Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | திட நிலைமை : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் - திட நிலைமை : சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 6 : Solid State

   Posted On :  19.08.2022 01:47 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 6 : திட நிலைமை

திட நிலைமை : சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : திட நிலைமை : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : திட நிலைமை

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

) சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள் 

) அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

) இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள் 

) இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

விடை : ) இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள் 


2. AxByஅயனிப்படிகம் fcc அமைப்பில் படிக மாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் A அயனியானது கனசதுரத்தின் மையத்திலும் அமைந்துள்ளது. எனில் AxBy ன் சரியான வாய்ப்பாடு 

) AB 

) AB

) A3B

) A8B6

விடை : ) AB3 

விளக்கம்

A அயனியின் எண்ணிக்கை = (NC/8) = (8/8) = 1

B அயனியின் எண்ணிக்கை = (Nf/2) = (6/2) = 4

எளிய வாய்பாடு AB3  


3. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் 

) 1:1 

) 1:2 

) 2:1 

) 1:4

விடை : ) 1:2 

விளக்கம்

நெருங்கிப் பொதிந்த அணுக்களின் எண்ணிக்கை = N எனில் 

நான்முகி துளைகளின் எண்ணிக்கை = 2N 

எண்முகி துளைகளின் எண்ணிக்கை = N 

எனவே N: 2N=1:2 


4. திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு 

) சகப்பிணைப்பு திண்மம் 

) உலோகத் திண்மம் 

) மூலக்கூறு திண்மம் 

) அயனி திண்மம்

விடை : ) மூலக்கூறு திண்மம் 

விளக்கம் : அணுக்கோவை புள்ளிகளில் CO2 மூலக்கூறுகள் இடம் பெற்றுள்ளன.


5. கூற்று : மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்

காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு a ≠b+≠ மேலும்  ɑ = ɤ = 90°, B≠90° 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 

விடை : ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

விளக்கம் : அணுக்கோவை புள்ளிகளில் CO2 மூலக்கூறுகள் இடம் பெற்றுள்ளன


6. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் Fஅயனிகளின் அணைவு எண்கள் முறையே 

) 4 மற்றும்

) 6 மற்றும் 6

) 8 மற்றும்

) 4 மற்றும் 8

விடை : ) 8 மற்றும் 4  

விளக்கம் : CaF2 கனசதுர நெருங்கி பொதிந்த அமைப்பினைப் பெற்றுள்ளது. CaF2 அயனிகள் முகப்புடைய கனச் சதுர அமைப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு Ca2+ அயனிகள் 8 F- அயனிகளாலும் ஒவ்வொரு F- அயனியும் F- அயனிகளாலும் சூழப்பட்டு உள்ளன. எனவே F- அணைவு எண் 4Ca2+ன் அணைவு எண் 8. 


7. அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக் கூடுகளின் எண்ணிக்கை யினைக் கண்டறிக. இத்தனிம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது

) 6.023 × 1023

) 6.023 × 1022

) (6.023 ×  1023

) (6.023 × 1023 ) / (8 × 40 )

 விடை : ) 6.023 × 1022

விளக்கம்

Bcc அலகுகூட்டில் 2 அணுக்கள் = 1 அலகு கூடு

தனிமத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை

8g மோல்களின் எண்ணிக்கை =  (8g / 40g mol-1) = 0.2 mol

1 மோலில் 6.023 × 1023 அணுக்கள் உள்ளன

0.2 மோலில் 0.2 × 6.023  × 1023 அணுக்கள் 

(1 அலகு கூடு / 2 அணுக்கள்) × .2 × 6.023 × 1023

6.023 × 1022 அணுக்கள் உள்ளன


8. வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை 

) 8 

) 6 

)1 

) 4

விடை : ) 8 

விளக்கம் : வைரத்தில் கார்பன் fcc அமைப் பானது, கார்பன் மூலைகளிலும் முகப்பு மையத்திலும் பாதியளவிலான நான்முகி வெற்றிடங்களும் அமைகிறது.

( NC / 8) + (Nf / 2) + 4C நான்முகி துளைகளில் உள்ள அணுக்கள்

(8 / 8) + (6 / 2) +4 = 8


9. ஒரு திண்மத்தின் M என்ற அணுக்கள் ccp அணிக் கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும் (1 / 3) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணு வால் நிரப்பப்பட்டுள்ளது: M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம் 

) MN 

) M3

) MN3 

) M3N2

 விடை : ) M3N2 

விளக்கம் : M அணுக்களின் மொத்த எண்ணிக்கை n எனில்

நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை = 2n நான்முகி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது, (1 / 3) ஆனது அணுக்கள் நிரப்பப்பட்டுள்ளது (1 / 3) × 2n

M : 2 n : (2 / 3) n

1 : ( 2 / 3) 

3 : 2 M3N2


10. ஒரு உர் ஸைட்டின் மாதிரியின் அமைப்பு Fe0.9301.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது

) 16.05%

) 15.05%) 

) 18.05%

) 17.05%

விடை : ) 15.05% 

விளக்கம் : படிகத்தில் காணப்படும் Fe2+ அயனியின் எண்ணிக்கை X என்கபடிகத்தில் காணப்படும் Fe3+ அயனியின் எண்ணிக்கை y என்க

Fe2+ மற்றும் Fe3+ அயனிகளின் மொத்த எண்ணிக்கை x + y என கொடுக்கப்பட்டு உள்ள து. x + y = 0.93 

மொத்த மின்சுமை = 0 

x (2+) + (0.93 - x) (+3) -2 = 0 

2x + 2.97-3x – 2 = 0 

x = 0.79 

Fe3+ன் சதவீதம் =( (0.93 – 0.79) / (0.93) )100 = 15.05% 


11. A+ மற்றும் B- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98 X 10-10m மற்றும் 1.81x1010 ஆகும். AB ல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 

) 8 

) 2 

) 6 

) 4 

விடை : ) 6  

விளக்கம்


0.414 - 0.732 என்ற இடைவெளி அமைந்துள்ளது. எனவே, ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 6. 


12. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு 

) 400pm

) 800pm 

) ) √3 × 100pm

) (√3 / 2) ×  400pm

விடை : ) (√3 / 2) ×  400pm     

விளக்கம் :

√3 a = rCs+ + 2rCl- + rCs+

(√3/2) a = ( rCl- + rCs+)

(√3/2)  400 = அயனிகளுக்கிடையேயானத் தொலைவு


13. XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm, எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு

) (100/0.414)

) (0.732/100)

) 100x0.414

) (0.414 / 100)     

விடை : ) (100/0.414)     

rx+ / ry− = 0.414 அமைப்பிற்கு

rx+ 100pm என கொடுக்கப்பட்டுள்ளது

ry− = 100pm / 0.414

    


14.bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்

) 48% 

) 23% 

) 32% 

) 26%

விடை : ) 32% 

விளக்கம் : பொதிவுத் திறன் = 68% எனவே, காலியாக உள்ள வெளியின் சதவீதம் = (100 - 68) = 32% 


15. ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm, அது முகப்பு மைய கனச்சதுர அமைப்பில் படிகமானால் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 

) 488.5pm. 

) 848.5pm 

) 884.5pm 

) 484.5pm

விடை : ) 848.5pm 

விளக்கம் : விளிம்பு நீளம் = a

√2a = 4r 

a = 600 × 1.414

a = (√4 × 300 ) / √2

a = 848 .4 pm


16. எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கன அளவின் விகிதம்

) (π / 4√2)

) (π / 6)

) (π / 4)

) (π / 3√2)

விடை : ) (π / 6)

விளக்கம் :


17. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் 

) F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல் 

) புறப்பரப்பில் உள்ள C1- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல் 

) Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல் 

) மேற்கண்டுள்ள அனைத்தும்.

விடை : ) F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல் 


18. Sc, bcc, மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்ப, நீளத் தினை 'a' 'எனக் குறிப்பிட்டால் அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே


விடை : (1/2 a : √3/4 a : 1/2√2 a)

விளக்கம் : 



19. ஒரு கனச்சதுரத்தின் விளிம்பு நீளம் 'a' எனில் பொருள் மைய கனச்சதுர அமைப்பின் மையத்தில் உள்ள அணுவிற்கும், கனச்சதுரத்தின் ஏதேனும் ஒரு மூலையில் உள்ள ஒரு அணுவிற்கும் இடையே யானத் தொலைவு


விடை : d(√3/2)a

விளக்கம்

விளிம்பு நீளம் a எனில் முதன்மை மூலை விட்டத்தின் மதிப்பு √3a

தேவையான தூரம் = (√3 / 2 ) a


20. பொட்டாசியம் (அணு எடை 39gmo1-1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடை யேயானத் தொலைவு 4.52A° ஆக உள்ளது. அதன் அடர்த்தி 

) 915kgm-3 

) 2142kg m-3

) 452 kg m-3

) 390 kg m-3

விடை : ) 915kgm-3 

விளக்கம்

ρ = n × M / a3NA

bcc

n = 2      M = 39 

தொலைவு 2r = 4.52

a = 4r / √ 3 = (2 × 4.52 × 10 -10) / (√3) = 5.21 × 10 -10



21. ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது 

) எதிரயனிகளின் எண்ணிக்கை சமமற்று காணப் படுதல். மேலும் அணிக்கோவையில் எதிர் அயனிகள் இடம் பெறாதிருத்தல்

) சமமான எண்ணிக்கையில் எதிர் அயனிகள்அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்

) ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல் 

) படிக அணிக்கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்

விடை : ) சமமான எண்ணிக்கையில் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்


22. ஒரு படிகத்தின் நேர் அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் படிக அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், அப்படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது

) ஷாட்கி குறைபாடு 

) F - மையம் 

) பிராங்கல் குறைபாடு

) வேதி வினைக்கூறு விகிதமற்ற குறைபாடு

விடை : ) பிராங்கல் குறைபாடு 


23. கூற்று : பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிகதிண்மத்தின் அடர்த்தி குறைகிறது.

காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறு கின்றன

) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும் 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

). கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

 விடை : ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு 


24. உலோக குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் 

) NaCl 

) FeO 

) ZnO

) kCl

விடை : ) FeO 


25. X மற்றும் Y ஆகிய இரு வேறு அணுக்களைக் கொண்ட ஒரு இரு பரிமாண படிகத்தின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது. கருப்பு நிற சதுரம் மற்றும் வெண்மை நிற சதுரம் ஆகியன முறையே X மற்றும் Y அணுக்களைக் குறித்தால், இந்த அலகு கூட்டு அமைப்பின் அடிப்படையில், அச்சேர்மத்தின் எளிய வாய்ப்பாடு.


) XY8

) X4Y9 

) XY2

) XY4

 விடை : ) XY8


Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 6 : Solid State : Solid State: Choose the best answer Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 6 : திட நிலைமை : திட நிலைமை : சரியான விடையைத் தேர்வு செய்க - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 6 : திட நிலைமை