Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | சம உற்பத்தி செலவுக் கோடு

தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - சம உற்பத்தி செலவுக் கோடு | 11th Economics : Chapter 3 : Production Analysis

   Posted On :  27.07.2022 03:25 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

சம உற்பத்தி செலவுக் கோடு

ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணச் செலவில் வாங்கக்கூடிய இரு காரணிகளின் பல தொகுப்புகளைக் குறிப்பிடுவதே சம உற்பத்திச் செலவுக் கோடு ஆகும்.

சம உற்பத்தி செலவுக் கோடு

ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணச் செலவில் வாங்கக்கூடிய இரு காரணிகளின் பல தொகுப்புகளைக் குறிப்பிடுவதே சம உற்பத்திச் செலவுக் கோடு ஆகும். இதனை 'சம விலைக்கோடு' அல்லது 'சம வருவாய் கோடு' அல்லது 'சம செலவுக்கோடு' அல்லது 'மொத்த உற்பத்தி வளைகோடு' எனவும் அழைக்கலாம்.



ஓர் உற்பத்தியாளர் ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி செய்ய ₹120 ஒதுக்கிவைத்துள்ளார் என்று எடுத்துக்கொண்டால் அவர் இந்த தொகையை A மற்றும் B என்ற காரணிகளுக்கு செலவிடுவார். A என்ற காரணியின் விலை ₹30 எனவும், B என்ற காரணியின் விலை ₹10 எனவும் எடுத்துக் கொண்டால் சமஉற்பத்திச் செலவுக்கோடு கீழ்க்காணும் அட்டவணையை பயன்படுத்தி வரையலாம்.

மேற்கண்ட வரைபடத்தில் 5 விதமான உற்பத்திக் கலவைகள் (மூலதனம் மற்றும் உழைப்பினை பயன்படுத்தி) பெறப்பட்டுள்ளன. இதில் A என்ற கலவையில் 4 அலகுகள் மூலதனமும், 0 அலகு உழைப்பும் உள்ளன. இதற்காக ₹120 செலவிடப்பட்டுள்ளது.

இதனைப் போலவே மற்ற கலவைகளுக்காக (B, C, D, E) ஒரே மாதிரியான செலவு மேற்கொள்ளப்பட்டது (120).

இதனை இவ்வாறு குறிப்பிடலாம் 

4K + OL = ₹120 

3K + 3L = ₹120 

2K + 6L = ₹120 

IK + 9L = ₹120 

OK +12L = ₹120

ஆகையால் அனைத்து உற்பத்தி கலவைகளான A, B, C, D மற்றும் E ஒரே மொத்த உற்பத்திச் செலவை குறிக்கின்றன

வரைபடம் 3.10 ல் முக்கோணம் OAE என்ற பகுதி மூலதனம் மற்றும் உழைப்பிற்காக ஆகும் செலவினை காட்டுகிறது. AE என்ற நேர்கோடு சம உற்பத்தி செலவுக் கோடு ஆகும்.


Tags : Production Analysis | Economics தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : The Iso-cost Line Production Analysis | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : சம உற்பத்தி செலவுக் கோடு - தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு