மேயர் தொடர்பு (Meyer's Relation):
µ மோல் அளவுடைய நல்லியல்பு வாயு கொள்கலன் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வாயுவின் பருமன் V, அழுத்தம் P மற்றும் வெப்பநிலை T என்க. மாறாப்பருமனில் வாயுவின் வெப்பநிலை dT அளவு உயர்த்தப்படுகிறது. இங்கு வாயுவால் எவ்வித வேலையும் செய்யப்படவில்லை. எனவே அமைப்பிற்குக் கொடுக்கப்பட்ட வெப்பம் அக ஆற்றலை மட்டுமே அதிகரிக்கும். அக ஆற்றலில் ஏற்பட்ட மாற்றத்தை dU என்க.
CV என்பது பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் எனில் சமன்பாடு (8.20) ஐ பின்வருமாறு எழுதலாம்.
மாறா அழுத்தத்தில் வாயுவை வெப்பப்படுத்தும்போது, அவ்வாயுவின் வெப்பநிலை உயர்வு dT எனவும், அமைப்பிற்குக் கொடுக்கப்பட்ட வெப்பத்தின் அளவு ‘Q’ எனவும், இந்நிகழ்வினால் பருமனில் ஏற்பட்ட மாற்றம் 'dv' எனவும் கொண்டால்
இந்நிகழ்வினால் செய்யப்பட்ட வேலை
ஆனால், வெப்ப இயக்கவியலின் முதல் விதிப்படி
சமன்பாடுகள் (8.21), (8.22) மற்றும் (8.23) இம்மூன்றையும் (8.24) இல் பிரதியிடும் போது,
எனக் கிடைக்கும்.
µ மோல் நல்லியல்பு வாயுவிற்கு நிலைச்சமன்பாட்டை பின்வருமாறு எழுதலாம்.
இங்கு அழுத்தம் மாறாது, எனவே dP = 0, PdV = µRdT
∴ CpdT = CvdT +RdT
இத்தொடர்பிற்கு மேயர் தொடர்பு என்று பெயர்.
மாறா அழுத்தத்தில் நல்லியல்பு வாயுவின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன், பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் R ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமமாகும் என்பதை இத்தொடர்பு நமக்குக் காட்டுகிறது.
மேலும் இத்தொடர்பிலிருந்து, அழுத்தம் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் (CP), பருமன் மாறா மோலார் தன்வெப்ப ஏற்புத்திறனைவிட (CV) எப்போதும் அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.