கணினி அறிவியல் - நெறிமுறைகள் | 11th Computer Science : Chapter 6 : Specification and Abstraction
நெறிமுறைகள் (Algorithms)
நெறிமுறை என்பது ஒரு பணியை நிறைவேற்றுவதற்கான அல்லது ஒரு சிக்கலை தீர்க்க படிப்படியான வழிமுறைகளின் வரிசை ஆகும். ஒருவழிமுறை ஒருசெயலைவிவரிக்கிறது. கட்டளைகளை செயல்படுத்தப்படும்போது, ஒரு செயல்முறை உருவாகிறது, இது குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுகிறது அல்லது கொடுக்கப்பட்ட சிக்கலை தீர்க்கிறது. ஒரு உணவு தயார் செய்வதற்கான செய்முறைக்கு ஒரு நெறிமுறையை ஒப்பிடலாம், மேலும் இதன் விளைவாக சமையல் செய்தல்.
ஒரு நெறிமுறையை கணிப்பொறியில் இயங்குவதே நமது நோக்கமாகும். நிரலாக்க மொழியில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை மட்டுமே கணிப்பொறியில் இயக்கப்படும் கணிப்பொறியின் கட்டளைகளை கூற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே, இறுதியில் நெறிமுறைகள் ஒரு நிரலாக்க மொழியின் கூற்றுகளாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு சிக்கலானது, உள்ளீட்டுத் தரவு, தேவையான வெளியீடு, உள்ளீடு மற்றும் வெளியீடு தரவுகளுக்கு இடையே உறவை குறிப்பிடுகிறது. ஒரு நெறிமுறையானது உள்ளீட்டுத் தரவோடு செயல்பட தொடங்கி, கூற்றுகளை செயல்படுத்தி, நிறைவாக வெளியீட்டுத் தரவுடன் செயல்பாட்டை நிறைவு செய்கிறது. இது நிறைவேற்றப்படுகையில், உள்ளீடு தரவு மற்றும் வெளியீட்டுத் தரவு ஆகியவற்றிற்கு இடையேயான குறிப்பிட்ட உறவு நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னரே கொடுக்கப்பட்ட சிக்கலை தீர்ப்பதற்கான நெறிமுறையாக கருதப்படும்.
ஒரு நெறிமுறையின் நோக்கம் என்பது ஒரு சிக்கலை தீர்க்க படிப்படியான வரிசை கொண்ட கூற்றுகள் ஆகும். நெறிமுறை உள்ளீட்டுத் தரவோடு செயலாற்றும்போது, மேலும் வெளியீட்டை வழங்குகின்றது, உள்ளீடு தரவு மற்றும் வெளியீட்டு தரவு இடையே குறிப்பிட்ட உறவை நிறைவேற்றுகின்றது.
எடுத்துக்காட்டு 6.1. இரண்டு எண்களைச்கூட்டுவது :
இரண்டு எண்களை கூட்ட, நாம் முதலில், இரண்டு எங்களின் வலது ஓர இலக்கங்களை கூட்ட வேண்டும். பிறகு அடுத்த முன் வலதுபக்கமாக உள்ள இலக்கங்களைக் கூட்டி முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விளைந்த தொகு (carry) எண்ணை சேர்த்து கூட்ட வேண்டும். இதேபோல் மீதமுள்ள எண்களை கூட்ட வேண்டும். 2586 மற்றும் 9237 ஐ கூட்டுவதற்கான செயல்முறை6.1-ல் அட்டவணை விளக்கப்பட்டுள்ளது.