Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  11.07.2022 08:22 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

பாடச் சுருக்கம்

வணிகவாதத்திலிருந்து தொழில் முதலாளித்துவத்திற்கும், அதன்பின் நிதி முதலாளித்துவத்திற்கும் என ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றம் ஏகாதிபத்தியத்தில் நிலைகொண்டது விளக்கப்பட்டுள்ளது.

பாடச் சுருக்கம்

• வணிகவாதத்திலிருந்து தொழில் முதலாளித்துவத்திற்கும், அதன்பின் நிதி முதலாளித்துவத்திற்கும் என ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றம் ஏகாதிபத்தியத்தில் நிலைகொண்டது விளக்கப்பட்டுள்ளது.

• மிகை உற்பத்தியை விற்பதற்கு, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அதற்காக காலனிய நாடுகளைத் தேடுவதிலும் அதை முன்வைத்து ஐரோப்பாவின் பெரும் சக்திகளிடையே மோதல் ஏற்பட்டதையும் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

• ஜப்பான் ஆசியாவில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்தது பற்றியும் அதன் விரிவாக்கக் கொள்கை பற்றியும் கூறப்பட்டுள்ளது.

• ஐரோப்பா இரு போர் முகாம்களாக வடிவெடுத்து கூட்டணியாகவும், எதிர் - கூட்டணியாகவும் பிரிந்து நின்றமை விவரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் முரட்டுப்போக்கு, தனது பிரதேசங்களான அல்சேசையும்லொரைனையும்

• ஜெர்மனி ஆக்கிரமித்தமையால் பிரான்ஸ் கொண்ட பகையுணர்வு, ஜப்பானின் விரிவாக்கக்கொள்கை , பால்கன் பகுதியில் ஏற்பட்ட அதிகாரமைய அரசியல் போன்றவை எவ்விதம் முதல் உலகப்போருக்கு வழிவகுத்தனவென்பது விளக்கப்பட்டிருக்கிறது.

• எல்லைகளில் நடந்த போர்களும் பிற பிராந்தியங்களில் நடத்தப்பட்ட போர்களும் விபரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ரஷ்யப் புரட்சிக்கான காரணங்கள், போக்குகள், விளைவுகள் போன்றவை ஆராயப்பட்டுள்ளது.

• ஜெர்மனி நீர்மூழ்கிகளை ஏவியதன் பின் அமெரிக்கா போரில் தலையிட்டமையும் அதனைத்தொடர்ந்து தோழமை நாடுகள் இறுதியான வெற்றியினை அடைந்தமையும் சொல்லப்பட்டுள்ளது.

• பாரிஸ் அமைதி ஒப்பந்தம் குறித்தும் போரின் முடிவுகள் பற்றியும் உள்ளார்ந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

• பன்னாட்டு சங்கம் பற்றியும் உலக அமைதியை நிலைநாட்ட அது ஆற்றிய பங்கு பற்றியும் விமர்சன நோக்கில் எடுத்தியம்பப்பட்டிருக்கிறது.

• பாசிச அரசுகளின் ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகியவை பற்றி விபரமாக சொல்லப்பட்டுள்ளது.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : Summary Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : பாடச் சுருக்கம் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்