Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | மாணவர் செயல்பாடு

உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene

   Posted On :  09.05.2022 06:59 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்

மாணவர் செயல்பாடு

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 :உடல் நலமும் சுகாதாரமும் : மாணவர் செயல்பாடுகளுக்கான வினா விடை

செயல்பாடு 1

கொடுக்கப்பட்ட அட்டவணையில் உங்கள் தினசரிச் செயல்களைப் பட்டியலிடுங்கள்.



படத்தை பார்த்து கேள்விக்கு பதில் அளிக்கவும் 

சளியால் பாதிக்கப்பட்ட உங்கள் நண்பர் உங்கள் முன் தும்மினால் அல்லது இருமினால் என்ன நடக்கும்?

நோயாளி தும்மும்போது அல்லது இருமும்போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. இந்த கிருமிகள் அருகில் இருப்போர் மீது விழுந்து அவர்களுக்கு தோற்று நோயை ஏற்படுத்துகின்றன.


செயல்பாடு 2


படத்தைக் கவனித்து, அவற்றைச் சரிசெய்யும் செயல்களை எழுது.

1. அனைத்து குப்பைகளையும் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடவேண்டும்  .

2. குப்பைத் தொட்டியில் மூடி இருக்க வேண்டும் அதை சரியாக மூடி வைக்க வேண்டும் .

3. வடிகால் மூடப்பட வேண்டும் தெருவில் ஓட கூடாது .

4. வீட்டுக் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காதவை எனப் பிரிக்க வேண்டும்  .

5. அவை சம்பந்தப்பட்ட கொள்கலன்களில் கைவிடப்பட வேண்டும் .

6. உணவுப் பொருட்களை சரியாக மூடி வைக்க வேண்டும் ஈக்களால் அசுத்தமான எதையும் நாம் சாப்பிட கூடாது.


டெங்கு காய்ச்சலானது DEN - 1, 2  வைரஸால் (இது பிளேவி வைரஸ் வகையைச் சார்ந்தது) தோற்றுவிக்கப்பட்டு ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது. இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இந்தக் கொசுக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவில் பரவக்கூடியவை.



செயல்பாடு 3


படத்தை உற்று நோக்கி, கொடுக்கப்பட்ட அட்டவணையில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பதில் சரியானவற்றைக் ( ✔ ) குறியிடுக.


இவற்றிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

கண்களைக் தேய்ப்பதும், நீண்டநேரம் தொலைக்காட்சி கணினி பார்ப்பதும் கண்ணுக்கு தீங்கு விளைவிக்கும்.குளிர்ந்த நீரில் கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும் கேரட்,  காய்கறி, ஆரஞ்சு, லெமன் மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட  வேண்டும்



செயல்பாடு 4

அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்று, 0 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும். அருகில் உள்ள மருத்துவமனையில் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரைச் சந்தித்து கீழ்க்காண்பவை பற்றி கேட்கவும். 

•  அங்குள்ள தடுப்பூசிகளின் வகைகள். 

• அவற்றைப் பயன்படுத்துவதால் நோய்களைக் கட்டுப்படுத்த முடியுமா? 

• தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டிய வயது.




Tags : Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 6 : Health and Hygiene : Student Activities Health and Hygiene | Term 1 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும் : மாணவர் செயல்பாடு - உடல் நலமும் சுகாதாரமும் | முதல் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 6 : உடல் நலமும் சுகாதாரமும்