Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath

   Posted On :  05.07.2022 12:28 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல : வரலாறு : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : பாடச்சுருக்கம்

பாடச்சுருக்கம் 

 முதலாளித்துவ நாடுகளின் வளர்ந்துகொண்டேயிருந்த, கச்சாப்பொருட்களுக்கும் சந்தைக்குமானத் தேவைகள் எவ்வாறு காலனியாதிக்கப் போட்டிக்கு இட்டுச்சென்றதென்பதும் அதன் விளைவாக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட மோதல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.


ஆசியாவில் ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்றது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.


ஐரோப்பா இரு போர்முகாம்களாகப் பிரிந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட அணி சேர்க்கைகளும், எதிரணி சேர்க்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.


முதல் உலகப்போர் வெடிப்பதற்குக் காரணங்களான வன்முறை வடிவங்களிலான தேசியம், ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை, அல்சேஸ், லொரைன் பகுதிகளை இழந்ததனால் பிரான்சுக்கு ஜெர்மனியோடு ஏற்பட்டப் பகைமை, பால்கன் பகுதியில் ஏற்பட்ட அதிகார அரசியல் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.


நீர்மூழ்கிக்கப்பல் போரினை ஜெர்மன் தொடுத்ததைத் தொடர்ந்து போரில் அமெரிக்கா பங்கேற்றதும், நேசநாடுகள் பெற்ற இறுதி வெற்றியும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.


பாரிஸ் அமைதிமாநாடும், வெர்செய்ல்ஸ்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களும் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன.


முதல் உலகப்போரின் பின்விளைவுகள், குறிப்பாக ரஷ்யப்புரட்சி, அதற்கான காரணங்கள், போக்கு, விளைவுகள் ஆகியவை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.


உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட முதல் அமைப்பான பன்னாட்டுச் சங்கமும் போர்களைத் தடுப்பதிலும் அமைதியை மேம்படுத்தியதிலும் அது வகித்தப் பங்கும் விமர்சன பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

 

கலைச்சொற்கள்

முற்றுரிமை : Monopoly exclusive possession or control

பேரழிவு : Devastating highly destructive or damage

கண்மூடித்தனமான நாட்டுப்பற்று : Jingoism blind patriotism, especially in the pursuit of aggressive foreign policy

அதிதீவிரப்பற்று : Chauvinism extreme patriotism

ஜெர்மானியக் கலாச்சாரத்தை மிக உயர்வாக நினைப்பது Kultur thinking highly of German civilization and culture

எதிரியை விரட்டி அடித்தல் : Repulse drive back

மூழ்கடி : Torpedo attack or sink (a ship) with a torpedo

முதலாளித்துவம் : Bourgeois characteristic of the middle class, typically with reference to its perceived materialistic values or conventional attitudes

அறிவுஜீவிகள், நுண்ணறிவாளர்கள் : Intelligentsia intellectuals or highly educated people as a group, especially when regarded as possessing culture and political influence


Tags : Outbreak of World War I and Its Aftermath | History முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு.
10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Summary, Glossary Outbreak of World War I and Its Aftermath | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் - வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்