கேள்வி பதில்கள், தீர்வுகள் | வாழ்வியல் கணிதம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு கணக்கு - எடுத்துக்காட்டு கணக்குகள், இலாபம், நட்டம், தள்ளுபடி, இதரச் செலவுகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) | 8th Maths : Chapter 4 : Life Mathematics
எடுத்துக்காட்டு 4.6
இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர் ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
துணி துவைக்கும் இயந்திரத்தின் மொத்த அடக்க விலை = அடக்க விலை + இதரச் செலவுகள்
= 16150 + 1350 = ₹17500
விற்பனை விலை = ₹19250
இங்கு, விற்பனை விலை > அடக்க விலை ஆகும். ஆகவே, இங்கு இலாபம் ஏற்படுகிறது.
=10%
எடுத்துக்காட்டு 4.7
ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க.
தீர்வு:
ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் அடக்க விலையை ₹ x என்க.
∴ விற்ற விலை = (5 / 4) x
இலாபம் = வி.வி – அ.வி
எடுத்துக்காட்டு 4.8
16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.
தீர்வு:
ஒவ்வொரு ஸ்ட்ராபெரி பெட்டியின் அடக்க விலையையும் ₹ x என்க.
20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் அடக்க விலை = 20 x
மேலும்,
20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலை = 16 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் அடக்க விலை =16x (தரவு)
இங்கு, வி.வி < அ.வி ஆகும். ஆகவே, நட்டம் ஏற்படுகிறது.
நட்டம் = அ.வி – வி.வி = 20 x – 16x = 4x
எடுத்துக்காட்டு 4.9
மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
தீர்வு:
மிதிவண்டியை விற்ற விலை = ₹4275
நட்டம் = 5%
= ₹ 4500
இப்போது,
அடக்க விலை ₹4500 மற்றும் விரும்பிய இலாபம் = 5%
= 105 × 45 = ₹4725
ஆகவே, 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் அந்த மிதிவண்டியை ₹4725 இக்கு விற்க வேண்டும்.
எடுத்துக்காட்டு 4.10
மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹ 901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க.
தீர்வு :
தள்ளுபடி = குறித்த விலை – விற்ற விலை
= 1060 – 901 = ₹159
∴ தள்ளுபடி % = தள்ளுபடி / குறித்த விலை =
சிந்திக்க
ஒரு கடைக்காரர் தகவல் பலகை ஒன்றை அதன் அடக்க விலையைவிட 15% அதிகமாகக் குறித்து, பிறகு 15% தள்ளுபடி வழங்குகிறார். இந்த பரிவர்த்தனையில், அவர் இலாபம் அடைவாரா அல்லது நட்டம் அடைவாரா? நட்டம்
எடுத்துக்காட்டு 4.11
ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.
தீர்வு :
ஒரு பொருளின் குறித்த விலையை ₹100 என்க.
முதல் தள்ளுபடியான 25% என்பது
முதல் தள்ளுபடிக்குப் பிறகு பொருளின் விலை = 100 – 25 = ₹75
இரண்டாம் தள்ளுபடியான 20% என்பது
இரண்டாம் தள்ளுபடிக்குப் பிறகு பொருளின் விலை = 75 – 15 = ₹60
∴ நிகர விற்பனை விலை = ₹60
கொடுக்கப்பட்ட இரு தொடர் தள்ளுபடிகளுக்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதம் = (100 – 60)% = 40%
குறிப்பு
• ஒரு பொருளுக்கு இரண்டு தொடர் தள்ளுபடிகளாக முறையே a% மற்றும் b% வழங்கப்பட்டால், ஆகும்.
• a%, b% மற்றும் c% ஆகிய மூன்று தொடர் தள்ளுபடிகளுக்கு நிகரான ஒரே தள்ளுபடிச் சதவீதமானது = ஆகும்.
இந்த சூத்திரத்தை எடுத்துக்காட்டு 4.11 இக்குப் பயன்படுத்தி விடையைச் சரிபார்க்கவும்.
எடுத்துக்காட்டு 4.12
வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ₹10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க
தீர்வு :
குறித்த விலையை ₹ x என்க.
= 10502
∴ குறித்த விலை , x = ₹8900
18% சரக்கு மற்றும் சேவை வரி = ₹10502 – ₹8900 = ₹1602
(அல்லது)
எடுத்துக்காட்டு 4.13
ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக.
தீர்வு :
உணவின் விலை = ₹350
5% சரக்கு மற்றும் சேவை வரியானது, மத்திய மற்றும் மாநில அரசுகளால் 2.5% எனச் வீதம் சமமாக பிரித்துக் கொள்ளப்படுகிறது.
∴ மத்திய சரக்கு மற்றும் சேவை வரி = மாநில சரக்கு மற்றும் சேவை வரி = 350 × (2.5/100) = ₹8.75