Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

வேதிவினைகளின் வகைகள் - பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் | 10th Science : Chapter 10 : Types of Chemical Reactions

   Posted On :  30.07.2022 06:14 am

10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்

பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

அறிவியல் : வேதிவினைகளின் வகைகள் : பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

வேதிவினைகளின் வகைகள்

கணக்குகள்

 

எ.கா:1

0.001M செறிவுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.

தீர்வு

HCI என்பது வலிமை மிகுந்த அமிலம் என்பதால் முழுவதும் அயனியாக மாறும் கீழ்கண்டவாறு.

HCl(aq)  → H+(aq) + Cl(aq) 

மேற்கண்ட செயலில் ஒரு மோல் HCl ஒரு மோல் H+ அயனிகளை தரும். ஆகையால், H+ அயனியின் செறிவானது ஹைட்ரோ குளோரிக் (HCI) அமில செறிவுக்கு சமம். (0.001 M அல்லது 1.0 × 10-3 மோல் லி-1)

pH = –log10[H+] = –log1010–3

= –(–3 × log1010)

= –(3 × 1) = 3

pH = 3

 

எ.கா: 2

5 × 10-5 மோல்-1 செறிவு கொண்ட நீர்த்த சல்பியூரிக் அமிலத்தின் pH மதிப்பு என்ன?

தீர்வு

நீரில், சல்பியூரிக் அமிலம் பிரியும் முறை

H2SO4(aq) → 2 H+(aq) + SO42–(aq)

கரைசலில் ஒவ்வொரு மோல் சல்பியூரிக் அமிலம், இரண்டு மோல் H+ அயனிகளை தரும். ஒரு லிட்டர் H2SO4 கரைசலில் 5 × 10-5 மோல் H2SO4 இருக்கும். 2 × 5 × 10-5 = 10 × 10-5 அல்லது H+ அயனிகளை ஒரு லிட்டரில் 1.0 × 10-4 மோல்.

[H+] = 1.0 × 10–4 மோல் மோல்–1

pH = –log1010[H+]

= –log1010–4 

= –(–4 × log1010)

= –(–4 × 1) = 4

pH = 4

 

எ.கா: 3

1 × 10-4 மோல் NaOH கரைசலில் உள்ள pH மதிப்பை காண்க.

தீர்வு

NaOH என்பது வலிமையான காரம் மற்றும் அக்கரைசலை கீழ்கண்டவாறு பிரிகை அடைகிறது.

NaOH(aq) Na+(aq) + OH-(aq)

ஒரு மோல் NaOH ஆனது ஒரு மோல் OH- அயனிகளை இதிலிருந்து தரும்.

[OH-] = 1 × 10-4 மோல் லிட்டர்-1

pOH = -log10[OH-]

= -log10 [10-4]

= - (-4 × log1010)

= - (-4) = 4

pH + pOH = 14

pH = 14 - pOH

= 14 - 4

= 10

 

எ.கா: 4

ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 1 × 10-8 மோல் லி-1 எனில் அக்கரைசலின் pH மதிப்பை காண்க.

தீர்வு

இங்கு நீர்த்த கரைசலாக உள்ளதால் கொடுக்கப்பட்டுள்ள செறிவானது அமிலத்தையோ, காரத்தையோ குறிப்பது இல்லை. ஆனால் H+ அயனிகளை குறிக்கும். எனவே கீழ்கண்டவாறு கணக்கிடலாம்.

PH = -log10[H+]

[H+] = 1.0 × 10-8 மோல் லிட்டர்-1

pH = -log10 [10-8]

= - (-8 × log1010)

= - (-8 × 1) = 8

 

எ.கா: 5

ஒரு கரைசலின் pH மதிப்பு 4.5 எனில் pOH மதிப்பைக் காண்க.

தீர்வு

pH + pOH = 14

pOH = 14 - pH

pOH = 14 - 4.5 = 9.5

pOH = 9.5

 

Tags : Types of Chemical Reactions வேதிவினைகளின் வகைகள்.
10th Science : Chapter 10 : Types of Chemical Reactions : Solved Example Problems with Answers, Solution Types of Chemical Reactions in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் : பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் - வேதிவினைகளின் வகைகள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்