Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | P-தொகுதி தனிமங்கள் -II : பாடச்சுருக்கம்

வேதியியல் - P-தொகுதி தனிமங்கள் -II : பாடச்சுருக்கம் | 12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II

   Posted On :  11.11.2022 05:58 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II

P-தொகுதி தனிமங்கள் -II : பாடச்சுருக்கம்

பூமியின் வளிமண்டலமானது ஏறத்தாழ 78% டைநைட்ரஜன் (N2) வாயுவைக் கொண்டுள்ளது. மேலும் இது சோடியம் நைட்ரேட்டாகவும் (சிலி வெடியுப்பு) பொட்டாசியம் நைட்ரேட்டாகவும் (இந்திய வெடியுப்பு)புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது.

பாடச்சுருக்கம்

* பூமியின் வளிமண்டலமானது ஏறத்தாழ 78% டைநைட்ரஜன் (N2) வாயுவைக் கொண்டுள்ளது. மேலும் இது சோடியம் நைட்ரேட்டாகவும் (சிலி வெடியுப்பு) பொட்டாசியம் நைட்ரேட்டாகவும் (இந்திய வெடியுப்பு)புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. 

*வளிமண்டலத்தின் முதன்மையான நைட்ரஜன் (78% கன அளவு) வாயுவானது, தொழிற்முறையில், பின்னவாலை வடித்தல் முறையில் திரவ காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 

* யூரியாவை நீராற்பகுப்பதன் மூலம் அம்மோனியா பெறப்படுகிறது.  

* சமஅளவு பொட்டாசியம் அல்லது சோடியம் நைட்ரேட்டை, அடர் கந்தக அமிலத்துடன் சேர்த்து வெப்பப்படுத்தி நைட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. 

* பெரும்பாலான வினைகளில் நைட்ரிக் அமிலம் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எனவே, ஆக்ஸிஜனேற்ற நிலை +5 லிருந்து குறைந்தபட்ச மதிப்பான ஒன்றுக்கு மாற்றமடைகிறது. இது உலோகங்களுடன் வினைப்பட்டு ஹைட்ரஜனைத் தருவதில்லை. 

* உலோகங்கள், நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிவதை பின்வரும் மூன்று படிகளின் மூலம் விளக்கலாம். 

* முதல் நிலை வினை: பிறவிநிலை ஹைட்ரஜனை வெளியேற்றப்பட்டு உலோக நைட்ரேட் உருவாக்கப்படுகிறது. 

* இரண்டாம் நிலை வினை: பிறவிநிலை ஹைட்ரஜன், நைட்ரிக் அமிலத்தின் ஒடுக்க விளைப்பொருட்களை உருவாக்குகிறது.

* மூன்றாம் நிலை வினை: இரண்டாம் நிலை விளைப்பொருட்கள் சிதைவடைந்தோ அல்லது தொடர்ந்து வினைபுரிந்தோ இறுதி விளைப்பொருட்களை தருகின்றன. 

* பாஸ்பரஸ் பல்வேறு புறவேற்றுமை வடிவங்களைப் பெற்றுள்ளது, அவற்றில் வெண்ணிற பாஸ்பரஸ், சிவப்பு பாஸ்பரஸ் மற்றும் கருமை நிற பாஸ்பரஸ் ஆகியன மிகப் பொதுவானவை ஆகும்.

* புதிதாக தயாரிக்கப்பட்ட வெண் பாஸ்பரஸ் நிறமற்றது ஆனால், சிறிது நேரத்தில் சிவப்பு பாஸ்பரஸ் அடுக்கு உருவாவதால் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறுகிறது. இது விஷத்தன்மை கொண்டது மேலும் உள்ளிப்பூண்டின் மணத்தைப் பெற்றுள்ளது. 

* கார்பன் டை ஆக்சைடு அல்லது ஹைட்ரஜன் மந்தச் சூழலில் வெண்பாஸ்பரஸை சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைப்படுத்தி பாஸ்பீன் தயாரிக்கப்படுகிறது. 

* பாஸ்பீன் அதிகளவில் புகையை உருவாக்குவதால் புகைத்திரையை உருவாக்க பயன்படுகிறது. 

* வெண் பாஸ்பரஸ் மீது குளோரின் வாயுவை மெதுவாக செலுத்தும்போது பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு உருவாகிறது. 

* பாஸ்பரஸ் ட்ரைகுளோரைடு மற்றும் பாஸ்பரஸ் பெண்டாகுளோரைடு ஆகியவை குளோரினேற்றம் செய்ய பயன்படுகின்றன 

* ஆக்ஸிஜன் பாரா காந்தத் தன்மை கொண்டது. டை ஆக்ஸிஜன் (O2) மற்றும் ஓசோன் அல்லது ட்ரை ஆக்ஸிஜன் (O3)என இரண்டு புறவேற்றுமை வடிவங்களில் ஆக்ஸிஜன் காணப்படுகிறது. 

* மாறாக, ஓசோனானது ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றும் காரணியாகும். 

* கந்தகமானது படிக வடிவமுடைய மற்றும் படிக வடிவமற்ற புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. சாய்சதுர கந்தகம் (a sulphur கந்தகம்) மற்றும் ஒற்றைச் சரிவு கந்தகம் (β sulphur கந்தகம்) ஆகியன படிக உருவமுடையவை. நெகிழி கந்தகம் (y sulphur) கந்தகப் பால்மம் மற்றும் கூழ்ம கந்தகம் ஆகியன படிக உருவமற்றவை. 

* காரீய சிற்றறை முறையில் கந்தக அமிலம் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. தொடு முறை, அடுக்கு முறை ஆகியனவற்றின் மூலமும் கந்தக அமிலத்தை தயாரிக்கலாம். 

* நீரில் கரைக்கும் போது மோனோ(H2SO4H2O) மற்றும் டைஹைட்ரேட்டுகளை (H2SO42H2O) தருகின்றது. 

* ஹேலஜன்கள் அதிக வினைத்திறன் உடையதால் இணைந்த நிலையில் மட்டுமே காணப்படுகின்றன. 

* ஆக்சிஜனேற்றம் மற்றும் வெளுக்கும் பண்பு பிறவிநிலை ஆக்சிஜனின் காரணமாக, குளோரின் ஒரு வலிமைமிக்க ஆக்சிஜனேற்றி மற்றும் வெளுக்கும் காரணியாகும். 

* மூன்று பங்கு அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை இராஜதிராவகம் என அழைக்கப்படுகிறது. இது தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றை கரைக்கப் பயன்படுகிறது. 

* அதிக அயனியாக்கும் திறன் பெற்றுள்ளதால் ஹைட்ரஜன் ஹேலெடுகள் நீரில் அதிக அளவில் கரைகின்றது 

* ஒவ்வொரு ஹேலஜனும் மற்ற ஹேலஜன்களுடன் வினைபட்டு ஹேலஜன் இடைச் சேர்மங்களை உருவாக்குகின்றன. 

* புளூரின் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிந்து டைபுளூரின் ஆக்சைடு (F2O) மற்றும் டைபுளூரின் டைஆக்சைடை (F2O2) தருகிறது. 

* அனைத்து மந்த வாயுக்களும் வளிமண்டலத்தில் காணப்படுகின்றன  * சோடியம் பெர்சினேட் ஒரு வலிமையான ஆக்சிஜனேற்றும் வினைப்பொருளாகும். 

* மந்தவாயுக்களின் வேதியியல் மந்தத்தன்மையே அவைகளின் முக்கிய பயன்பாட்டிற்கான காரணமாகும்.


Tags : Chemistry வேதியியல்.
12th Chemistry : UNIT 3 : p-Block Elements-II : p-Block Elements-II: Summary Chemistry in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II : P-தொகுதி தனிமங்கள் -II : பாடச்சுருக்கம் - வேதியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 3 : P-தொகுதி தனிமங்கள் -II