Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:08 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

பாடச்சுருக்கம் 


 தமிழ் நாட்டில் தேசியவாதம் வளர்வதற்கு சென்னைவாசிகள் சங்கம், சென்னை மகாஜன சபை, தேசியவாதப் பத்திரிக்கைகள் ஆகியவற்றின் பங்களிப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

 

 தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் சுதேசி இயக்க கட்டம் பற்றி குறிப்பாக வ.உ.சி. சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் வகித்த பாத்திரம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

 

 ஒத்துழையாமை இயக்கம், காங்கிரசோடு ஈ.வெ.ரா வின் முரண்பாடுகள், தேசிய அளவில் சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் ஆகியவை கூர்ந்தாராயப்பட்டுள்ளன.

 

 சைமன் குழுவின் மீதும், வட்டமேஜை மாநாடுகளின் மீதும் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு பங்கேற்றது ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

 

 1935 இந்திய அரசு சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தல்களும், சென்னையில் ராஜாஜியின் தலைமையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவை உருவாக்கப்பட்டதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 

கலைச்சொற்கள்

 

மேலாதிக்கம் : hegemony leadership or dominance, especially by one state or social group over others

 

விரும்பத்தகாத, வெறுக்கப்படுகிற : obnoxious extremely unpleasant

 

கருத்து ஒருமைப்பாடு, முழு இசைவு : consensus a general agreement

 

பாசாங்கு, போலிமை : hypocrisy insincerity/two-facedness, dishonesty, lip service

 

ஆட்சிக்கு எதிரான : seditious inciting or causing people to rebel against the authority of a state or monarch

 

பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி : demonstration a protest meeting or march against something

 

மறியல் : picket a blockade of a workplace or other venue

 

புறக்கணி : boycott refuse to cooperate with or participate in

 

கொடுமைமிக்க, இரக்கமற்ற : brutal savagely violent

 

நாட்டுப்பற்று : patriotic having devotion to and vigorous support for one's own country

 

அடக்குமுறை : repression action of subduing someone or something with force


Tags : Freedom Struggle in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Summary, Glossary Freedom Struggle in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்