Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
   Posted On :  05.07.2022 11:20 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை


கற்றலின் நோக்கங்கள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்து கொள்ளுதல்

அணிசேரா இயக்கத்தின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குதல்

நமது வெளியுறவுக் கொள்கையின்படி நிலைகளை ஆய்ந்தறிதல்

வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை விளக்குதல்

உள்நாட்டு கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை அறிதல்

 

அறிமுகம்

வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டுமொத்த தேசியக் கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாகும். நாடுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. சர்வதேச உறவுகளில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது தவிர்க்க இயலாததாகும். வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்: உடன்படிக்கைகள், நிர்வாக ஒப்பந்தங்கள், தூதுவர்களை நியமித்தல், வெளிநாட்டு உதவி, சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவைகள் ஆகும்.

வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது. 1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு (IFS) பயிற்சி அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 சட்டப்பிரிவு 51

அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள்

அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்

நாடுகளிடையே நியாயமான மற்றும் கௌரவமான உறவுகளைப் பேணுதல்

சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளை மதித்தல்

சர்வதேசப் பிரச்சனைகளை நடுவர் மன்றம் மூலம் தீர்க்க ஊக்குவித்தல்


10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : India’s Foreign Policy in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை