Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:10 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

பாடச்சுருக்கம்


 காலனியத்தின் தலையீட்டினாலும் பகுத்தறிவு இயக்கத்தின் எழுச்சியினாலும் இந்திய அறிவுஜீவிகளிடையே தன்னைத்தானே உள்ளாய்வு செய்து கொள்ளும் உள்முகச் சிந்தனைச் செயல்படுவதை பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா எதிர்கொண்டது. இது இந்திய மறுமலர்ச்சிக்கு இட்டுச் சென்றது.

 

 தமிழ்நாட்டில், அச்சுக் கூடங்களின் வளர்ச்சி, பழம்பெரும் சமயச் சார்பற்ற தமிழ் இலக்கியங்கள் வெளியிடப்பட்டு பரவுவதற்கு செயலூக்கியாய் அமைந்தது.

 

 பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழறிஞர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை வெளியிடுவதற்கு அயராது உழைத்தனர்.

 

 இம்மாற்றம் தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கு மட்டும் புத்தூக்கம் அளிக்கவில்லை. நடைமுறையிலிருந்த சாதிப்படிநிலைகளுக்குச் சவாலாக அமைந்தது.

 

 1916இல் நிறுவப் பெற்ற நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் இருந்த பிராமணர் அல்லாதவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தது.

 

 சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பெரியார் ஈ.வெ. ராமசாமி, அடிப்படைவாதத்தின் நிறை குறைகளை மதிப்பிட்டார்.

 

 இறுதியாகத் தமிழ் நாட்டின் பகுத்தறிவுச் சிந்தனைகள் நவீன இந்திய அரசின் ஆக்கபூர்வமான வளர்ச்சிகளுக்கு மாதிரியாய் அமைந்தது.

 

கலைச்சொற்கள்


சுவிசேஷர்கள், நற்செய்தியாளர் : evangelical Christian groups that believe that the teaching of the Bible and persuading others to join them is extremely important

 

மேலாதிக்கம் : hegemony leadership or dominance, especially by one country or social group over others

 

எழுச்சி : resurgence renewal, revival

 

மொழியியலாளர்கள் : linguists a person skilled in languages

 

ஒதுக்கப்பட்ட : marginalised a person, group concept treated as insignificant or sidelined

 

எரிச்சலூட்டும் : irked irritated, annoyed

 

ஒழித்துக்கட்டும் : debunking expose the falseness or hollowness of (a myth, idea or belief)

 

படுதோல்வியுறச் செய்தல் : trounced defeat heavily in a contest

 

விமர்சிப்பது : critiquing evaluate in a detailed and analytical way

 

அநீதியான : iniquitous grossly unfair and morally wrong

 

புனைபெயர் : pseudonym a fictitious name, especially one used by an author

 

பெயரிடப்பட்டு : rechristened give a new name to


Tags : Social Transformation in Tamil Nadu தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.
10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu : Summary, Glossary Social Transformation in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்