அறிமுகம் | புவியியல் - நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes
புவியியல்
அலகு 1
நிலக்கோளம் – I
புவி அகச்செயல்பாடுகள்
கற்றல் நோக்கங்கள்
❖ புவியின் நான்கு கோளங்களைத் தெரிந்து கொள்ளுதல்
❖ புவியின் உள்கட்டமைப்பை விளக்கமாக அறிதல்
❖ பாறைகளின் வகைகளையும், அதன் சுழற்சியையும் படித்தல்
❖ புவியின் அகச்செயல்பாடுகளை விளக்கமாக அறிதல்
❖ நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்
சூரியக் குடும்பத்தில் புவி தனித்தன்மையுள்ள கோளாகத் திகழ்கிறது. புவி தன்னுள் நான்கு கோளங்களை உள்ளடக்கியதாகி உள்ளது. அவை நிலக்கோளம்,
வளிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகும். இப்பாடத்தில் நாம் புவியின் உள் அமைப்பைப் பற்றி அறிய உள்ளோம். புவி கோளங்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பாடங்களின் வரிசை அமைந்துள்ளது.
புவியின் கட்டமைப்பை அறிந்து நீ வியந்தது உண்டா? அல்லது புவியின் உள்ளே என்ன உள்ளது என்று உனக்குத் தெரியுமா
புவியானது பாறையினால் ஆன பந்து போன்ற அமைப்புடையது.
இதனைப் நிலக்கோளம்
(Uthasphere) எனவும் நீரினால் சூழப்பட்ட பகுதியை நீர்க்கோளம் (hydrosphere) எனவும், காற்றால் சூழப்பட்ட பகுதி வளிக்கோளம்
(Atmazhaa எனவும் அழைக்கப்படுக்கின்றன இம்மூன்று கோளங்களும் சந்திக்கும் இடத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதால் இப்பகுதி உயிர்க்கோளம்
(Biosphere) எனப்படுகிறது.
- ஆர்த்தர் ஹோம்ஸ்