Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | காட்சித் தொடர்பியல்

மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - காட்சித் தொடர்பியல் | 7th Science : Term 3 Unit 6 : Visual Communication

   Posted On :  11.05.2022 08:44 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல்

காட்சித் தொடர்பியல்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் * லிப்ரெஆபிஸ் மென்பொருள் மூலம் ஒரு ஆவணத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வார்கள் * மாணவர்களின் படைப்பு சிந்தனை அதிகரிக்கும் * ஆவணத்தை ஒழுங்கமைக்கவும் மற்றும் வடிவமைக்கவும் அறிந்து கொள்வார்கள்

அலகு 6

காட்சித் தொடர்பியல்



கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள்

* லிப்ரெஆபிஸ் மென்பொருள் மூலம் ஒரு ஆவணத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வார்கள் 

* மாணவர்களின் படைப்பு சிந்தனை அதிகரிக்கும் 

* ஆவணத்தை ஒழுங்கமைக்கவும் மற்றும் வடிவமைக்கவும் அறிந்து கொள்வார்கள்


அறிமுகம்

இந்த பாடத்தில் மாணவர்கள் மென்பொருள் லிப்ரெஆபீசைப் பயன்படுத்த கற்றுக்கொள்வார்கள்.

லிப்ரெஆபிஸ் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் இலவச அலுவலக பயன்பாட்டு தொகுப்பு மென்பொருள் ஆகும். இதன் இடைமுகம் மற்றும் பயனுள்ள கருவிகள் உங்கள் படைப்பாற்றல் மேம்படுத்திட மற்றும் உங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவும். லிப்ரெஆபீஸில் பின்வரும் பயன்பாடுகள் உள்ளன.


உரை ஆவணம் (Text Document)

எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள், செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு உரை ஆவணம் (Word செயலி) ஒரு கருவியாகும்.


அட்டவணைச்செயலி (Spreadsheet)

ஒரு உயர் முடிவு அட்டவணையிலிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை வரைபடங்கள் (Chart) மற்றும் முடிவு செய்யும் அம்சங்களை அட்டவணைச்செயலி கொண்டுள்ளது. இதில், நிதி, புள்ளியியல் மற்றும் கணித செயல்பாடுகளுக்காக, 300க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் (Functions) உள்ளன. 


நிகழ்த்துதல் (Impress)

சிறப்பு விளைவுகள், அசைவூட்டம் மற்றும் வரைதல் கருவிகள் போன்ற பொதுவான மல்டிமீடியா விளக்கக்காட்சி உருவாக்க பயன்படுகிறது.


படங்கள் வரைதல் (Draw)

வரைதல் என்பது எளிய வரைபடங்கள் அல்லது பாய்வு படங்கள் (Flowcharts) முதல் 3டி ஆர்ட்வேலை வரை அனைத்தையும் உருவாக்கும் ஒரு வெக்டர் வரைதல் கருவி ஆகும்.


தரவுத்தளம் (Data base)

இது படிவங்கள், அறிக்கைகள், வினவல்கள், அட்டவணைகள் உருவாக்கவும், திருத்தவும் மற்றும் அதனைப் பார்வையிடவும் பயன்படுகிறது. உறவுசார் தரவுத்தளத்தை நிர்வகிப்பது என்பது மற்ற பிரபலமான தரவுத்தள பயன்பாடுகளைப் போன்றதாகும்.


லிப்ரெஆபிஸ் ஃபார்முலா (சூத்திரங்களை உருவாக்குதல்)

லிப்ரெஆபிஸ் ஃபார்முலா அல்லது சமன்பாடு எடிட்டரை பயன்படுத்தி சிக்கலான சமன்பாடுகளை உருவாக்க முடியும், இதில் நிலையான எழுத்துரு தொகுப்பில் இல்லாத குறியீடுகளைக் கூட பயன்படுத்தி சூத்திரங்களை உருவாக்கலாம்.


மென்பொருளைப் பெறுவது எப்படி

விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ் ஆகியவற்றின் லிப்ரெஆபிஸ் பதிப்புகளை https://www.libreoffice.org/download இலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Tags : Term 3 Unit 6 | 7th Science மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 6 : Visual Communication : Visual Communication Term 3 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல் : காட்சித் தொடர்பியல் - மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல்