Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | காலனிகளுக்கான போட்டி

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - காலனிகளுக்கான போட்டி | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

   Posted On :  04.07.2022 11:48 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

காலனிகளுக்கான போட்டி

முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் நோக்கம் மிகை உற்பத்தி செய்வதாகும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட உபரிச் செல்வம் மென்மேலும் தொழிற்சாலைகள் அமைக்கவும் இருப்புப்பாதை அமைக்கவும் நீராவிக்கப்பல்கள் கட்டவும் அல்லது இவை போன்ற பிறவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது.

காலனிகளுக்கான போட்டி

முதலாளித்துவ நாடுகளின் சந்தைகளுக்கான போட்டி

முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் நோக்கம் மிகை உற்பத்தி செய்வதாகும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட உபரிச் செல்வம் மென்மேலும் தொழிற்சாலைகள் அமைக்கவும் இருப்புப்பாதை அமைக்கவும் நீராவிக்கப்பல்கள் கட்டவும் அல்லது இவை போன்ற பிறவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகவல் பரிமாற்றம், போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்ட புரட்சியானது ஆப்பிரிக்காவிலும் ஏனைய பகுதிகளிலும் ஐரோப்பிய விரிவாக்கம் அரங்கேறத் துணைபுரிந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கருத்தைக் கவரும் ஒரு அம்சம் யாதெனில் ஐரோப்பா, மேலாதிக்க சக்தியாக உருப்பெற்றதும் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் காலனிகளாக்கப்பட்டு சுரண்டப்பட்டதுமாகும்.

ஐரோப்பிய நாடுகளிடையே இங்கிலாந்து ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக முதலாளித்துவத்துக்குத் தலைமையாகவும் விளங்கியது. சந்தை, கச்சாப்பொருள் ஆகியவற்றுக்கான தேவைகள் வளர்ந்து கொண்டேயிருந்ததால் சுரண்டுவதற்காகத் தங்கள் பேரரசை விரிவாக்கம் செய்ய முதலாளித்துவ நாடுகள் உலகத்தைச் சுற்றிப் போட்டியில் இறங்கின.

முற்றுரிமை முதலாளித்துவத்தின் எழுச்சி

1870ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுதந்திரப்போட்டி முதலாளித்துவமானது முற்றுரிமைகளின் முதலாளித்துவமாக மாறியது. ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கியப் பண்புக்கூறான தொழில், நிதி ஆகிய இரண்டும் அணி சேர்ந்து சந்தைகளில் தங்களின் பொருள்கள் மற்றும் மூலதனத்திற்கான லாபத்தைத் தேடுமென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெளிவாக உணரப்பட்டது. சுதந்திரவணிகம் எனும் பழையக் கோட்பாடு சரிந்து வீழ்ந்தது. அமெரிக்காவில் கூட்டு நிறுவனங்களும் ஜெர்மனியில் வணிகக் கூட்டிணைப்புகளும் உருவாயின.

கூட்டு நிறுவனம் என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும். தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.

ஏகாதிபத்தியமும் அதன் முக்கியப்பண்புக்கூறுகளும்


முதலாளித்துவம் தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச் செல்கிறது. முதலாளித்துவத்தின் உச்சகட்டமே ஏகாதிபத்தியம் என லெனின் கூறுகிறார். மிகப்பெருமளவிலான செய்யப்பட்ட பொருட்களுக்குச் சந்தைகள் மட்டுமல்லாமல் பெருமளவிலான கச்சாப்பொருள்களும் தேவைப்பட்டன. ஏகாதிபத்தியம் என்பது காலனிகளைப் பற்றியது மட்டுமல்ல, அது ஒரு முழுமையான முறையாக இராணுவமயமாக்கத்திற்கும் முழுமையான போருக்கும் இட்டுச்சென்றது.

Tags : Outbreak of World War I and Its Aftermath | History முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Scramble for Colonies Outbreak of World War I and Its Aftermath | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : காலனிகளுக்கான போட்டி - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்