Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவான விடை தருக.

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

   Posted On :  25.07.2022 02:56 am

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

விரிவான விடை தருக.

VI. விரிவான விடை தருக. VII. களஆய்வு. VII. செயல்முறைகள் மற்றும் செயல்பாடு. VIII. செயல்முறைகள் மற்றும் செயல்பாடு. IX. வாழ்க்கைத் தி்றன்கள் - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள் - சமூக அறிவியல் : பொருளியல் : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

VI. விரிவான விடை தருக.

 

1. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?

• சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்,

• துறை சார்ந்த சிறப்பு கவனம்.

• நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.

• புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.

• நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.

• பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.

• சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.

• பிராந்திய மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

 

2. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.

• இந்தியாவில் மிகப் பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.

• காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது.

• தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. அவைகள் கோயம்புத்தூரைச் சுற்றி 100 முதல் 150கி.மீ சுற்று வட்டார பகுதிகளாகும்.

• நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.

• ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின் தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

• திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.

• இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது

• மேஜைத் துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்காரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.

• பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரைவிரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கிறது.

• பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.

 

3. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

கல்வி:

• திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்க கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண்கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

• இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களை தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்

• இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில் நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையம் நமது மாநிலத்தில் தான் உள்ளது.

உள்கட்டமைப்பு :

• மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.

• மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.

• பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.

தொழில்துறை ஊக்குவிப்பு:

• பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கி கருவிகள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் நல்லமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

• எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தரப் பிரிவில் மேம்படுத்த உதவும் ஆதரவான உள் கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில் துறை மேம்பாடு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

 

4. தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.

• தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறார்கள்.

• இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.

• குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.

• தொழில் முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்ப தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள்.

• தொழில் நுட்பத்தை மாற்றும் சூழலில் பணியாற்றி மேலும் புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

• தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

 

VII. களஆய்வு.

 

1. இணைய வழி ஆராய்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு தொழில் தொகுப்பினை தேர்ந்தெடுத்து அதனைப் குறிப்புகளை எழுதுக.

மாணவர் செயல்பாடு.

 

VIII. செயல்முறைகள் மற்றும் செயல்பாடு.

 

1. உங்கள் கூர்ந்து நோக்குதலின் அடிப்படையில் உங்கள் பள்ளி / வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தொழில் தொகுப்பினை  அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றி ஒரு குறிப்பை எழுதுக.

மாணவர் செயல்பாடு.


IX. வாழ்க்கைத் தி்றன்கள்

1. ஆசிரியரும் மாணவர்களும் தொழில் முனைவோர் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் பற்றி விவாதித்து, ‘நீங்கள் ஒரு தொழில் முனைவோரைப் போல இருந்தால்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்கள்.

 

Tags : Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : Write Brief Answer Industrial Clusters in Tamil Nadu | Economics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : விரிவான விடை தருக. - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | பொருளியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்