Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | கால முறை வரிசை

நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு - கால முறை வரிசை | 3rd Maths : Term 3 Unit 6 : Time

   Posted On :  21.06.2022 06:34 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்

கால முறை வரிசை

உங்கள் தாய் இட்லி சமைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எவ்வாறு அதனைச் சமைப்பார்கள்?

கால முறை வரிசை

உங்கள் தாய் இட்லி சமைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எவ்வாறு அதனைச் சமைப்பார்கள்?

   ❖ முதலில் அரிசியையும் உளுந்தையும் தண்ணீரில் ஊர வைப்பார்.

இரண்டாவதாக ஊறிய பொருள்களை அரைத்து உப்பு சேர்த்து மாவாக மாற்றுவார். 

மூன்றாவதாகப் புளிப்பதற்காக மாவை ஓரிரவு அப்படியே வைப்பார்.

நான்காவதாக மாவை வேக வைத்து இட்லி செய்வார். 

இட்லி சமைக்கும் செயலில் இந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். 

நிகழ்வுகளை அவை நடைபெறும் வரிசையில் வரிசைப்படுத்தும் முறையைக் கால முறை வரிசை என்று அழைப்போம். 

கால முறை வரிசையில் பொருள்களை வரிசைப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு 

வரலாற்று நிகழ்வுகள்

கல்வித் தகுதி 

குடும்ப வரைபடம்


1. முதலில் நடைபெறும் நிகழ்விற்கு ‘மு’ எனவும் அடுத்ததாக நடைபெறும் நிகழ்விற்கு ‘அ’ எனவும் எழுதுக.


1. சாப்பிடுதல் (அ)சமைத்தல் (மு)

2. தொடர்வண்டி அல்லது பேருந்தில் ஏறுவது (மு) செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைதல்(அ)

3. வரைபடம் வரைதல் (மு) வண்ணம் தீட்டுதல்(அ)

4. பையிலிருந்து புத்தகத்தை எடுத்தல் (மு) வாசித்தல்(அ)

5. கதவைத் திறப்பது (மு) அறையினுள் நுழைதல(அ)


இது கயல்விழியின் குடும்பம்

தாத்தா, பாட்டி, தந்தை, தாய், கயல்விழி மற்றும் அவளது இளைய சகோதரன் எனும் வரிசையே கயல்விழி குடும்பத்தின் கால முறை வரிசை ஆகும். 


2. பின்வரும் நிகழ்வுகளைக் கால முறை வரிசையில் வரிசைப்படுத்துக. 

 i. நடக்க ஆரம்பித்தல், பிறப்பு, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தல், மூன்றாம் வகுப்பில் பயிலுதல், இரண்டாம் வகுப்பில் பயிலுதல்.

1. பிறப்பு, 

2. நடக்க ஆரம்பித்தல், 

3. பள்ளியில் முதல் வகுப்பில் சோத்தல்,

4. இரண்டாம் வகுப்பில் பயிலுதல்,

5. மூன்றாம் வகுப்பில் பயிலுதல். 

ii. விதை விதைத்தல், காய் காய்த்தல், பழம் பழுத்தல், பூ பூத்தல், செடி வளர்தல்.

1. விதை விதைத்தல், 

2. செடி வளர்தல், 

3. காய் காத்தல், 

4. பூ பூத்தல், 

5. பழம் பழுத்தல்.


3. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் காலமுறை வரிசைப்படி எழுதுக. 

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த வருடங்களைக் கேட்டறிந்து கால முறையில் வரிசைப்படுத்தவும்.

(தாத்தாவின்  பெயர்  )

(பாட்டியின் பெயர் )

(அப்பா பெயர் )

(அம்மா பெயர் )

(அண்ணன் / அக்கா பெயர் )

(உன் பெயர் )

(தம்பி / தங்கை பெயர் 



Tags : Time | Term 3 Chapter 6 | 3rd Maths நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 6 : Time : Time: Chronological Order Time | Term 3 Chapter 6 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம் : கால முறை வரிசை - நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்