Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாடச் சுருக்கம்

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies

   Posted On :  12.07.2022 01:02 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

பாடச் சுருக்கம்

பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல், ஸ்டாலின்கிராட் போரும், ட்ரெஸ்டன் குண்டுவீச்சும், ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசப்படுதல் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

பாடச் சுருக்கம்

• வெர்செய்ல்ஸ் அமைதி ஒப்பந்தத்தின் நீதியற்ற தன்மை, பன்னாட்டு சங்கத்தின் தோல்வி, 1930களில் தோன்றிய பொருளாதாரப் பெருமந்தம், பாசிச சக்திகளான இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்றவைகளின் விரிவாக்கக் கொள்கை இரண்டாம் உலகப்போரை விளைவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.

• பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல், ஸ்டாலின்கிராட் போரும், ட்ரெஸ்டன் குண்டுவீச்சும், ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசப்படுதல் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

• அச்சு நாடுகள் மற்றும் அவர்தம் கூட்டு நாடுகளோடு ஏற்படுத்தப்பட்ட அமைதித் தீர்வுகள், ஐக்கிய நாட்டு சபையின் உருவாக்கம் மற்றும் போரின் மொத்த விளைவுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

• சீன வேளாண்குடிகளின் துயரங்கள் மற்றும் மஞ்சுக்கள் கடைபிடித்த திறந்தவெளிக் கொள்கை அந்நாட்டை அயல்நாட்டு சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை அவரவர் செல்வாக்கிற்கு உட்பட்ட கோளங்களாகப் பிரிக்க வழியேற்படுத்தியமை விளக்கப்பட்டுள்ளது.

• கிறித்தவ சமயத்தின் பரவல் பற்றியும், சீன நிர்வாகத்தில் வெளிநாட்டாரின் குறுக்கீடு குறித்தும், சீனப் பகுதிகளை ஜப்பானியர் ஆக்கிரமித்தவுடன் அங்கே ஊற்றெடுத்துப் பரவிய தேசியவுணர்வு புரட்சிக்கு வழிநடத்தி சென்றமை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

• சன் யாட்- சென்னும், மா சே துங்கும் சீன மக்களை மஞ்சு வம்சத்திற்கு எதிராக திரட்டி மக்களின் ஆட்சியை நிறுவியதில் ஆற்றியப் பங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

• மாவோவின் நீண்ட பயணமும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் சீனாவில் பொதுவுடைமை அரசு ஏற்பட வழிவகுத்தமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

• மூன்று வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் ஆக்கிரமிரப்பிற்கு உட்பட்ட இப்பகுதிகளில் தேசிய இயக்கம் பிறந்து இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும் காலனிய ஆட்சி தூக்கி வீசப்பட்டமை எடுத்தியம்பப்பட்டுள்ளது.

Tags : Outbreak of World War II and its Impact in Colonies | History இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies : Summary Outbreak of World War II and its Impact in Colonies | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் : பாடச் சுருக்கம் - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 14 : இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்