Examination Questions : Reproduction in plants - Competitive Examination Questions in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள் : தாவரங்களில் இனப்பெருக்கம் - போட்டித் தேர்வு கேள்விகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : போட்டித் தேர்வு கேள்விகள்