Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | சமநிலை, சமநிலை மூன்று வகைப்படும், சமநிலைக்கான நிபந்தனைகள்

விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - சமநிலை, சமநிலை மூன்று வகைப்படும், சமநிலைக்கான நிபந்தனைகள் | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion

   Posted On :  08.05.2022 08:49 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்

சமநிலை, சமநிலை மூன்று வகைப்படும், சமநிலைக்கான நிபந்தனைகள்

ஒரு பொருளை அதே நிலையில் வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும். சமநிலை மூன்று வகைப்படும். அவை: 1. உறுதிச்சமநிலை 2. உறுதியற்ற சமநிலை 3. நடுநிலை சமநிலை

சமநிலை

ஒரு பொருளை அதே நிலையில் வைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும். சமநிலை மூன்று வகைப்படும். அவை: 

1. உறுதிச்சமநிலை

2. உறுதியற்ற சமநிலை 

3. நடுநிலை சமநிலை

ஒரு கூம்பின் மூலம் இவற்றை நாம் நிரூபிப்போம்.


1. உறுதிச் சமநிலை

உறுதிச் சமநிலையில் கூம்பானது மிக அதிகமான கோணத்திற்குச் சாய்க்கப்பட்டு பின்னர் விடப்பட்டாலும், கவிழ்ந்துவிடாமல் மீண்டும் பழைய நிலையை அடைகிறது.

கூம்பு சாய்க்கப்படும்போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது. ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே உள்ளது. எனவே, அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.



2. உறுதியற்ற சமநிலை

இந்த நிலையில், கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்துவிடும். கூம்பினைச் சாய்க்கும் போது ஈர்ப்புமையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.


இங்கு, ஈர்ப்புமையம் வழியாக வரையப்படும் செங்குத்துக்கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே உள்ளது. எனவே, கூம்பானது தனது பழைய நிலைக்கே வருகிறது.


3. நடுநிலைச் சமநிலை

இந்த நிலையில், கூம்பானது உருள்கிறது. ஆனால், அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை.


கூம்பினை நகர்த்தும் போது அதன் ஈர்ப்புமையம் அதே உயரத்தில் உள்ளது. கூம்பினை எங்கு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே அது நிலையாக இருக்கிறது.


சமநிலைக்கான நிபந்தனைகள்

கீழ்க்காணும் வழிகளில் ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கலாம். 

அதன் ஈர்ப்பு மையம் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். 

பொருளின் அடிப்பரப்பினை அதிகரிக்க வேண்டும்.

ஒரு பொருளின் அடிப்பகுதி கனமாக இருக்கும்போது, ஈர்ப்புமையம் கீழே இருக்கும். எனவே, அப்பொருள் நிலையாக இருக்கும். 

அடிப்பாகம் அகன்றதாக இருக்கும் போது பொருள் நிலையாக இருக்கிறது.


தஞ்சாவூர் பொம்மை 

இது தஞ்சாவூரில் களிமண்ணால் செய்யப்படும் பழமை வாய்ந்த பாரம்பரிய பொம்மையாகும். இப்பொம்மையின் ஈர்ப்பு மையமும், அதன் மொத்த எடையும் பொம்மையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.



ஈர்ப்பு மையத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் 

சொகுசுப் பேருந்துகளின் அடிப்பகுதியில் பொருள்களை வைப்பதற்கான அறைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பேருந்தின் ஈர்ப்பு மையத்தின் உயரம் குறைக்கப்பட்டு, அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.

இரண்டு அடுக்கு பேருந்துகளின் இரண்டாவது அடுக்கில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைத் தவிர கூடுதல் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை . 

பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அவற்றின் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.

மேசை விளக்குகள், காற்றாடிகள் போன்றவற்றின் சமநிலையை அதிகரிப்பதற்காக அவற்றின் அடிப்பரப்பானது அகலமானதாகத் தயாரிக்கப்படுகின்றது.


Tags : Force and Motion | Term 1 Unit 2 | 7th Science விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 2 : Force and Motion : Stability and three types of stability, Condition for Stability Force and Motion | Term 1 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும் : சமநிலை, சமநிலை மூன்று வகைப்படும், சமநிலைக்கான நிபந்தனைகள் - விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்