Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | அலைகள், அலைகளின் பகுதிகள்
   Posted On :  25.03.2022 03:39 pm

11 வது புவியியல் : அலகு 5 : நீர்க்கோளம்

அலைகள், அலைகளின் பகுதிகள்

கடல் நீரானது தனது ஆற்றலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் போக்கினை அலை என்கிறோம்.

அலைகள்

கடல் நீரானது தனது ஆற்றலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் போக்கினை அலை என்கிறோம். இவை காற்றின் உராய்வினாலும்கடலுக்கு அடியில் தோன்றும் இதர இடையூறுகளினாலும் ஏற்படுகின்றன.

அலைகளின் பகுதிகள்

1. அலை முகடு

ஒரு அலையின் மேல்பகுதி அல்லது உயர்ந்த பகுதி அலை முகடு என்று அழைக்கப்படுகிறது.


2. அலை அகடு / பள்ளம்

அலையின் கீழ் அல்லது தாழ்வான பகுதி அலை அகடு என்று அழைக்கப்படுகிறது.

 

3. அலை உயரம்

அலை முகடு மற்றும் அலை அகடுகளுக்கு இடையேயுள்ள செங்குத்து தூரம் அலை உயரம் என அறிப்படுகிறது.

 

4. அலை நீளம்

இரண்டு முகடு அல்லது அலை அகடுக்கிடையேயான கிடைமட்ட தூரம் அலை நீளம் எனப்படும்.

 

5. அலை வீச்சு

அலை வீச்சு அலை உயரத்தில் ஒரு பாதி ஆகும்.

 

6. அலைக்களம்

வீசும் காற்றிற்கும் அது கடக்கும் நீரின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்ட தூரம் ஆகும்.

 

7. அலை அதிர்வெண்

ஒரு குறிப்பிட்ட நேரம் (அ) அலகு இடைவெளியில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து கடந்து செல்லும் அலை நீளங்களின் எண்ணிக்கை அலை அதிர்வெண் ஆகும்.(எ.கா) 100 அலைகள் செகண்ட், 1 செ.மீ

 

8. அலையின் காலம்

ஒரு அலை நீளம் நிலையான புள்ளியை கடந்து செல்லும் நேரம் காலம் எனப்படும்.

 

9. அலைதிசைவேகம்

அலை நீளத்தை பிரிப்பதற்கு ஆகும் வேகம் அலை திசைவேகம் என்கிறோம்.

 

10. அலையின் செஞ்சரிவு நிலை 

அலையின் செஞ்சரிவு நிலை என்பது அலையின் நீளம்உயரங்களுக்கு இடையேயுள்ள விகிதங்க ளுக்குச் சமம். (H/L).

 

11th Geography : Chapter 5 : Hydrosphere : Waves and Parts of Waves in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 5 : நீர்க்கோளம் : அலைகள், அலைகளின் பகுதிகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 5 : நீர்க்கோளம்