31. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி
விடை
(i) ஒரு கிலோ கிராம் கரைப்பானில் கரைந்துள்ள கரை பொருளின் மோல்களின் எண்ணிக்கையே மோலாலிட்டி எனப்படும்.
மோலாலிட்டி (m) =
கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை / கரைப்பானின் நிறை (கிகி)
(ii) ஒரு லிட்டர் கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் கிராம் சமான நிறைகளின் எண்ணிக்கையே நார்மாலிட்டி எனப்படும்
நார்மாலிட்டி (n) =
கரைபொருளின் கிராம் சமான நிறைகளின் எண்ணிக்கை / கரைசலின் கன அளவு (லிட்டர்)
32. திரவத்தின் ஆவி அழுத்தம் என்றால் என்ன? ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு என்றால் என்ன?
விடை
● கொடுக்கப்பட்ட வெப்ப நிலையில் ஒரு திரவத்துடன் சமநிலையில் உள்ள அதன் ஆவியின் அழுத்தமானது, அத்திரவத்தின் ஆவி அழுத்தம் எனப்படுகிறது.
● தூய கரைப்பானின் ஆவி அழுத்தத்திற்கும், கரைசலின் ஆவி அழுத்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆவி அழுத்த குறைவு எனப்படும்.
ΔP / P = (P° - P)
● ஆவி அழுத்த குறைவிற்கும், தூய கரைப்பானின் ஆவி அழுத்தத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஒப்பு ஆவி அழுத்தக் குறைவு எனப்படும்.
ΔP / P° = (P° - P) / P°
33. ஹென்றி விதியைக் கூறி விளக்குக.
விடை
● செறிவு குறைந்த கரைசலில் உள்ள ஆவி நிலையிலுள்ள வாயுவின் பகுதி அழுத்தமானது (கரைபொருளின் ஆவி அழுத்தம்) அக்கரைசலின் வாயுக் கரைபொருளின் மோல் பின்னத்திற்கு நேர் விகிதத்திலிருக்கும்.
P வாயு கரைபொருள் α X கரைசலில் உள்ள வாயு கரைபொருள்
P வாயு கரைபொருள் = KH X கரைசலில் உள்ள வாயு கரைபொருள்
P வாயு கரைபொருள் = வாயு கரைபொருளின் பகுதி அழுத்தம் (ஆவி அழுத்தம்)
KH = ஹென்றி மாறிலி
X கரைசலில் உள்ள வாயு கரைபொருள் = கரைசலில் உள்ள வாயு கரைபொருளின் மோல் பின்னம்.
34. ரௌல்ட் விதியைக் கூறு மேலும் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைப்பானில் கரைக்கும் போது ஏற்படும் ஆவி அழுத்தக்குறைவிற்கான சமன்பாட்டைத் தருவி.
விடை
ரௌல்ட் விதி: மாறாத வெப்பநிலையில் ஒரு கரைசலின் ஆவி அழுத்தமானது. அதிலுள்ள கரைப்பானின் மோல் பின்னத்திற்கு நேர்விகிதத்திலிருக்கும்
Pகரைசல் α XA ..... (1)
Pகரைசல் = K XA ..... (2)
[XA = கரைப்பானின் மோல் பின்னம் ]
XA = 1 எனில் K = Po கரைப்பான்
[Po = தூய கரைப்பானின் ஆவி அழுத்தம் ]
ஃ P கரைசல் = Poகரைப்பான் XA ..... (3)
P கரைசல் / Poகரைப்பான் = XA ..... (4)
சமன்பாடு (4) ஐ ஒன்றிலிருந்து கழிக்க
l - P கரைசல் / Poகரைப்பான் = l - XA ..... (5)
[XA + XB = 1 XB = l - XA ]
Poகரைப்பான் - P கரைசல் / Poகரைப்பான் = XB ..... (6)
எனவே ரௌல்ட் விதியினை பின்வருமாறும் கூறலாம்:
"மாறாத வெப்பநிலையில், எளிதில் ஆவியாகாத கரைபொருளைக் கொண்டுள்ள ஒரு நல்லியல்புக் கரைசலின் ஒப்பு ஆவி அழுத்தக் குறைவானது, கரை பொருளின் மோல் பின்னத்திற்கு சமம்."
35. மோலால் தாழ்வு மாறிலி என்றால் என்ன? இது கரைபொருளின் தன்மையை பொருத்து அமைகிறதா?
விடை
● ஒரு மோலால் கரைசலின் உறைநிலைத் தாழ்வு மோலால் தாழ்வு மாறிலி எனப்படுகிறது.
● மோலால் தாழ்வு மாறிலி கரைபொருளின் தன்மையை பொருத்ததல்ல, ஆனால் கரைப்பானின் தன்மையைப் பொருத்தது.
36. சவ்வூடுபரவல் என்றால் என்ன?
விடை
சவ்வூடு பரவல் என்பது ஒரு கூறு புகவிடும் சவ்வின் வழியாக, கரைப்பான் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலிலிருந்து, செறிவு மிகுந்த கரைசலுக்கு விரவிச் செல்லும் தன்னிச்சையான நிகழ்வு ஆகும்.
37. “ஐசோடானிக் கரைசல்கள் " எனும் சொற்பதத்தை வரையறு.
விடை
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், ஒத்த சவ்வூடு பரவல் அழுத்தங்களைக் கொண்ட கரைசல்கள் ஐசோடானிக் கரைசல்கள் எனப்படும்.
38. A என்ற திடப்பொருள் மற்றும் அதன் மூன்று கரைசல்கள் (i) ஒரு தெவிட்டிய கரைசல், (ii) ஒரு தெவிட்டா கரைசல் மற்றும் (iii) ஒரு மீ தெவிட்டிய கரைசல் ஆகியன உன்னிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த கரைசல் என்ன வகையானது என எவ்வாறு கண்டறிவாய்?
விடை
கொடுக்கப்பட்ட திடப்பொருள் Aன் மூன்று கரைசல்களை என்ன வகை என பின்வருமாறு கண்டறியலாம்.
39. கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.
விடை
● அழுத்த மாற்றம் திண்மங்கள் மற்றும் நீர்மங்களின் கரைதிறனில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்குவதில்லை, ஏனெனில் அவை அமுங்குவதில்லை.
● ஆனால், அழுத்தம் அதிகரிக்கும் போது வாயுக்களின் கரைதிறன் பொதுவாக அதிகரிக்கிறது.
● ஒரு மூடிய கலனில், நீர்ம கரைப்பானில் வாயுக்கரை பொருள் கரைந்துள்ள ஒரு தெவிட்டிய கரைசலில் பின்வரும் சமநிலை நிலவுகிறது.
வாயு (வாயு நிலைமையில்) ⇌ வாயு (கரைசலில்)
லீ சாட்லியர் கொள்கைப்படி, அழுத்தம் அதிகரிக்கும் போது சமநிலையானது அழுத்தத்தை குறைக்கும் திசை நோக்கி நகரும். எனவே அதிகளவு வாயு மூலக்கூறுகள் கரைப்பானில் கரைகின்றன. இதனால் கரைதிறன் அதிகரிக்கிறது.
40. 12 M செறிவுடைய ஹைட்ரோகுளோரிக் அமில கரைசல் ஒன்றின் அடர்த்தி 1.2 gL-1. அதன் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக.
விடை
கொடுக்கப்பட்டவை :
மோலாரிட்டி = 12 M HCl
கரைசலின் அடர்த்தி = 1.2gL-1
12 M HCl -ல் 1 லிட்டர் கரைசலில் 12 மோல் HCl உள்ளது.
தீர்வு:
மோலாலிட்டி = கரைபொருள் மோல்களின் எண்ணிக்கை / கரைப்பானின் நிறை Kg
நீரின் நிறை கணக்கிடுதல்
1 லிட்டர் HCl நிறை = அடர்த்தி × கனஅளவு
= 1.2 gmL-1 × 1000mL = 1200 g
HCl நிறை = HCl மோல்களின் எண்ணிக்கை × HCl மோலார் நிறை
= 12 மோல் × 36.5g மோல்-1
= 438 g மோல்-1
நீரின் நிறை = HCl கரைசலின் எண்ணிக்கை - HCl நிறை
நீரின் நிறை = 1200 - 438 = 762 g
மோலாலிட்டி = 12/ 0.762
= 15.75m
41. 370.28 K வெப்பநிலையில், 0.25m குளுக்கோஸ் கரைசலானது ஏறத்தாழ இரத்தத்திற்கு சமமான சவ்வூடுபரவல் அழுத்தத்தை கொண்டுள்ளது. இரத்தத்தின் சவ்வூடு பரவல் அழுத்தம் என்ன?
தீர்வு:
C = 0.25m
T = 370.8 K
(π)குளுக்கோஸ் = CRT
(π) = 0.25molL-1 × 0.082L atm K-1 mol-1 × 370.28K
= 7.59 atm
42. 500 g நீரில் 7.5 g கிளைசீன் (NH2CH2COOH) கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டியை கணக்கிடுக.
தீர்வு:
மோலாலிட்டி = கரைபொருள் மோல்களின் எண்ணிக்கை / கரைப்பானின் நிறை Kg
கிளைசீனின் மோல்களின் எண்ணிக்கை = கிளைசீனின் நிறை / கிளைசீனின் மோலார் நிறை = 7.5/75 = 0.1
மோலாலிட்டி = 0.1 / 0.5 kg
= 0.2m
43. (i) 100 கிராம் நீரில் 10 கிராம் மெத்தனால்(CH3OH) கரைந்துள்ள கரைசல் (ii) 200 கிராம் நீரில் 20 கிராம் எத்தனால் (C2H5OH) கரைந்துள்ள கரைசல். மேற்கண்டுள்ள கரைசல்களில் குறைவான உறைநிலையை பெற்றுள்ள கரைசல் எது?
விடை
Δ Tf = Kfm ; m = n2/W1(கிகி) ; n2 = W2/M2
i.e Δ Tf α m ; M(CH3OH) = 32;
W(CH3OH) = 10கி ; W1 = 100கி = 0.1கிகி
m(C2H5OH) = 46 ; W(C2H5OH) = 20 கி ;
W1 = 200கி = 0.2கிகி
Δ Tf α 2.174
ஃ மெத்தனால் கரைசலின் உறைநிலைத்தாழ்வு அதிகம் எனவே அக்கரைசல் குறைவான உறை நிலையைக் கொண்டுள்ளது.
44. ஒரு லிட்டர் 10-4 M பொட்டாசியம் சல்பேட் கரைசலில் உள்ள கரைபொருள் துகள்களின் மோல்களின் எண்ணிக்கை யாது?
தீர்வு:
ஃ துகள்களின் எண்ணிக்கை = n.M.NA
n = ஒரு மூலக்கூறிலுள்ள அயனிகளின் எண்ணிக்கை
M = செறிவு
NA = அவோகேட்ரோ எண் = 6.023 × 1023
n = 3 (2K+ & 1 SO2-4 அயனிகள்)
M = 10-4
NA = 6.023 × 1023
ஃ துகள்களின் எண்ணிக்கை = n.M.NA
= 3 × 10-4 × 6.023 × 1023
= 18.069 × 1019
= 1.8069 × 1020 அயனிகள்
45. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், பென்சீனில் மீத்தேன் வாயு கரைதலுக்கு ஹென்றி விதி மாறிலி மதிப்பு 4.2 × 10-5 mm Hg. இந்த வெப்பநிலையில் மீத்தேனின் கரைதிறனை i) 750 mm Hg ii) 840 mm Hg ஆகிய அழுத்தங்களில் கணக்கிடுக.
விடை
(kH) பென்சீன் = 4.2 × 10-5 mm Hg
மீத்தேனின் கரைதிறன் = ?
P = 750mm Hg P = 840mm Hg
ஹென்றி விதிப்படி, P = KH.xகரைசலில்
750 mm Hg = 4.2 × 10-5 mm Kg.xகரைசலில்
⇒ xகரைசலில் = 750/4.2× 10-5
கரைதிறன் = 178.5 × 105 = 1.785 × 107
இதைப்போலவே P = 840 mm Hg
கரைதிறன் = 840/4.2 × 10-5 = 200 × 105
= 2 × 107
46. ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093°C என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1
தீர்வு:
ΔTf = 0.093oC = 0.093K
m = ?
K f = 1.86 K Kg mol-1
ΔTf = K f . m ; m = ΔTf / K f
ஃ m = 0.093K / 1.86 K Kg mol-1 = 0.05 mol Kg-1
= 0.05 m.
47. குறிப்பிட்ட வெப்பநிலையில், தூய பென்சீனின் (C6H6) ஆவி அழுத்தம் 640 mm Hg. 40 கிராம் பென்சீனுடன் 2.2 g ஆவியாகாத கரைபொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் உருவான கரைசலின் ஆவியழுத்தம் 600 mm Hg எனில், கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிடுக.
தீர்வு:
Po = 640 mm Hg (பென்சீன்);
Pகரைசல் = 600 mm Hg
W1 = 40g (பென்சீன்);
W2 = 2.2 g (ஆவியாகாத கரைபொருள்)
M2 = 78g mol-1 (பென்சீன்);
M2 = ?
Po – P / Po = X2 ;
Po – P / Po = n2 / n1 + n2
நீர்த்த கரைசலுக்கு n2 < < n1
M2 = 68.84 g mol-1