பருவம்-3 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - சக்தியின் பயணம் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey

   Posted On :  28.04.2022 04:12 pm

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 3 : சக்தியின் பயணம்

சக்தியின் பயணம்

நீங்கள் கற்க இருப்பவை * போக்குவரத்தின் வகைகள் * சாலைப் பாதுகாப்பு

அலகு 3

சக்தியின் பயணம்

 

 

நீங்கள் கற்க இருப்பவை

* போக்குவரத்தின் வகைகள்

* சாலைப் பாதுகாப்பு

 

சாலை வழிப் போக்குவரத்து

 

சக்தி, அவனுடைய அப்பா, அம்மா, சகோதரிகள் கயல், கவிதா ஆகியோருடன் திருச்சியில் வசித்து வருகிறான். இவர்கள் விடுமுறையில் சென்னைக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். அவர்கள் தொடர்வண்டியில் பயணிக்க தொடர்வண்டி நிலையம் செல்ல வேண்டும்.

சக்தி: நாம் தொடர்வண்டி நிலையத்திற்கு எவ்வாறு செல்வது?

 

பல்வேறு சாலை போக்குவரத்து வாகனங்கள்


பேருந்து

எரிபொருள் தேவை. 50க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம்.

மகிழுந்து

எரிபொருள் தேவை. ஐந்து பேர் வரை பயணிக்கலாம்.

மூவுருளி (தானி)

எரிபொருள் தேவை. இருவர் (அல்லது) மூவர் பயணிக்கலாம்.

சரக்கு உந்து

பொருள்களை ஏற்றிச்செல்லும்.

அவசர ஊர்தி

உடனடி சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்.)

தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம்

தீயை அணைக்கப் பயன்படும்.

ஈருருளி

இருவர் பயணிக்கலாம்.

மாட்டு வண்டி

இயங்க எரிபொருள் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்தது

மிதிவண்டி

எளிய போக்குவரத்து வாகனம் மிதிவண்டி ஓட்டுவது உடலுக்கு நல்லது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது

 

* இவற்றுள் எந்த வாகனத்தை சக்தியின் குடும்பத்தினர் தேர்ந்தெடுப்பர்கலந்துரையாடி உங்களின் பதிலை எழுதுக. மூவுருளி (தானி)

 

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

"வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது" என்பது நமக்குத் தெரியும். புகையை வெளியேற்றாத சில வாகனங்களின் பெயர்களை உங்களால் கூற முடியுமா?

விடை : மாட்டு வண்டி, மிதிவண்டி


 

மெதுவாக செல்லும் வாகனத்திற்கு (குறியிடுக. அது ஏன் மெதுவாக செல்கிறது எனக் கலந்துரையாடுக.



மிதிவண்டி நமது உடல் சக்தியால் செயல்படுகிறது. ஆனால் மீதமுள்ள இரண்டு இயந்திரம் மூலம் செயல்படுகிறது.

 

தொடர்வண்டி போக்குவரத்து


சக்தியும் அவன் குடும்பத்தினரும் தொடர்வண்டி நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கே உணவு, பத்திரிக்கை விற்பவர்கள், கொடி அசைக்கும் நிலைய அதிகாரி, சுமை தூக்கும் தொழிலாளிகள், பல்வகைத் தொடர்வண்டிகள் போன்றவற்றைப் பார்த்தனர். இவற்றைக் கண்ட கயல், "இந்த இடம் எவ்வளவு பரபரப்பாக உள்ளது" என்றாள்.

 



அதற்கு அவளின் அம்மா "ஆமாம், தொடர்வண்டி, குறைந்த நேரத்தில் அதிகப் பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஏற்றிச் செல்ல உதவுகிறது" என்றார். 

 

தொடர்வண்டியின் வகைகள்

மக்களை ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகள்

பயணிகள் தொடர்வண்டி - அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். நகரங்களுக்குள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யப் பயன்படும்.



பெருநகரத் (மெட்ரோ) தொடர்வண்டி - நகரங்களுக்குள் பயணிக்க பயன்படும்.



அதிவிரைவு தொடர்வண்டி - குறிப்பிட்ட நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.


 

சரக்கு ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகள்


சரக்குத் தொடர்வண்டிகள்

சில தொடர்வண்டிகள் இயங்குவதற்கு நிலக்கரி அல்லது டீசல் போன்ற எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே இவ்வகைத் தொடர்வண்டிகள் புகையை வெளிவிடுகின்றன. மின் தொடர்வண்டிகள் (மின்சார ரயில்) புகையை வெளிவிடுவதில்லை. தொடர்வண்டிகள் தண்டவாளத்தின் (இருப்புப் பாதையின்) மேல் செல்கின்றன.

சக்தியும் அவன் குடும்பத்தினரும் தொடர்வண்டியில் ஏறி சென்னையை வந்தடைந்தனர்.

சக்தியும் அவன் குடும்பத்தினரும் சென்னைக்கு வர எவ்வகைத் தொடர்வண்டியைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை உங்களால் கண்டறிய முடியுமா?

அதிவிரைவு தொடர்வண்டி


கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ. பயணிகள் தொடர்வண்டி அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.

ஆ. சரக்குத் தொடர்வண்டி சரக்குகளை ஏற்றிச் செல்லும்.

இ. பயணிகள், பெருநகரத் (மெட்ரோ) தொடர்வண்டி, அதிவிரைவு தொடர்வண்டி தொடர்வண்டிகள் பயணிகளை ஏற்றிச் செல்லும். 

 

நீர் வழி போக்குவரத்து


சக்தியும் அவன் குடும்பத்தினரும் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்த்தனர். அவர்கள் துறைமுகத்தையும் சென்று பார்வையிட்டனர்.

சக்தி: இங்கு அதிக படகுகள் உள்ளன.



 

அம்மா: இவற்றுள் சிறியதாக இருப்பவை படகுகள் மற்றும் பெரியதாக இருப்பவை கப்பல்கள். கப்பல் மூலம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அதிக அளவிலான பயணிகளையும் சரக்குப் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.

 

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

நீரில் செல்லும் வாகனங்களுக்குச் சக்கரங்கள் இருக்கின்றனவாஅவை எவ்வாறு நகர்கின்றன?

 

நீர்வழி வாகனங்களின் வகைகள்


கட்டுமரம்

துடுப்புகளை பயன்படுத்தி நகரும். மீன்பிடிக்க உதவுகிறது.

விசைப்படகு

எரிபொருளை கொண்டு நகரும். மீன்பிடிக்கவும்மகிழ் உலாவுக்கும் பயன்படுகிறது.

பாய்மரப் படகு

பாய்மரங்களால் நகரும். பயணத்திற்கும் போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கப்பல்

எரிபொருளால் நகரும். நீண்ட தூரத்திற்கு மக்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்ல உதவுகிறது.


ஏரி மற்றும் ஆறுகளில் சிறிய தூரத்தைக் கடக்கப் பரிசல் பயன்படுகிறது. இதில் ஐந்து முதல் ஆறு நபர்கள் வரை பயணிக்கலாம்.



குழந்தைகள் கடற்கரையில் விளையாடினர்.

கவிதா: இந்தப் பயணம் எவ்வளவு இனிமையாக உள்ளது!


 

வாகனங்களின் பெயர்களை எழுதுக.



 கப்பல்பாய்மரப் படகுவரிசைப் படகு


வான்வழிப் போக்குவரத்து


விடுமுறை நாள்கள் முடியவிருப்பதால்சக்தியின் குடும்பம் திருச்சிக்குத் திரும்பச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். சக்திகவிதாகயல் மூவரும் விமானத்தைக் கண்டு மிகவும் வியந்தனர்.

கயல்: விமானங்கள் தரையில் இறங்குவதையும்மேலே ஏறுவதையும் பாருங்களேன்! அப்பாநானும் ஒரு விமானியாக விரும்புகிறேன்.

அப்பா: சரிம்மாஉன்னால் முடியும். விமானங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன என்பதைக் கவனி. இவையே மிக விரைவாகச் செல்லும் போக்குவரத்து.

சக்தி: விமானத்திற்குக் கூட எரிபொருள் தேவையா அப்பா?

அப்பா: ஆமாம். இதற்கும் ஒரு சிறப்பு வகை எரிபொருள் தேவை.

 

வானூர்தியின் வகைகள்



இது ஓர் உலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்). இதில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பயணம் செய்யலாம். இது புயல் மற்றும் வெள்ளத்தின்போது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு பொருள்களை விநியோகிக்கவும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.



இது ஒரு வானூர்தி. மக்கள் ஒரு நகரம் அல்லது நாட்டிலிருந்து மற்றொரு நகரம் /  நாட்டிற்குச் செல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர். இதில் பொருள்களையும் ஏற்றிச் செல்லலாம்.



இவை வெப்பக் காற்று பலூன்கள். நாம் இவற்றின் மூலம் காலநிலையை அறிவதுடன் விளம்பரத்திற்கும் விளையாட்டிற்கும் பயன்படுத்துகிறோம்.

 

சிந்தித்துக் கலந்துரையாடுவோமா!

எப்பொழுதாவது வானில் இதுபோன்ற வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்திருக்கிறீர்களாஅவை என்ன?



ஆம். ராக்கெட் ஏவுதலின் தீ மற்றும் புகை

 

வானில் செல்லும் வாகனங்களுக்கு (குறியிடுக.



 

சாலைப் பாதுகாப்பு


இந்தக் குறியீடுகளை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

இது குறித்து உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுங்கள்.

நடப்பதற்கு எப்பொழுதும் நடைபாதையைப் பயன்படுத்த வேண்டும்.

நடைபாதை இல்லாத சாலைகளில்சாலை உங்களுக்கு வலப்பக்கத்தில் இருக்குமாறு நடக்க வேண்டும்.



 

மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும்.



மகிழுந்தில் பயணம் செய்யும்போது இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணிய வேண்டும்.



சாலையின் குறுக்கே ஓடக் கூடாது.



சாலையில் தனியாகச் செல்லாமல் பெரியவர்கள் துணையோடு செல்ல வேண்டும்.



சாலைகளைக் கடப்பதற்கு மேம்பாலங்களையோ அல்லது சுரங்கப்பாதை வழிகளையோ பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் (வரிக்குதிரைக் கோட்டில்) கடக்க வேண்டும்.




சாலைக் குறியீட்டில் உள்ள மனிதனின் உருவம் பச்சை நிறத்துக்கு மாறியவுடன் சாலையைக் கடக்க வேண்டும்.


 

நில்

முன்னதாகப் புறப்படு

மெதுவாகச் செல்

பாதுகாப்பாகச் சேர்



 

சாலையும் இருப்புப் பாதையும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தை இருப்புப்பாதைச் சந்திக் கடவு (Level Crossing) என்கிறோம். இவ்விடத்தில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்போது கடக்க முயற்சிக்கக் கூடாது.



 

சாலைக் குறியீடுகள்


பள்ளிப் பகுதி (மெதுவாக செல்லவும்)

ஆளில்லா தொடர்வண்டி கடக்கும் இடம் (கவனமுடன் கடக்கவும்)

பாதசாரிகள் கடக்குமிடம் (இங்கு மட்டும் சாலையைக் கடக்கவும்)

பேருந்து நிறுத்தம் (பேருந்துகள் இங்கு நின்று செல்லும்)

இருப்புப்பாதைச் சந்திக் கடவு (கடப்பதற்கு முன் இருபுறமும் பார்க்கவும்)

ஒலி எழுப்பாதே

வாகனங்களை இங்கே நிறுத்தாதீர்

மருத்துவமனைப் பகுதி (ஒலி எழுப்பாதே)

'U' வளைவு (இங்கு திரும்பவும்)

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1.  இந்த சாலைக் குறியீடு ------------------------- அருகில் இருப்பதைக் குறிக்கிறது. 

அ. மருத்துவமனை

ஆ. பள்ளி

இ. பேருந்து நிறுத்தம்

விடை : ஆ. பள்ளி

 

2.  இந்த சாலைக் குறியீடு குறிப்பிடுவது -------------------------

அ. பேருந்து நிறுத்தம்

ஆ. வாகனங்கள் நிறுத்தும் இடம்

இ. இருப்புப்பாதைச் சந்திக் கடவு

விடை : இ. இருப்புப்பாதைச் சந்திக் கடவு

Tags : Term 3 Chapter 3 | 2nd EVS Environmental Science பருவம்-3 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்.
2nd EVS Environmental Science : Term 3 Unit 3 : Shakthi's Journey : Shakthi's Journey Term 3 Chapter 3 | 2nd EVS Environmental Science in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 3 : சக்தியின் பயணம் : சக்தியின் பயணம் - பருவம்-3 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 3 : சக்தியின் பயணம்