Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  27.07.2022 05:00 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : வரலாறு : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

பாடச்சுருக்கம் 


 இராஜா ராம்மோகன் ராயால், பிரம்மசமாஜம் நிறுவப்பெற்றதும், அவருடைய இறப்பிற்குப் பின்னர் சமாஜத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் மகரிஷி தேவேந்திரநாத் தாகூரும் கேசவ் சந்திர சென்னும் வகித்த பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

 M.G. ரானடேயின் பங்களிப்பும், அவர் இணைந்து செயல்பட்ட பிரார்த்தனை சமாஜத்தின் பங்களிப்பும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

 

 சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆதரவில், இந்துமதத்தைச் சீர்திருத்த ஆரிய சமாஜம் மேற்கொண்ட முயற்சிகளும், மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குள் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 

 தீவிர சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் குறித்தும், பெண்களின் மேம்பாட்டிற்கான அவரின் முயற்சிகளும் விளக்கப்பட்டுள்ளன.

 

 இந்துமதத்தை மாற்றியமைப்பதில் இராமகிருஷ்ண பரமஹம்சர், அவருடைய சீடர் விவேகானந்தர் ஆகியோரின் பங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

 

 மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பகுதியினர்க்குச் சமூகநீதியைப் பெற்றுத்தர மேற்கொண்டப் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

 

கலைச்சொற்கள்


சொல்லப்படும் : Alleged stated but not proved

 

பரவசமான : Ecstatic in a state of extreme happiness

 

அதிகப் பரிமாணமுள்ள : Voluminous bulky

 

வலியுறுத்துதல் : Reiterated repeat a statement for emphasis

 

உருவ வழிபாடு : Idolatry the practice of worshipping idols

 

சிறு நூல் : Tract a small booklet

 

திருவெளிப்பாடு : Revelation disclosure


Tags : Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Summary, Glossary Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்