புவியியல் - வளங்கள் | 12th Geography : Chapter 3 : Resources

   Posted On :  21.07.2022 06:57 pm

12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள்

வளங்கள்

வளம் என்பது இயற்கையாக காணப்படும் பயன்படுத்தக்கூடிய பொருள் ஆகும். அதை சமூகம் பொருளாதார நல வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படகூடிய பொருள் எனக் கருதுகிறது.

அலகு 3

வளங்கள்



அலகு கண்ணோட்டம்

1. அறிமுகம்

2. வளங்களின் வகைகள்

3. கனிம வளங்கள்

4. கனிமங்களின் உலகப் பரவல்

5. ஆற்றல் வளங்கள் 3.6 வளங்களைப் பாதுகாத்தல்

 

கற்றல் நோக்கங்கள்

• வளங்களின் வகைப்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்

• உலகளவிலான வள இருப்பை மதிப்பீடு செய்தல்

• வளங்களின் சீரற்ற பரவலுக்கான காரணங்களைக் கண்டறிதல்

• வளங்களைப் பாதுகாக்கும் முறைகளை விவரித்தல்

 

அறிமுகம்

1977-ம் ஆண்டு விண்ணிற்கு அனுப்பப்பட்ட விண்கலம் வாயேஜர் 1 மணிக்கு 62140 கி.மீ அல்லது நொடிக்கு 17கி.மீ வேகத்தில் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? அதில் எவ்வகை எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது ஹைட்ராசின் (Hydrazine) எனும் எரிபொருளாகும். நம் எதிர்கால எரிபொருள் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிச்சயமாக அது ஹைட்ரஜன் தான். ஹைட்ரஜன் எவ்வாறு ஒரு முக்கிய எதிர்கால எரிபொருளாக விளங்கும் என்பதைப்பற்றி சிந்திக்கவும்.

வளம் என்பது இயற்கையாக காணப்படும் பயன்படுத்தக்கூடிய பொருள் ஆகும். அதை சமூகம் பொருளாதார நல வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படகூடிய பொருள் எனக் கருதுகிறது. விருப்பமுள்ள, ஆரோக்கியமான மற்றும் திறன்மிக்க தொழிலாளர்களும் ஒரு மதிப்பு மிக்க வளமே ஆவர். ஆனால் வளமான மண் அல்லது பெட்ரோலியம் போன்ற வளங்களை எளிதில் பெற இயலாத சூழலில்

மனித வளங்களின் செயல்தன்மை குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடும்.

எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வளங்களே அடிப்படையாக உள்ளன. பல்வேறு நாடுகளிடையே காணப்படும் பொருளாதார வளர்ச்சியின் வேறுபாடுகள் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைப் பொறுத்தே அமைகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியில் செழிப்பாக இருப்பதற்கு காரணம் அங்கு காணப்படும் அதிகமான இயற்கை, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களே ஆகும். மாறாக பெரும்பாலான ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் இயற்கையிலேயே வளங்கள் மிகுந்து காணப்பட்டாலும் அறிவு வளர்ச்சியின்மை காரணமாக அவ்வளங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. மேலும் அவைகள் மனித தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவும் இல்லை.

Tags : Geography புவியியல்.
12th Geography : Chapter 3 : Resources : Resources Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள் : வளங்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 3 : வளங்கள்