காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா - தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் (1916-18) | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism
தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் (1916-18)
லோகமான்ய
பாலகங்காதர திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் தலைமையிலான
தன்னாட்சி (1916-1918) இயக்கத்தின்
போது இந்திய தேசிய இயக்கம் புத்துயிரூட்டப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. முதல்
உலகப் போரும், இந்தியா அந்தப் போரில் பங்கேற்றதும் தான்
தன்னாட்சி இயக்கத்துக்கான பின்னணியாகும். 1914ஆம்
ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத
மற்றும் தாராளமய தலைமை பிரிட்டிஷாருக்காக ஆதரவைத் தந்தது. அதற்குப் பதில்
பிரிட்டிஷ் அரசு போருக்குப் பிறகு தன்னாட்சியை இந்தியாவிற்கு வழங்கும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. உலகப் போரின் பல அரங்குகளுக்கு இந்தியத் துருப்புகள்
அனுப்பப்பட்டன. ஆனால் இந்தக் குறிக்கோள்கள் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு எந்தவித
உறுதிப்பாடும் இல்லை . இந்தியாவின் தன்னாட்சிக்கு வழிவகுக்கும் காரணத்துக்கு
உதவாமல் ஆங்கிலேய அரசு ஏமாற்றியதால் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி தரும் புதிய
மக்கள் இயக்கத்துக்கான அழைப்பாக இது உருவெடுத்தது.
• அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ்
பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
• தன்னாட்சிப் பகுதி
(டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா,
கனடா,
தென்னாப்பிரிக்கா
மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராத நிலை
வழங்கப்பட்டது.
• அவர்களின் இலக்குகளை அடைய
வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.
தன்னாட்சி
இயக்கமும் அதனையடுத்து மித தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியவாதிகளின் மறு இணைப்பு
காரணமாக முஸ்லிம்களுடன் புதிய பேச்சுகளுக்கான சாத்தியக்கூறு லக்னோ
ஒப்பந்தத்தின் போது ஏற்பட்டது. லக்னோ ஒப்பந்தத்தின் (1916)
போது
காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம்லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி
வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது. இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை
வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
லக்னோ
ஒப்பந்தம்
சுயராஜ்ஜியத்துக்கான
கோரிக்கையை திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் எழுப்பியது பிரபலமானதைத் தொடர்ந்து
தலைவர்களை தனிமைப்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் அதே பழைய திட்டத்தை
ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது.
1919இல் மாண்டேகு - செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்களை
ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி நோக்கி படிப்படியாக
முன்னேற உறுதி கூறப்பட்டது. இந்திய தேசியவாதிகள் இடையே இது மிகப்பெரிய ஏமாற்றத்தை
ஏற்படுத்தியது. மேலும் ஒரு பேரிடியாக, தன்னிச்சையான
கைது மற்றும் கடும் தண்டனைகளுடன் கூடிய ரௌலட் சட்டத்தை அரசு இயற்றியது.