லென்சை
உருவாக்குவோர் சமன்பாடு
அனைத்து லென்சுகளும் ஒளி புகும்
ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன. இந்த ஊடகங்கள் வேறுபட்ட ஒளிவிலகல் எண்களைக்
கொண்டவை. லென்சை உருவாக்கும் ஒருவர் லென்சின் வளைவு ஆரம் மற்றும் ஒளிவிலகல் எண்
குறித்து அறிந்திருக்க வேண்டும். லென்சு சமன்பாடானது, குவியத் தொலைவு,
பொருள் மற்றும் பிம்பத்தின் தொலைவு ஆகியவற்றை மட்டுமே
தொடர்புப்படுத்துவதால், லென்சின் வளைவு ஆரம், ஒளிவிலகல் எண் மற்றும் குவியத்தொலைவு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தும்
சமன்பாடு ஒன்று தேவைப்படுகிறது. இத்தேவையை நிறைவேற்று வதற்காக 'லென்சை உருவாக்குவோர் சமன்பாடு’ (Lens Maker’s
Formula) உருவாக்கப்பட்டது. இச்சமன்பாட்டின் படி,
இங்கு µ என்பது லென்சு
செய்யப் பயன்படுத்தப்பட்ட பொருளின் ஒளிவிலகல் எண், R1, R2
என்பவை லென்சின் இரு கோளகப் பரப்புகளின் வளைவு ஆரங்கள் f என்பது குவியத்தொலைவு ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
லென்சு
சமன்பாடு மற்றும் லென்சை உருவாக்குவோர் சமன்பாடு ஆகியவை மெல்லிய லென்சுகளுக்கு மட்டுமே பொருந்தக்
கூடியவை. தடிமனான லென்சுகளுக்கு இவ்விரு சமன்பாடுகளும் சிறிய மாற்றங்கள் செய்து
பயன்படுத்தப்படுகின்றன.