Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 06:15 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க.


சிறு நண்டு மணல்மீது

படமொன்று கீறும்

சிலவேளை அதைவந்து

அலை கொண்டு போகும்

கறிசோறு பொதியோடு

தருகின்ற போதும்

கடல்மீது இவள் கொண்ட

பயமொன்று காணும்.

வெறுவான வெளி மீது

முகில் வந்து சூழும்

வெறி கொண்ட புயல் நின்று

கரகங்கள் ஆடும்

நெறிமாறு பட நூறு

சுழிவந்து சூழும்

நிலையான கரை நீரில்

அலைபோய் உலைந்தாடும்

- மகாகவி (இலங்கை)

 

மொழி பெயர்க்க.

KOOTHU

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

கூத்து

தெருக்கூத்து என்பது அதன் பெயரில் இருப்பது போல் தெருவில் நிகழ்த்தப்படும் ஒரு வகைக் கலையாகும். இராமாயணம் மகாபாரதம் மற்றும் இன்னும் பிற புராணங்களிலிருந்து கதைகள் எடுக்கப்படும். தெருக்கூத்துவில் நிறைய பாடல்கள் இடம் பெறும் மேலும் வசனங்கள் கலைஞர்களால் கணநேரத்தில் யோசித்துப் பேசப்படும் தெருக்கூத்தில் பதினைந்து முதல் இருபது பேர் வரை இருப்பார்கள். குழுவில் பாடல்கள் இருப்பினும் கலைஞர்கள் தங்கள் சொந்தக் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் தங்களுக்குள்ளேயே ஆடை அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்து கொள்வார்கள். கூத்து கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமானது ஆகும்.

 

தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்

ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.

.கா.

) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.

) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

தொடர் சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும்.

.கா

) இனிய நிலா பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.

) அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.

.கா.

) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.

பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் - முதன்மைத் தொடர்

மழை கொட்டிக்கொண்டிருந்தாலும் - துணைத்தொடர்

 

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

.கா :

அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.

(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்று)

அழைப்புமணி ஒலித்ததால், கயல் விழி கதவைத் திறந்தார்.

1. இன்னாசிரியர் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்

(தொடர் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியார் புத்தகங்கள் வரிசைப்படுத்தி, அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்து புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

2. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஓயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டிக் கொண்டனர்.

ஓயிலாட்டத்தில் குழுவினர் காலில் சலங்கை அணிந்து கொண்டனர்.

ஓயிலாட்டத்தில் குழுவினார் கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடுவர்.

3. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதி யாயினர்.

(கலவைச் சொற்றொடராக மாற்றுக)

கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

4. ஒடிக் கொண்டியிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஓடிக் கொண்டியிருந்த மின் விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.

 

பிற மொழிச் சொற்களைத் தமிழ்சொற்களாக மாற்றி எழுதுக.

புதிர்

உங்களிடம். ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

விடை :

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால் ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்டுகளில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள் ஆல் தி பெஸ்ட்!


கோல்டு பிஸ்கட் தங்கக் கட்டி பட் ஆனால்

ஈக்வலாக சமமாக ரிப்பீட் மறுபடி

வெயிட் எடை ஆன்சரை விடையை

எக்ஸ் பெரி மெண்ட் பரிசோதனை ஆல்தி பெஸ்ட் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

நாட்டுப்புறப் பாடலுக்கேற்ப சூழலை எழுதுக.


பாடல்

ஆத்துக்கு அந்தண்டையே அண்ணன் வச்ச தென்னம்புள்ளே!

அண்ணன் புள்ள வாடினாலும் யம்மாடி! யம்மாடி!

தென்னம்புள்ள வாடலாமோ? யம்மாடி! யம்மாடி!

வாய்க்காலுக்கு மேற்குப்புறம் வஞ்சி வெச்ச வாழைமரம்

வஞ்சி மனம் வாடினாலும் யம்மாடி! யம்மாடி!

வாழைமரம் வாடலாமோ? யம்மாடி ! யம்மாடி!

பாடல் எழுந்த சூழல்

அண்ணன் நட்டு வைத்த தென்னம்பிள்ளைக்கு நீர் பாய்ச்ச, தோப்புக்கு வரும் பெண்ணொருத்தி குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கி விடுகிறாள். தென்னம்பிள்ளைக்கு நீருற்றுகிறாள்; குழந்தை அழுகிறது; பாடலைப் பாடியவாறே குழந்தையின் அழுகையை நிறுத்தி நீருற்றுதலைத் தொடர்கிறாள்.


பாடல்

பாடறியேன் படிப்பறியேன் - நான் தான்

பள்ளிக்கூடம் தானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் - நான்தான்

எழுத்துவகை தானறியேன்

படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா - நான் தான்

பங்காளிய ஏன் தேடுறேன்

எழுத நல்லா தெரிஞ்சிருந்தா - நான்தான்

எதிரொலிய ஏன் தேடுறேன்

நாலெழுத்துப் படிச்சிருந்தா - நான்தான்

நாலு தேசம் போய்வருவேன்

நாலு பக்கம் வரப்புக்குள்ளே - தெனமும்

நான் பாடுறேன் தெம்மாங்குதான்

பாடல் எழுந்த சூழல்

வரப்புகளுக்கு இடையே நின்று வயலில் வேலை செய்யும் விவசாயி ஒருவன் தனக்கு கல்வியறிவு இல்லாத காரணத்தினால் தான் படும் துன்பத்தை எண்ணி வருத்தத்துடன் பாடிக் கொண்டே தன் வேலையைச் செய்கிறான்.

 

மனிதனுக்கு மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.

வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்

பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!

பூச்சியைக் கவரும் வண்ணங்களில்

பூக்களிடம் விழுவது மனிதர்களே!

ஆழகைக் கொண்டு பூ கவருகையில்

அப்பூக்களிடம் பணிவது மனிதர்களே !

 

கட்டுரை எழுதுக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

முன்னுரை

எங்கள் ஊர் திருநெல்வேலி மாநகரமாகும் நெல்லையில் கோயில் கொண்டியிருக்கும் நெல்லையப்பரின் தேரோட்டத்தின் போது ஒரு மாதக் காலம் அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும்.

இனிய காட்சி

நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் மாநகராட்சி பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அதைக் கண்டுகளிக்க குடும்பத்துடன் ஒரு நாள் மாலை அங்கு சென்றோம்.

பல் துறை அரங்குகள்

உள்ளே நுழைந்தாலும் அரசு சார்பாக நடத்தப்படுகின்ற பொருட்காட்சியாக இருப்பதால் காவல்துறை, சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, விளம்பரத்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத் துறை சார்பாக தனித்தனி அரங்குகள் எங்கள் கண்களைக் கவர்ந்தன. வண்ண விளக்குகளுடன் ஏராளமாக புகைப்படங்களுடன், செய்முறைக் காட்சிகளுடன் அரங்குகள் பார்ப்வர்கள் மனதிற்கு விருந்தாக அமைந்திருந்தன.

விளையாட்டு அரங்குகள்

சிறுவர்கள், பெரியவர்கள் பொழுபோக்கு ஏராளமான விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன இராட்டினங்கள், ஊஞ்சல், மின்சாரத் தொடர்வண்டிகள், பேய்வீடு, இராட்சச ராட்டினங்கள் போன்றவற்றில் நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். எண்ணிலா மகிழ்ச்சியடைந்தோம்.

உணவு அரங்குகள்

எங்களைப் போல் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். நாங்கள் பஜ்ஜி, போண்டா, அப்பளம் போன்றவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தோம். குளிர்பானங்கள் அருந்தி மகிழ்ந்தோம். ஒன்றாக அமர்ந்து இன்மையுடன் பேசி நேரத்தை மகிழ்வுடன் கழித்தோம்.

விளையாட்டுப் பொருட்கள்

பல விளையாட்டு அரங்குகளில் விளையாட்டுப் பொருட்களை வாங்கினோம். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கினோம். துணிமணிகள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சிலவற்றை வாங்கி மகிழ்ந்தோம்.

முடிவுரை :

பொருட்காட்சியைக் கண்டு களித்தது, பேருந்தில் வந்தது உணவு உண்டு மகிழ்ந்தது அனைத்தும் மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. குடும்பம் சேர்ந்து மகிழ்ந்த இப்பொருட்காட்சியை என்றும் என்னால் மறக்க இயலாது.

 

மொழியோடு விளையாடு

தொடரில் விடுப்பட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் கருக்கத் தொடங்கியது மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுக்கள், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது

3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகளில் கதிரவனின் கதிரினால் வெயில் பரவிக் கிடக்கிறது.

5. வெயிலில் அலையாதே, உடல் கருத்துவிடும்.

 

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பாவை, கவிழும், விருந்து

1. விரட்டாதீர்கள் - பறவைக்கு மரம் வீடு

வெட்டாதீர்கள் - மனிதருக்கு அவை தரும் மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்

3. மலை முகட்டில் மேகம் தங்கும் அதைப்

பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் இதைத்

தத்துவமாயத் தோற்பாவை கூத்து சொல்லும்

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கை தட்டலே விருது அதில்

வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து

 

அகராதியில் காண்க.

தால் - நாக்கு

உழுவை - புலி

அகவுதல் - அழைத்தல்

ஏந்தெழில் - மிக்க அழகு

அணிமை சமீபம்

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


ஆடுவோம் ஆடுவோம்

ஆனந்தமாய் ஆடுவோம்

பழந்தமிழர் கலையை

பாங்குடனே ஆடுவோம்

ஓசைக்கேற்ப ஒய்யாரமாய் ஆடுவோம்

வண்ணத் துணிகளைக் கொண்டு

வடிவுடனே ஆடுவோம்

வளமான கலையை

வாழ நாளும் போற்றுவோம்

 

செயல் திட்டம்

பல்வேறு நிகழ்கலைகளின் ஒளிப்படங்களைத் தொகுத்து வகுப்பறையில் கண்காட்சி அமைக்க.

 

நிற்க அதற்குத் தக...

அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள் ஒரு புறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மாலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள் இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.

இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்வும் மேன்மேலும் பரவாலகவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்துக.


• பிறந்த நாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்

• எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்

• எங்கள் ஊர் திருவிழாவில் தாரை தப்பட்டை நிகழ்வை நடத்துவேன்.

• எம் பள்ளியில் பொம்மாலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வேன்.

• எங்கள் ஊர் இளைஞர்கள் இணைந்து ஒயிலாட்டப் பயிற்சி பெறுவோம்.

• எங்கள் கிராமத்தில் நாட்டுப்புறக் கலையை வளர்ப்போம்.

 

கலைச்சொல் அறிவோம்

Aesthetics - அழகியல், முருகியல்

Terminology - கலைச்சொல்

Airtifacts - கலைப் படைப்புகள்

Myth - தொன்மம்

 

அறிவை விரிவு செய்

தேன்மழை - சுரதா

திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு

நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்


 

இணையத்தில் காண்க.

http://www.akaramuthala.in/

uncategorized/அயல்-மோகத்தால்-அழிந்து-வ/

https://maduraivaasagan.

wordpress.com/

2011/09/08/நாட்டுப்புறக்கலைகள்-–-அக/

http://www.tamilvu.org/library/

nationalized/pdf/29-a.srinivasan/

kambanorusamudayaparvai.pdf

(கம்பனின் சமுதாயப் பார்வை)


Tags : Chapter 6 | 10th Tamil இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Tamil Language Exercise - Questions and Answers Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்