Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம்

பப்பாளி, மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம் - தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் - மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம் | 12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance

   Posted On :  30.07.2022 09:44 pm

12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம்

மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம்

மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம்

சியா மெய்ஸ் (மக்காச்சோளம்) ஒருபால் மலர் தாவரத்திற்கான (monoecious) எடுத்துக்காட்டாகும், அதாவது ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படுகின்றன. இது இரண்டு வகையான  மஞ்சரிகளைக் கொண்டுள்ளது.

தண்டு நுனி ஆக்குத்திசுவிலிருந்து உருவாகும் நுனி மஞ்சரி மகரந்தத்தாள்களை மட்டும் பெற்ற சிறு மலர்கள் டாசல் (tassel) அல்லது கதிர் குஞ்சம் என அழைக்கப்படுகிறது. கோண மொட்டிலிருந்து உருவாகும் பக்கவாட்டு மஞ்சரி சூலகம் மட்டும் பெற்ற சிறு மலர்கள் கதிர் (ear or cob) என அழைக்கப்படுகிறது. மக்காச்சோளத்தின் ஒருபால் தன்மை கதிர் சிறு மலர்களின் மகரந்தத்தாள் மற்றும் டாசலில் அமைந்த சூலகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதைவின் காரணமாக உருவாக்கப்படுகிறது. இரண்டு தனித்தனியான இணை மரபணுக்களுக்குப் பதிலாக, ba என்ற மரபணு கருவுறாத் தாவரத்திற்கும் (Barren plant) ‘ts’ என்ற மரபணு டாசல் விதைக்கும் (Tassel seed) குறிப்பிடப்படும். இது ஒருபால் தன்மை மற்றும் இருபால் தன்மையின் (அரிதாக) வேறுபாட்டிற்குக் காரணமாக உள்ளது. ஒத்த பண்பிணைவு கொண்ட கருவுறாத் தாவரத்தின் அல்லீல் (ba) பட்டிழைகள் மற்றும் கதிர் மஞ்சரியை நீக்குவதுடன் ஆண் மலர்கள் கொண்ட தன்மையாக மாற்றி விடுகிறது. டாசல் விதைக்கான அல்லீல் (ts) டாசலை மகரந்தம் அற்ற பெண் மலராக மாற்றி விடுகிறது. அது மகரந்தத்தை உற்பத்தி செய்வதில்லை . அட்டவணை 3.7ல் இந்த அல்லீல்களின் சேர்க்கையின் அடிப்படையில் பால்தன்மை வெளிப்பாடு முடிவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரும்பான்மையான சடுதிமாற்றங்கள் ஜிப்ரெலின் உற்பத்திக் குறைபாட்டினால் ஏற்படுகின்றன. கதிர்களில் காணப்படும் சிறுமலர்களின் மகரந்தத்தாள் ஒடுக்கத்திற்கு ஜிப்ரெலின்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Tags : papaya, Sphaerocarpos, maize - Botany : Chromosomal Basis of Inheritance பப்பாளி, மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம் - தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்.
12th Botany : Chapter 3 : Chromosomal Basis of Inheritance : Sex determination in plants papaya, Sphaerocarpos, maize - Botany : Chromosomal Basis of Inheritance in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம் - பப்பாளி, மக்காச்சோளத்தில் பால் நிர்ணயம் - தாவரவியல் : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 3 : குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்