Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | இறையாண்மையின் வகைகள்
   Posted On :  25.09.2023 05:59 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

இறையாண்மையின் வகைகள்

இங்கே ஒரு சுவாரசியமான தகவல்!

இறையாண்மையின் வகைகள் "நடைமுறை மற்றும் சட்டப்படியான இறையாண்மை"


நடைமுறை இறையாண்மை (De-facto sovereignty) 

இவ்வகை இறையாண்மை சட்ட பூர்வமாக இல்லாது, உண்மையான அதிகாரத்தைப் பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மையாகும். 

சட்டப்படியான இறையாண்மை (De-jure sovereignty) 

இவ்வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது, சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்.


இங்கே ஒரு சுவாரசியமான தகவல்!

இயக்குனரகமுறை ஆட்சியமைப்பினை தூக்கி எறிந்த பின்னர், நெப்போலியன் உண்மையான நடைமுறை இறையாண்மையை (De-facto) பெற்று விளங்கினார். ஸ்பெயினில், சட்ட இறையாண்மையை வேரோடு கலைத்து, ப்ராங்கோ நடைமுறை இறையாண்மையை (De-facto) கையகப்படுத்தினார். அப்டோபர் 28,1922-இல் நடந்த கறுப்புச்சட்டை புரட்சிக்கு பின்னர், முசோலினி சட்டப்பூர்வமான பிரதம அமைச்சராக அதிகாரம் பெற்றார். இவர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி அதன் மூலம் இத்தாலியை ஆட்சி செய்தார். நாடாளுமன்றம் சட்ட இறையாண்மையையும், முசோலினி நடைமுறை இறையாண்மையையும் (De-facto) பெற்று ஆட்சி அரங்கேறியது. மேலும் ஹிட்லரும், ஜெர்மனியில் இச்செயல்பாட்டையே பின்பற்றினார். இவர் சட்ட இறையாண்மையை கையகப்படுத்தியதுடன் மட்டுமல்லாது, நடைமுறை இறையாண்மையைப் (De-facto) பெற்று ஆட்சி செய்தார்.


ஜான்ஆஸ்டின் (1780-1859) இங்கிலாந்து நாட்டை சார்ந்த சட்ட வல்லுனரான இவர் சட்ட இறைமைக்கு தன்னுடைய நீதிபரிபாலனமும் விரிவுரைகள் (1832) என்ற நூலில் விளக்கம் அளித்துள்ளார் இவர் ஒருமைவாத இறையாண்மை கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : Types of Sovereignty in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : இறையாண்மையின் வகைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்