Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | கார்பாக்சில் தொகுதியின் அமைப்பு
   Posted On :  06.08.2022 04:15 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்

கார்பாக்சில் தொகுதியின் அமைப்பு

கார்பாக்சில் தொகுதியானது ஒருதள அமைப்பில் உள்ளது.

கார்பாக்சில் தொகுதியின் அமைப்பு:

கார்பாக்சில் தொகுதியானது ஒருதள அமைப்பில் உள்ளது. -COOH தொகுதியில் உள்ள மைய கார்பன் அணுவும், இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் sp2 இனக்கலப்பில் உள்ளன.

கார்பாக்சில் தொகுதியின் கார்பன் அணுவிலுள்ள மூன்று sp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், இரண்டு ஆர்பிட்டால்கள் ஒவ்வொரு ஆக்ஸிஜன் அணுவிலுள்ள ஒரு sp2 இனக்கலப்பு ஆர்பிட்டாலுடன் மேற்பொருந்துகின்றன. அதே நேரத்தில் கார்பனில் மீதமுள்ள ஒரு sp2 இனக்கலப்பு ஆர்பிட்டானானது ஹைட்ரஜனின் S-ஆர்பிட்டாலுடனோ, அல்லது ஆல்கைல் தொகுதியிலுள்ள கார்பனின் இனக்கலப்பு ஆர்பிட்டாலுடனோ மேற்பொருந்தி மூன்று σ பிணைப்புகளை உருவாக்குகின்றன. இரண்டு ஆக்ஸிஜன் அணுக்கள் மற்றும் கார்பன் அணுவில் இனக்கலப்பில் பங்கேற்காத p - ஆர்பிட்டால்கள் பிணைப்புகளால் உருவாக்கப்பட்ட அமைப்பிற்கு செங்குத்தாக அமைந்துள்ளன.

இந்த மூன்று p- ஆர்பிட்டால்களும் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பதால் ஒரு π பிணைப்பை உருவாக்குகின்றன. இந்த π பிணைப்பானது ஒரு புறம் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களுக்கிடையேயும், மற்றொரு புறம் கார்பன் மற்றும் OH தொகுதியிலுள்ள ஆக்ஸிஜன் அணுக்களுக்கிடையேயும் பகுதியளவு உள்ளடங்காத் தன்மையினை பெற்றுள்ளது. அதாவது, RCOOH பின்வரும் இரு வடிவமைப்புகளின் உடனிசைவு இனக்கலப்பாக குறிப்பிட முடியும்.


உடனிசைவு அமைப்புகளின் காரணமாக கார்பாக்சிலிக் கார்பன் அணுவானது, கார்பனைல் கார்பனை விட குறைந்த கருகவர் தன்மையினைப் பெற்றுள்ளது. அதாவது, ஹைட்ராக்ஸி தொகுதியிலுள்ள ஆக்ஸிஜன் அணுவிலுள்ள தனித்த இரட்டை எலக்ட்ரான்கள் உள்ளடங்கா தன்மையை பெற்றுள்ளன.


12th Chemistry : UNIT 12 : Carbonyl Compounds and Carboxylic Acids : Structure of carboxyl group in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் : கார்பாக்சில் தொகுதியின் அமைப்பு - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 12 : கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்