Posted On :  30.07.2022 06:10 am

10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்

pH கணக்கீடுகள்

pH என்பது ஹைட்ரஜன் அயனி செறிவின் பத்தை அடிப்படையாக கொண்ட மடக்கையின் எதிர் மதிப்பாகும்.

கணக்கீடுகள்

pH என்பது ஹைட்ரஜன் அயனி செறிவின் பத்தை அடிப்படையாக கொண்ட மடக்கையின் எதிர் மதிப்பாகும்.

pH = –log10 [H+]


எ.கா: 0.01 M HNO3 கரைசலின் pH மதிப்பு காண்க.

தீர்வு

[H+] = 0.01

pH = –log10 [H+]

pH = –log10 [0.01]

pH = –log10 [1 × 10−2]

pH = –(log101 – 2 log1010)

pH = 0 + 2 × log1010

pH = 0 + 2 × 1 = 2

pH = 2


pOH என்பது ஹைட்ராக்சில் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாக கொண்ட மடக்கையின் எதிர் மதிப்பாகும்.

pOH = –log10[OH]

 

எ.கா: ஒரு கரைசலின் ஹைட்ராக்சில் அயனி செறிவு 1 × 10-9 M எனில் அக்கரைசலின் pOH மதிப்பு என்ன ?

தீர்வு

pOH = –log10 [OH]

pOH = –log10 [1 × 10−9]

pOH = –(log10 1.0 + log10 10−9)

pOH = –(0–9 log1010)

pOH = –(0 – 9)

pOH = 9

 

pH மற்றும் pOH க்கு உள்ள தொடர்பு

ஒரு நீர்க்கரைசலின் pH மற்றும் pOH-க்கு இடையேயான தொடர்பை கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறியலாம்.

pH + pOH = 14

கரைசலின் pH மற்றும் pOH ல் ஏதேனும் ஒரு மதிப்பு தெரிந்தால் மற்றொன்றை எளிதாக கணக்கிடலாம்.

 

எ.கா: ஒரு கரைசலின் pOH மதிப்பு 11.76 எனில் அக்கரைசலின் pH மதிப்பு காண்க.

pH = 14 – pOH

pH = 14 - 11.76 = 2.24

 

10th Science : Chapter 10 : Types of Chemical Reactions : pH Calculation in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள் : pH கணக்கீடுகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 10 : வேதிவினைகளின் வகைகள்