Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

பைத்தான் - (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary

   Posted On :  18.12.2022 07:20 am

12 வது கணினி அறிவியல் : அலகு 9 : (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

(List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

சிறந்த பதிலைத் தேர்ந்தெடுங்கள்,சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

கணினி அறிவியல் : (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்

 

மதிப்பீடு

 

பகுதி – அ

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

அ) List

ஆ) Tuple

இ) Dictionary

ஈ) Loop

விடை : ஈ) Loop

 

2. Let list 1 = [2, 4, 6, 8, 10), எனில் print(List1 [-2]) ன் விடை  

அ) 10

ஆ) 8

இ) 4

ஈ) 6

விடை : ஆ) 8

 

3. பின்வரும் எந்த செயற்கூறு List-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட  பயன்படுகிறது?

அ) count()

ஆ) find()

இ) len()

ஈ) index()

விடை : இ) len()

 

4. ' If List = [10,20,30,40,50] எனில் List[2]=35 ன் விடை

அ) [35,10,20,30,40,50]

ஆ) [10,20,30,40,50,35]

இ) [10,20,35,40,50]

ஈ) [10,35,30,40,50]

விடை : இ) [10,20,35,40,50]

 

5. If List=[17,23,41,10] எனில் List.append(32)ன் - விடை

அ) [32,17,23,41,101

ஆ) [17,23,41,10,32]

இ) [10,17,23,32,41]

ஈ) [41,32,23,17,101

விடை : ஆ) [17,23,41,10,32]

 

6. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List -ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

அ) append()

ஆ) append_more()

இ) extend()

ஈ) more()

விடை : இ) extend()

 

7. பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன? S=[x**2 for x in range(5)]

print(S)

அ) [0,1,2,4,5]

ஆ) [0,1,4,9,16]

இ) [0,1,4,9,16,25]

ஈ) [1,4,9,16,25]

விடை : ஆ) [0,1,4,9,16]

 

8. பைத்தானில் type() செயற்கூறின் பயன் என்ன?

அ) Tuple உருவாக்க

ஆ) Tuple உள்ள உறுப்புகளின் வகையைக் கண்டறிய

இ) பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

ஈ) பட்டியலை உருவாக்க

விடை: இ) பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

 

9. பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?

அ) List மாற்றம் செய்யலாம்

ஆ) Tuple மாற்றம் செய்ய முடியாது

இ) Append() செயற்கூறு, ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.

ஈ) Extend() செயற்கூறு லிஸ்ட்ல் உறுப்புகளை சேர்க்க Tuples -ல் பயன்படுகிறது.

விடை: ஈ) Extend() செயற்கூறு லிஸ்ட்ல் உறுப்புகளை சேர்க்க Tuples-ல் பயன்படுகிறது

 

10. SetA={3,6,9}, setB={1,3,9}, எனில், பின்வ ரும் நிரலின் வெளியீடு என்ன?

print(setA|setB)

அ) {3,6,9,1,3,9}

ஆ) {3,9}

இ) {1}

ஈ) {1,3,6,9}

விடை : ஈ) {1,3,6,9}

 

11. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

அ) சமச்சீரான வேறுபாடு

ஆ) வேறுபாடு

இ) வெட்டு

ஈ) சேர்ப்பு

விடை: அ) சமச்சீரான வேறுபாடு

 

12. பைத்தான், Dictionary -ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன

அ) =

ஆ) ;

இ) +

ஈ) :

விடை : ஈ) :

 


பகுதி - ஆ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (2 மதிப்பெண்கள்)


1. பைத்தானில் List என்றால் என்ன?

விடை. பைத்தானில் உள்ள List சரத்தைப் போன்றே "வரிசைமுறை தவினம்" ஆகும். இது சதுர அடைப்புக் குறிக்குள் [ ] அடைக்கப்பட்ட மதிப்புகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். List-ல் உள்ள ஒவ்வொரு மதிப்பும் உறுப்பு என்றழைக்கப்படுகிறது.

 

2. List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?

விடை. (i) பைத்தான், List உறுப்புகளுக்கு பின்னோக்கு அல்லது எதிர்மறை, சுட்டெண்களை வழங்குகிறது. இதனால் பைத்தான், சுட்டெண்களை எதிர் வரிசையில் பட்டியலிடுகிறது.

(ii) பைத்தான், List-ன் கடைசி உறுப்பிற்கு -1 முந்தைய உறுப்பிற்கு -2 என்ற சுட்டெண் மதிப்புகளையும் இருத்துகிறது. இதுவே பின்னோக்கு சுட்டு என அழைக்கப்படுகிறது.

 

3. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன ?

List=[2,4,6[1,3,5]]

x=len(List1)

விடை . x = 4

 

4. List -ன் del மற்றும் remove() செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?

விடை. del கூற்று தெரிந்த உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. ஆனால், remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List-லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது. del கூற்று முழு List-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது.

 

5. ஒரு Tuples n எண்ணிக்கை உறுப்புகளுடன் உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

விடை . Tuples_Name=Tuples ([List elements])

 

6. பைத்தானில் set என்றால் என்ன?  

விடை. (i) பைத்தானில், Set என்பது தரவின தொகுப்பின் மற்றொரு வகையாகும். Set என்பது மாறக்கூடிய மற்றும் நகல்கள் இல்லாத வரிசைப்படுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பாகும்.

(ii) அதாவது, Set-ல் உள்ள உறுப்புகள் மீண்டும் இடம்பெற முடியாது. இந்த சிறப்பியல்பு உறுப்பு சோதனையை சேர்க்கவும் மற்றும் நகல் உறுப்புகளை நீக்கவும் பயன்படுகிறது.

 


பகுதி - இ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (3 மதிப்பெண்கள்)

 

1. List -ஐவிட மேலான Tuples -ன் நன்மைகளை எழுதுக.

விடை. (i) List -ன் உறுப்புகளை மாற்றலாம் ஆனால் Tuples-ன் உறுப்புகளை மாற்ற முடியாது.

இதுவே List மற்றும் Tuples-க்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடு ஆகும்.

(ii) List-ன் உறுப்புகள் சதுர அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால்,

(iii) Tuples-ன் மடக்குச் செயல் List-ஐ காட்டிலும் விரைவானது.

 

2. Sort() பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

விடை. sort () - List -ல் உள்ள உறுப்புகளை வரிசையாக்கம் செய்கிறது. இரண்டு செயலுருபுகளும் கட்டாயமில்லாதவை

(i) reverse ஐ True என பொருத்தினால் இறங்கு வரிசையில் லிஸ்ட் வரிசையாக்கமாகும்.

(ii) ஏறுவரிசை தானமைவு வரிசையாகமாகும்.

(iii) Key=myFunc; "myFunc" - வரிசையாக்க வரண்முறையைக் குறிப்பிடும் பயனர் வரையறுத்த செயற்கூறின் பெயர்.

தொடரியல் :

List.sort (reverse=True|False, key=myFunc

எடுத்துக்காட்டு:

MyList=('Thilothamma', 'Tharani', 'Anitha', 'SaiSree', 'Lavanya']

MyList.sort( )

print(MyList)

MyList.sort(reverse=True)

print(MyList)

வெளியீடு:

['Anitha', 'Lavanya', 'SaiSree', 'Tharani', 'Thilothamma']

['Thilothamma', 'Tharani', 'SaiSree', 'Lavanya', 'Anitha']

 

3. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

list= [2**x for x in range(5)]

print(list)

விடை. வெளிப்பாடு : [1,2,4,8,16]

 

4. del மற்றும் clear() செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. பைத்தான் Dictionary, del சிறப்புச் சொல் ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்குவதற்கு பயன்படுகிறது. clear( ) செயற்கூறு Dictionary-ன் அனைத்து உறுப்புகளையும் நீக்குவதற்கு பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு :

Dict = {'Roll No' : 12001, 'SName' : 'Meena', 'Mark1' : 98, 'Marl2' : 86}

print("Dictionary elements before deletion: \n", Dict)

del Dict('Mark1'] # குறிப்பிட்ட உறுப்பை நீக்குதல்

print("Dictionary elements after deletion of a element: \n", Dict)

Dict.clear() # அனைத்து உறுப்புகளையும் நீக்குதல்

print("Dictionary after deletion of all elements: \n", Dict)

del Dict

print(Dict) # முழு Dictionary ஐ நீக்குதல்

 

5. பைத்தானின் set செயல்பாடுகளை பட்டியலிடுக.

விடை. கணிதத்தில் கற்ற Set செயற்பாடுகள் ஆகிய ஒட்டு (Union), வெட்டு (intersection)வேறுபாடு (difference) சமச்சீரான வேறுபாடு (Symmetric difference), போன்றவற்றை பைத்தானிலும் பயன்படுத்தலாம்.

 

6. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

விடை. (i) List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும். ஆனால், Dictionary ஒரு உறுப்பை (திறவுகோல்) மற்றொரு உறுப்புடன் (மதிப்பு) பொருத்தப் பயன்படும் தரவு அமைப்பாகும்.

(ii) List-ன் சுட்டெண்கள் குறிப்பிட்ட உறுப்பை அணுகுவதற்குப் பயன்படுகின்றன. ஆனால், Dictionary-ல் திறவுகோல் சுட்டெண்ணைக் குறிக்கிறது. ஒரு சரத்தின் எண்ணாகவும், திறவுகோல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

(iii) List-ன் மதிப்பை பார்த்துக் கொள்ளப் பயன்படுகிறது. Dictionary ஒரு மதிப்பை எடுத்துக் கொண்டு மற்றொரு மதிப்பை பார்த்துக் கொள்ள பயன்படுகிறது.



பகுதி - ஈ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5 மதிப்பெண்கள்)


1. List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. List -ல் உறுப்புகளை சேர்த்தல் :

(i) பைத்தானில், append () செயற்கூறு ஒரு உறுப்பையும் extend() செயற்கூறு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஏற்கனவே உள்ள List-ல் சேர்க்க பயன்படுகின்றது.

தொடரியல்:

List.append (element to be added)

List..extend ( elements to be added)

(ii) extend( ) செயற்கூறில், பல உறுப்புகளை சதுர அடைப்புக் குறிக்குள் செயற்கூறின் செயலுருபுகளைப் போலவே குறிப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டு :

>>>MyList=[34, 45, 48]

>>> MyList.append(90)

>>>print(MyList)

[34, 45, 48, 90]

(iii) மேலே உள்ள எடுத்துக்காட்டில், My List என்பது மூன்று உறுப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. >>> MyList. append(90) என்ற கூற்றின் மூலம் 90 என்ற கூடுதல் மதிப்பு ஏற்கனவே உள்ள List-ல் கடைசி உறுப்புகளை சேர்க்கப்படுகிறது. Print கூற்று MyList என்ற லிஸ்ட்-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.

எடுத்துக்காட்டு :

>>> MyList.extend ([71, 32, 29])

>>> print(MyList) |

[34, 45, 48, 90, 71, 32, 29]

(iv) மேலே உள்ள குறிமுறையில், extend( ) செயற்கூறு பல உறுப்புகளை சேர்ப்பதற்கு பயன்படுகிறது. Print கூற்று, கூடுதல் உறுப்புகள் சேர்க்கப்பட்ட பிறகு List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.

List உறுப்புகளை செருகுதல் :

(i) பைத்தானில் உள்ள append() ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது. ஆனால், இது Listன் இறுதியில் உறுப்பை சேர்க்கிறது.  

(ii) நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் ஒரு உறுப்பை சேர்க்க விரும்பினால், insert ( ) செயற்கூறை பயன்படுத்த வேண்டும். insert( ) செயற்கூறு, List-ன் எந்தவொரு இடத்திலும் ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.

தொடரியல் : List.insert (position index, element)

எடுத்துக்காட்டு :

>>> MyList=[34,98,47,'Kannan',

'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan')

>>>print(MyList)

[34,98,47,'Kannan','Gowrisankar', 'Lenin', 'Sreenivasan')

>>> MyList.insert(3, 'Ramakrishnan')

>>> print(MyList)

[34, 98, 47, 'Ramakrishnan', 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']

(iii) மேலே உள்ள எடுத்துக்காட்டில், insert( ) செயற்கூறு, 'Ramakrishnan' என்ற புதிய உறுப்பை மூன்றாவது சுட்டெண்ணில் அதாவது நான்காவது இடத்தில் சேர்க்கிறது. புதிய உறுப்பை ஏற்கனவே உள்ள உறுப்புகளின் இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கும் போது, ஏற்கனவே உள்ள உறுப்புகள் வலது பக்கமாக ஒரு இடம் நகர்த்தப்படும்.

 

2. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. range( ) என்பது பைத்தானில் தொடர் மதிப்புகளை உருவாக்கப் பயன்படும் செயற்கூறாகும். range () செயற்கூறை பயன்படுத்தி நீங்கள் தொடர் மதிப்புகளுடன் List-ஐ உருவாக்கலாம். range( ) செயற்கூறு மூன்று செயலுருபுகளைக் கொண்டுள்ளது.

range ( ) செயற்கூறின் தொடரியல்:

range (start value, end value, step value)

இங்கு,

(i) start value : தொடரின் தொடக்க மதிப்பு. சுழியம் தானமைவு தொடக்க மதிப்பாகும்.

(ii) end value : தொடரின் உச்ச வரம்பு. பைத்தான் இறுதி மதிப்பை உச்ச வரம்பு-1 என எடுத்துக் கொள்கிறது.

(iii) step value : இது ஒரு விருப்ப செயலுருபு (கொடுக்க வேண்டியது கட்டாயமில்லை) இது வெவ்வேறு இடைவெளிகளில் மதிப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு : 10 வரை உள்ள முழு எண்களை உருவாக்குதல் :

for x in range (1,11):

print(x)

வெளியீடு :

1

2

3

4

5

6

7

8

9

10

எடுத்துக்காட்டு : முதல் 10 இரட்டைப்படை எண்களை உருவாக்குதல் :

for x in range (2,11,2):

print(x)

வெளியீடு :

2

4

6

8

10

தொடர் மதிப்புகளுடன் லிஸ்ட்-ஐ உருவாக்குதல் :

(i) range( ) செயற்கூறை பயன்படுத்தி நீங்கள் தொடர் மதிப்புகளுடன் கூடிய லிஸ்ட்-ஐ உருவாக்கலாம். range( ) செயற்கூறின் விடையை லிஸ்ட் ஆக மாற்றுவதற்கு, List( ) செயற்கூறு பயன்படுகிறது. List( ) செயற்கூறு range( ) ன் விடையை லிஸ்ட் ஆக உருவாக்குகிறது.

(ii) தொடரியல்:

List_Varibale=List ( range ( ) )

(iii) எடுத்துக்காட்டு :

>>> Even_List= List(range(2,11,2))

>>>print(Even List)

[2, 4, 6, 8, 10]

(iv) மேலே உள்ள குறிமுறையில், List( ) செயற்கூறு range( ) ன் விடையை Even_ List என்ற List உறுப்புகளாக எடுத்துக் கொள்கிறது. எனவே, Even_List என்ற List முதல் ஐந்து இரட்டைப்படை எண்களை உறுப்புகளாக பெற்றிருக்கும்.

(v) இதுபோன்று, எந்த தொடர் எண்களையும் range( ) பயன்படுத்தி உருவாக்கலாம். பின்வரும் எடுத்துக்காட்டு முதல் 10 இயல் எண்களின் 2ன் அடுக்கங்களுடன் கூடிய List-ஐ உருவாக்குதலை விளக்குகிறது.

(vi) எடுத்துக்காட்டு

squares = [ ]

for x in range(1,11):

s=x ** 2

squares.append(s)

print (squares)

(vii) மேலே உள்ள நிரலில், "squares" என்ற பெயருடைய ஒரு வெற்று லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர், for மடக்கு 1 முதல் 10 இயல் எண்க ளை range( ) செயற்கூறை பயன்படுத்தி உருவாக்குகிறது. மடக்கின் உள்ளே , xன் தற்போதைய மதிப்பு, 2-ன் அடுக்கேற்றத்தால் அதிகப்படுத்தப்பட்ட பின்னர் S என்ற மாறியில் சேமிக்கப்படுகிறது. இறுதியாக, நிரல் பின்வரும் மதிப்புகளை விடையாகக் காண்பிக்கிறது.

வெளியீடு :

[1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100]

 

3. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை. (i) பைத்தானில், ஒரு Tuples-ஐ மற்றொரு Tuples-க்குள் வரையறை செய்வதை பின்னலான Tuples என்கிறோம்.

(ii) பின்னலான Tuples-ல் ஒவ்வொரு Tuples-ல் ஒரு உறுப்பாக கருதப்படுகிறது. for மடக்கு பின்ன லான Tuples-ன் அனைத்து உறுப்புகளை அணுகுவதற்கு பயன்படுகிறது.

(iii) எடுத்துக்காட்டு

Toppers = (("Vinodini", "XII-F", 98.7),

("Soundarya", "XII-H", 97.5),

("Tharani", "XII-F", 95.3), ("Saisri", "XII-G", 93.8))

for i in Toppers:

print(i)

(iv) வெளியீடு :

('Vinodini', 'XII-F', 98.7)

('Soundarya', 'XII-H', 97.5)

('Tharani', 'XII-F', 95.3)

('Saisri', 'XII-G', 93.8)

 

4. பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

விடை. கணிதத்தில் கற்ற Set செயற்பாடுகள் ஆகிய ஒட்டு (Union), வெட்டு (intersection) வேறுபாடு (difference) சமச்சீரான வேறுபாடு (Symmetric difference), போன்றவற்றை பைத்தானிலும் பயன்படுத்தலாம்.

ஒட்டு (Union): இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Set-களின் அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கும்.


(i) பைத்தானில் I என்ற செயற்குறி இரண்டு Set களின் ஒட்டை உருவாக்கப்பயன்படுகிறது. Union செயற்கூறும் பைத்தானில் இரண்டு Set. களை இணைக்கப் பயன்படுகிறது.

(ii) எடுத்துக்காட்டு : ஒட்டு (Union) செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Set களை இணைப்பதற்கான நிரல்

set_A={2,4,6,8}

set_B={'A', 'B', 'C', 'D'}

U_set=set_Aset_B

print(U_set)

வெளியீடு

{2, 4, 6, 8, 'A', 'D', 'C', 'B'}

வெட்டு (intersection) : இது இரண்டு Setகளின் பொதுவான உறுப்புகளை உள்ளடக்கியது.


(i) பைத்தானில் & செயற்குறி இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது. வெட்டு (intersection()) செயற்கூறும் பைத்தானில் இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு : வெட்டு intersection() செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Setகளை வெட்டுவதற்கான நிரல்

set_A={'A', 2, 4, 'D'}

set_B={'A', 'B', 'C', 'D'}

print(set_A & set_B)

வெளியீடு : {'A', 'D'}

வேறுபாடு Difference: இது முதல்Set(A)ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது. இது இரண்டாவது Set-ஐ தவிர்க்கிறது.


(i) பைத்தானில் -(minus) செயற்குறி Set செயற்பாட்டின் வேறுபாட்டைக் கண்டறிய பயன்படுகிறது. difference() செயற்கூறும் வேறுபாட்டு செயற்பாட்டிற்காக பயன்படுகிறது.

(ii) எடுத்துக்காட்டு : செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு setகளின் வேற்றுமைக்கான நிரல்

set_A={'A', 2, 4, 'D'}

set_B={'A', 'B', 'C', 'D'}

print(set_A - set_B)

வெளியீடு : {2, 4}

சமச்சீரான வேறுபாடு (Symmetric difference): இது இரண்டு Set-ல் உள்ள பொதுவான உறுப்புகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.

 

(i) Caret(Λ) செயற்குறி பைத்தானில் சமச்சீரான வேறுபாட்டை கண்டறிய பயன்படுகிறது. Symmetric difference() செயற்கூறும் அதே செயலை செய்ய பயன்படுகிறது.

(ii) எடுத்துக்காட்டு : Caret (7) செயற்குறியைப் பயன்படுத்தி சமச்சீரான வேறுபாட்டை கண்டறியும் நிரல்.

set_A={'A', 2, 4, 'D'}

set B={'A', 'B', 'C', 'D'}

print(set_A ^ set_B)

வெளியீடு : {2, 4, 'B', 'C'}

 


செய்முறைப் பயிற்சி


1. List-ல் இருந்து நகர்த்துவதற்கான நிரலை எழுதுக.

விடை . mylist = [1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5]

r=[ ] | for i in mylist: |

if i not in r:

r. append (i)

print (r)

 

2. Tuples-ல் இருந்து மிகப் பெரிய மதிப்பை அச்சிடும் நிரலை எழுதுக.

விடை . tuple 1 = (5, 17, 15, 20, 7, 3)

print (“Maximum value”, max (tuple 1))

 

3. While மடக்கைப் பயன்படுத்தி Tuples-ல் உள்ள அனைத்து எண்களின் கூட்டுத்தொகை கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . li = [15, 25, 17]

s=0

i=0

while i< len (i):

s= s + li[i]  

i+=1

print (s)

 

4. List உள்ள அனைத்து இரட்டைப்படை எண்களின் கூட்டுத்தொகை கண்டறியும் நிரலை எழுதுக.

விடை . list = [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10]

e=0

for i in list:

ifi%2==0:|

e=e+i

print (“Sum of even number”, e)

 

5. மடக்கைப் பயன்படுத்தி List-ஐ தலைகீழாக மாற்றுவதற்கான நிரலை எழுதுக.

விடை . list = [1, 2, 3, 4, 5]

i=-1

while i>=-5:

print (list [i])

i=i+- 1

 

6. List ஒரு மதிப்பை குறிப்பிட்ட இடத்தில் செருகுவதற்கான நிரலை எழுதுக.

விடை . list = [1, 2, 4, 5]

list insert (2, 3)

print (list)

 

7. 3 அல்லது 6 ஆல் வகுபடக்கூடிய, 1 முதல் 50 எண்களின் List-ஐ உருவாக்கும் நிரலை எழுதுக.

விடை : a = [ ]

for i in range (1,51):

if i%3 == 0 or i% 6==0

(a) append (i)

print (a)

 

8. 1 முதல் 20 தொடர் எண்களைக் கொண்ட List-ஐ உருவாக்குவதற்கான நிரலை எழுதுக. பின்னர் 3 ஆல் வகுபடக்கூடிய அனைத்து எண்களையும் லிஸ்டில் இருந்து நீக்குக.

விடை . a=[ ]

for x in range (1, 21):

(a) append (i)

for n, i enumerate (a):

if (i% 3==0):

del a [n]

print (a)

 

9. List ஒரு மதிப்பு எத்தனை முறை தோன்றுகிறது என்பதை கணக்கிடும் நிரலை எழுதுக. மடக்கை பயன்படுத்தவும்.

விடை . list = [8, 6, 8, 10, 8, 20, 10, 8, 8]

x = 8

x = li . count (x)

print (x)

 

10. Dictionary உள்ள அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மதிப்பை அச்சிடும் நிரலை எழுதுக.

விடை . dict = {'a' : 10, 'b' : 20, 'c' : 5}

v= dict . values ()

print (“Maximum = '', max (v))

print (“Minimum=', min (v))

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 9 : Python Modularity and OOPS : Lists, Tuples, Sets And Dictionary : Python Lists, Tuples, Sets And Dictionary : Book Back Questions and Answers Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 9 : (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் : (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 9 : (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள்