Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு - இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915 | 12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement

   Posted On :  09.07.2022 03:14 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915

முதல் உலகப்போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது.

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915

முதல் உலகப்போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. உள்ளூர் அரசு நியமித்த மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர் இந்தச் சட்டம் அனுமதித்தது. மீறுவோருக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரும் விதிமுறைகளையும் உத்தரவுகளையும் மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது; வாழ்நாள் முழுவதற்குமாய் நாடுகடத்துவது; பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது. வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றதால் முடிவுகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியில்லாதவையாகவும் இருந்தன. இந்தச் சட்டம் முதல் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர் முடிவுற்றபின் இச்சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது.

Tags : Impact of World War I on Indian Freedom Movement | History இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு.
12th History : Chapter 3 : Impact of World War I on Indian Freedom Movement : The Defence of India Act, 1915 Impact of World War I on Indian Freedom Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் : இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம், 1915 - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 3 : இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்