Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | ஆல்கஹால் வினைசெயல் தொகுதியின் அமைப்பு

வேதியியல் - ஆல்கஹால் வினைசெயல் தொகுதியின் அமைப்பு | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers

   Posted On :  05.08.2022 04:11 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

ஆல்கஹால் வினைசெயல் தொகுதியின் அமைப்பு

Sp3 இனக்கலப்படைந்த கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள -OH தொகுதியின் அமைப்பானது நீர் மூலக்கூறில் ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள -OH தொகுதியின் அமைப்பினை ஒத்துள்ளது.

ஆல்கஹால் வினைசெயல் தொகுதியின் அமைப்பு

Sp3 இனக்கலப்படைந்த கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள -OH தொகுதியின் அமைப்பானது நீர் மூலக்கூறில் ஹைட்ரஜனோடு இணைக்கப்பட்டுள்ள -OH தொகுதியின் அமைப்பினை ஒத்துள்ளது. அதாவது, V வடிவத்தை பெற்றுள்ளது. ஆக்சிஜனின் ஒரு Sp3 இனக்கலப்படைந்த ஆர்பிட்டால் கார்பனின் ஒரு Sp3 இனக்கலப்படைந்த ஆர்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேற்பொருந்தி ஒரு C-O, 'σ' பிணைப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஆக்சிஜனின் மற்றுமொரு இனக்கலப்படைந்த ஆர்ப்பிட்டால் ஹைட்ரஜனின் ls ஆர்ப்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேற்பொருந்தி O-H ‘σ’ பிணைப்பை ஏற்படுத்துகிறது. ஆக்சிஜனின் எஞ்சியுள்ள இரண்டு Sp3 இனக்கலப்படைந்த ஆர்ப்பிட்டால்களில் ஆக்சிஜனின் தனித்த ஜோடி எலக்ட்ரான்கள் இடம் கொண்டுள்ளன. தனித்த இரட்டை - தனித்த இரட்டை விலக்கு விசையின் காரணமாக, மெத்தனாலின் C-O-H பிணைப்புக் கோணம் நான்முகியின் பிணைப்புக் கோணமான 109.5° ல் இருந்து 108.9° ஆக குறைந்து காணப்படுகிறது


படம் sp3 இனக்கலப்படைந்த கார்பன்.


Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Structure of the functional group of alcohol Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : ஆல்கஹால் வினைசெயல் தொகுதியின் அமைப்பு - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்