Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள்

பொருளாதாரம் - அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis

   Posted On :  27.07.2022 03:48 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள்

அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும்.

அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள்

அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும். 

1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13) 

அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1). பொருளின் விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும் போது, பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும். 

2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1). விலையில் ஒரு சதவீத மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீத மாற்றமே ஏற்படும். 

3. குறைவான நெகிழ்ச்சி அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே அமையும் (Es<1). விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும். 

4. முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பு நெகிழ்ச்சி பூஜ்யத்திற்கு சமமாக உள்ளது (Es = 0) விலையில் சமமாக ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 

5. முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு (பார்க்க படம் 3.13)

அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (es=). விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை எற்படுத்தும்



Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 3 : Production Analysis : Types of Elasticity of Supply Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு : அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகள் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு