Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பாடச்சுருக்கம் - இனப்பெருக்க புற அமைப்பியல்

தாவரவியல் - பாடச்சுருக்கம் - இனப்பெருக்க புற அமைப்பியல் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  21.03.2022 08:45 am

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்

பாடச்சுருக்கம் - இனப்பெருக்க புற அமைப்பியல்

மஞ்சரி என்பது பொதுவான அச்சின் மேல் கொத்தாகப் பல மலர்கள் குறிப்பிட்ட முறையில் தோன்றுவது.

பாடச்சுருக்கம்.

மஞ்சரி என்பது பொதுவான அச்சின் மேல் கொத்தாகப் பல மலர்கள் குறிப்பிட்ட முறையில் தோன்றுவது. இருப்பிடத்தின் அடிப்படையில் மஞ்சரிகள் மூன்று வகைப்படும். அச்சு கிளைக்கும் முறை மற்றும் மலர்கள் அமைந்திருக்கும் விதத்தின் அடிப்படையில் மஞ்சரிகளை ரெசிமோஸ், சைமோஸ், கலப்புவகை, சிறப்புவகை மஞ்சரி என வகைப்படுத்தலாம். மலர் என்பது மாறுபாடு அடைந்த குறுக்கப்பட்ட இனப்பெருக்கத்தண்டு அமைவாகும். இனப்பெருக்கத்தை அதிகரிக்க மலர் பல பாகங்களைக் கொண்டுள்ளது. மலர்கள் அதன் பால்தன்மை, சமச்சீரமைவு, மூலம் விளக்கப்பட்டுள்ளது. புல்லி வட்டம் என்பது பலவகைகளாகக் காணப்படும் மலரின் வெளிப்புற அடுக்காகும். அல்லி வட்டம் மகரந்தச்சேர்கைக்கு உதவும் இரண்டாவது அடுக்காகும். அல்லி வட்ட இதழ்கள் இணைந்ததோ, இணையாமலோ பல வடிவங்களில் காணப்படும். பூவிதழ்கள், அல்லிகள், புல்லிகள் மலரின் மொட்டுப்பருவத்தில் அமைந்திருக்கும் முறைக்கு இதழமைவு என்று பெயர், இதில் பல வகைகள் உள்ளன. மலரின் ஆண்பாகம் மகரந்தத்தாள்களால் ஆன மகரந்ததத்தாள் வட்டமாகும். மகரந்தத்தாள்கள் மகரந்தப்பை, மகரந்தக்கம்பி, இணைப்புத்திசு போன்ற பாகங்களைக் கொண்டுள்ளன.

சூலக வட்டம் மலரின் பெண்பாகமாகும். சூலகப்பை, சூலகத்தண்டு, சூலகமுடி ஆகியவை சூலகத்தின் பாகங்களாகும். சூலக இலைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒற்றைச் சூலக இலைச் சூலகம், இரு சூலக இலைச் சூலகம் எனப் பல வகைப்படும். சூலக இலைகள் இணைந்தோ இணையாமலோ காணப்படும்.சூலக அறை எண்ணிக்கை ஒன்றிலிருந்து பலவாக இருக்கும். சூலகப்பை மேல்மட்டச் சூலகப்பையாகவோ, கீழ்மட்டச் சூலகப்பையாகவோ, அரைகீழ்மட்ட சூலகப்பையாகவோ இருக்கும். சூலகப்பையில் சூல் ஒட்டுத்திசு அமைந்திருக்கும் விதத்திற்குச் சூல் ஒட்டு முறை என்று பெயர். சில குறிப்பிட்ட மலர்களுக்கான மலர் சூத்திரம், மலர் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கனிகள் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் விளைவாக உருவாகின்றன. கனிகள் தனிமலரின் ஒரு சூலகத்திலிருந்து உருவாவது தனிக்கனிகள் எனப்படும். கனித்தோலின் அடிப்படையில் தனிக்கனிகளை இரு வகைப்படுத்தலாம். அவை சதைக்கனிகள் மற்றும் உலர்கனிகள் ஆகும். உலர் வெடிகனிக்கும், உலர் வெடியாகனிக்கும் இடைப்ப ட்டகனியேபிளவுறு கனியாகும். திரள்கனி இணையாத சூலக இலைகள் கொண்ட தனி மலரிலிருந்து உருவாகும். ஒரு முழு மஞ்சரியிலிருந்து உருவாகும் கனியே கூட்டுக்கனியாகும். விதை என்பது கரு அல்லது மிகச்சிறிய உருவில் தாவர உடலைக் கொண்ட முதிர்ந்த சூல் ஆகும். விதைகளில் ஒரு விதையிலை கொண்ட தாவரத்தை ஒரு விதையிலைத் தாவரம் என்றும், இருவிதையிலைகளை கொண்ட தாவரத்தை இருவிதையிலைத் தாவரம் என்றும் அழைக்கிறோம்.


செயல்பாடு:

பள்ளி செல்லும் குமரப்பருவ மாணவர்களுக்கு ஏற்ற, பொதுவாகக் கிடைக்கக்கூடிய விலை குறைந்த பழங்கள், காய்கறிகள், விதைகள் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவூட்ட அட்டவணையைத் தயார் செய்க.


Tags : Botany தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Summary of Reproductive Morphology of Angiosperm Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல் : பாடச்சுருக்கம் - இனப்பெருக்க புற அமைப்பியல் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்க புற அமைப்பியல்